`உடனடி கடன்` என Call செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்! நீங்கள் ஏமாற்றுப்படுவீர்கள்
உடனடியாக உங்களுக்கு கடன் வழங்கப்படும் என்ற பெயரில் பெரும் மோசடி நடந்து வருகிறது. உடனடி கடன்` என்ற பெயரில், இப்போது பயன்பாட்டின் மூலம் மோசடி நடந்து வருகிறது.
புது தில்லி: பணம் அனைவரும் தேவையானது. அதுவும் கொரோனா (COVID-19) காலத்தில் பணத்தின் தேவை அதிகமாகவே உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் கடனளிப்பவரின் ஆதரவை பலர் நாடுகிறார்கள். அவர்களுக்கு உடனடி ஆதரவு அளிக்க "உடனடி கடன் கிடைக்கும்" என கால் (Loan Fraud Call) செய்து ஏமாற்றும் கும்பல் முதலிடத்தில் உள்ளனர். இதற்குக் காரணம், அவர்கள் உடனடி கடனைப் பற்றி பேசுவது மட்டுமல்லாமல், அதிக ஆவணங்கள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறுகிறார்கள்.
கொரோனா காலத்தில் வேலையின்மை காலத்தில், மக்களின் பொருளாதார நெருக்கடியும் அதிகரித்தது. இத்தகைய சூழ்நிலையில், பலர் வேலை கிடைக்காததால், கடன் வாங்கலாம் (Loan Apply) என முடிவு செய்தனர். ஆனால் அவர்களுக்கு அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது. உடனடி கடன் என்ற பெயரில் கையில் எஞ்சியிருந்த பணமும் காலியானது.
ALSO READ | இந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்
உடனடி கடன் விஷயத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்:
உடனடி கடன் கிடைக்கும் என யாராவது கால் பண்ணினால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடனடி கடன் (Instant Loan) என்ற பெயரில், மிகப்பெரிய மோசடி நடந்து வருகிறது. இந்த மோசத் கும்பல் அதிக ஆவணங்கள் கேட்க மாட்டார்கள் அல்லது ஒரு ஒரே ஆவணத்தை காட்டினால் போதும் கடன் கிடைக்கும் என்று உங்களுக்குச் சொல்வார்கள். நீங்களும் கடன் வாங்குவது எளிதாக உள்ளது என நினைத்து கடன் கேட்டால், அவர்களும் (மோசடி கும்பல்) கடன் கண்டிப்பாக கிடைக்கும் எனக்கூறி, முதலில் ஃபைல் அல்லது சர்வீஸ் சார்ச் பணம் கட்ட வேண்டும் என சொல்வார்கள். அதாவது நீங்கள் ஐம்பதாயிரம் கடன் கேட்டால், உங்களிடம் முன்கூட்டியே ரூபாய் 4000 செலுத்த வேண்டும் என ஆசை காட்டுவார்கள். நீங்களும் 4000 கட்டினால் 50,000 ரூபாய் கிடைக்கிறது என நினைத்து பணத்தை கட்டினால், அதன் பிறகு அந்த மோசடி கும்பல் உங்களை தொடர்புக்கொள்ள மாட்டார்கள். நீங்களும் ஏமாற்றுப்படுவீர்கள்.
ALSO READ | Debit Card-ல் கிடைக்கும் pre approved loans: இப்படி apply செய்து பயன் பெறலாம்!!
இப்போது Loan செயலில் மூலம் ஏமாற்றுப்படுகிறது:
"உடனடி கடன்" என்ற பெயரில், இப்போது பயன்பாட்டின் மூலம் மோசடி நடந்து வருகிறது. கடன் தேவைப்படும் நபர்களிடம், சில மொபைல் செயலியை (Loan Apps) உங்கள் போனில் பதிவிறக்கம் செய்ய செல்வார்கள், நீங்கள் அப்படி செய்யும்பட்சத்தில், ஏமாற்றுபடுவீர்கள். தற்போது "உடனடி கடன்" என்ற பெயரில் ஏமாற்றும் கும்பல் எண்ணிக்கை நிறைய அதிகரித்துள்ளது. இந்த கும்பல்
முன்கூட்டியே எந்த கட்டணமும் கிடையது:
உண்மையாக கடன் வழங்கும் வங்கி மற்றும் நிதிநிறுவனங்கள் முன்கூட்டியே எந்த கட்டணத்தையும் வசூலிக்காது. செயலாக்கக் கட்டணத்திற்கான கோரிக்கை இருந்தால், அது முதலில் செலுத்த தேவையில்லை. உங்கள் கடன் தொகையிலிருந்து கழிக்கப்படுகிறது. சரியான கடன் வழங்குநர்களின் தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் முகவரி ஆகியவை வழங்கப்படுகின்றன, அதன்மூலம் அவர்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க முடியும்.
ALSO READ | 4% வட்டிக்கு கல்வி கடன், இந்த வங்கி இந்த திட்டத்தை அறிமுகம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR