Ration Card: இந்திய குடிமக்களின் முக்கியமான அடையாள ஆவணமாக ரேஷன் கார்டு இருந்து வருகிறது.  தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் ரேஷன் கார்டுகள் மூலம் தகுதியான குடும்பங்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது.  ரேஷன் கார்டு வைத்திருக்கும் சிலருக்கு அரசு இலவசமாக சில உணவு தானியங்களை வழங்கி வருகிறது.  அரசின் இலவச ரேஷன் திட்டத்தை பெற்று வருபவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது.  அந்த முக்கியமான செய்தி என்னவென்றால் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது தான்.  ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கோரி மத்திய அரசு தொடர்ந்து மக்களை வலியுறுத்தி வருகிறது, ஆனால் இதுவரை கோடிக்கணக்கான ரேஷன் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை.  உங்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால், ரேஷன் கார்டு அரசால் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு-ஆதார் கார்டு இணைப்பு செயலை மேற்கொள்வதற்கான காலக்கெடு மார்ச் 31, 2023 என்று கூறப்பட்டு இருந்த நிலையில், தற்போது இந்த காலக்கெடு ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லும் படிக்க | கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ரயில் டிக்கெட்டில் சலுகை... முழு விவரம் இதோ!


ஜூன் 30, 2023-க்குள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால், உங்களின் ரேஷன் கார்டு தானாகவே ரத்து செய்யப்பட்டு, ஜூலை 1 முதல் ரேஷனில் கிடைக்கும் இலவச கோதுமை மற்றும் அரிசி போன்ற உணவு தானியங்கள் உங்களுக்கு கிடைக்காது.  ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டுவிட்டால் பல  பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.  பாஸ்போர்ட் மற்றும் பான் கார்டு தவிர, ரேஷன் கார்டை அடையாள மற்றும் முகவரி சான்றாகப் பயன்படுத்தி கொள்ளலாம்.  ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகளைப் பெறுவதை அரசு தடுக்க முடியும்.  ரேஷன் கார்டு மூலமாக அதிக வருமான வரம்பு காரணமாக ரேஷன் பெற தகுதியற்றவர்கள் போன்ற நபர்களை அடையாளம் காண முடியும்.  மேலும் இதன் மூலமாக தகுதியானவர்கள் மட்டுமே மானிய விலையில் எரிவாயு அல்லது ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ள முடியும்.  ரேஷன் கார்டு-ஆதார் இரண்டையும் இணைப்பது போலி ரேஷன் கார்டுகளின் புழக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும்.  


ஆன்லைனில் ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான செயல்முறை:


- பொது விநியோக அமைப்பு (பிடிஎஸ்) போர்ட்டலின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்.


- ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.


- அதன் பிறகு தொடரவும் என்கிற டேப்பில் கிளிக் செய்யவேண்டும்.


- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.


- ஓடிபி-ஐ உள்ளிட்டு, ரேஷன் கார்டு-ஆதார் அட்டை இணைப்பைக் கிளிக் செய்யவேண்டும்.


ஆஃப்லைனில் ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான செயல்முறை:


- அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையின் போட்டோஸ்டாட்டுடன் ரேஷன் கார்டின் போட்டோஸ்டாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.


- உங்கள் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்படவில்லை என்றால், வங்கி பாஸ்புக்கின் போட்டோஸ்டாட்டையும் எடுத்துக் கொள்ளுங்கள்.


- அதன் பிறகு, குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை எடுத்து ரேஷன் அலுவலகம் அல்லது பொது விநியோக அமைப்பு (பிடிஎஸ்) அல்லது ரேஷன் கடையில் சமர்ப்பிக்க வேண்டும்.


- ஆதார் தரவுத்தளத்திற்கு அந்த தகவலை சரிபார்க்க, சென்சாரில் கைரேகை ஐடியை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள்.


- ஆவணங்களை சரிபார்த்த பிறகு, அதன் நிலை குறித்து எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.


- சம்பந்தப்பட்ட அதிகாரி உங்கள் ஆவணங்களுடன் அடுத்த செயல்முறையை முடிப்பார், அதன் பிறகு ரேஷன் கார்டு மற்றும் ஆதார் இணைக்கப்பட்டது குறித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும்.


மேலும் படிக்க | Old Pension Scheme முக்கிய அப்டேட்: உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ