Amazon அள்ளித் தருகிறது ஒரு லட்சம் வேலை வாய்ப்பு..!!!
கொரோனா காரணமாக ஆன்லைன் விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 1,00,000 புதிய வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது.
தினம் தினம் கொரோனா (Corona) தொற்று அதிகரித்து வரும் நிலையில், பலர் வீட்டை விட்டு வெளியே செல்ல அஞ்சுகின்றனர். எலக்ட்ரானிக்ஸ் முதல் பலசரக்கு வரை அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்கின்றனர்.
இதன் காரணமாக ஆன்லைன் விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் (Amazon) 1,00,000 புதிய வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது.
தற்காலிக மற்றும் நிரந்தர பணிகளில் புதிய நியமனங்கள் செய்யப்படும் என்று அமேசான் (Amazon) நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஊழியர்கள் ஆர்டர்களை பேக்கிங் செய்தல், டெலிவரி செய்தல் போன்ற வேலையில் அமர்த்தப்படுவார்கள். இந்த நியமனங்கள் விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் நியம்னங்கள் போல் இது இருக்காது என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆன்லைன் நிறுவன வணிகம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் சாதனை அளவாக வருவாய் ஈட்டியுள்ளது. கொரோனோ வைரஸ் தொற்றுநோய்களின் போது, மக்கள் அனைத்து விதமான பொருட்களையும் ஆன்லைனில் வாங்க விரும்புகிறார்கள்.
ஆர்டர்களை நிறைவேற்ற இந்த ஆண்டு ஏற்கனவே 1,75,000 பேரை வேலைக்கு அமர்த்துவதாக அறிவித்திருந்தது. கடந்த வாரம், நிறுவனம் தன்னிடம் 33,000 கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்ப வேலைகள் காலியாக இருப்பதாகக் கூறியது. நிறுவனம் இப்போது புதிதாக 100 சேமிப்பு கிடங்குகள், பேக்கேஜ்களை ஒழுங்குபடுத்தும் மையங்கள் மற்றும் பிற இடங்களில் வேலைக்கு ஆள் தேவை என்று கூறியுள்ளது.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
மேலும் படிக்க | மாதம் ₹70,000 வரை சம்பாதிக்க Amazon வழங்கும் அற்புத வாய்ப்பு..!!!