மாதம் ₹70,000 வரை சம்பாதிக்க Amazon வழங்கும் அற்புத வாய்ப்பு..!!!

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசானில் இணைந்து, எந்தவொரு நபரும் குறைந்த நேர வேலையில் அதிக பணம் சம்பாதிக்க முடியும். 

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 7, 2020, 08:35 PM IST
மாதம் ₹70,000 வரை சம்பாதிக்க Amazon  வழங்கும் அற்புத வாய்ப்பு..!!!

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசானில் இணைந்து, எந்தவொரு நபரும் குறைந்த நேர வேலையில் அதிக பணம் சம்பாதிக்க முடியும். 

கொரோனா காலத்தில் பலர் வேலை இழந்து வரும் நிலையில், அமேசான் நிறுவனம் வேலையற்றவர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. 

அமேசானில், டெலிவரி பாய் ஆக பணி செய்து, பெரும் பணம் ஈட்ட இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். நீங்கள் இதை ஒரு முழுநேர வேலையாக அல்லது பகுதி நேர வேலையயாகவும்  செய்யலாம். அமேசான் வழங்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மாணவர்களும் பணம் சம்பாதிக்கலாம். 

அமேசான், காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பொருட்களை டெலிவரி செய்கிறது. அமேசானில்  ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் மில்லியன் கணக்கான  ஆர்டர்களை பெறுகிறது. ஒரு டெலிவரி பாய் ஒரு நாளில் சுமார் 100 முதல் 150 ஆர்டர்களை வழங்க வேண்டும். இந்த டெலிவரி அமேசான் மையத்திலிருந்து சுமார் 10–15 கி.மீ பரப்பளவில் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார்,  100-150 பேக்கேஜ்களை  4 மணி நேரத்தில் டெலிவரி செய்வதாக அமேசான் டெலிவரி பாய்ஸ் கூறுகிறார்கள்.

இதற்கு தேவையான ஆவணங்கள் என்ன ?

நீங்கள் பள்ளி அல்லது கல்லூரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாகும். டெலிவரிக்கு உங்களிடம் பைக் அல்லது ஸ்கூட்டர் இருக்க வேண்டும். பைக் அல்லது ஸ்கூட்டரின் காப்பீடு எடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் படிக்க | தொழில் தொடங்க திட்டமா.. 59 நிமிடங்களில் SBI மூலம் முத்ரா கடன் பெறும் எளிய வழி..!!!

இதற்கு விண்ணப்பிக்கும் முறை 

அமேசானில் டெலிவரி பாய் வேலை பெற உங்கள் மின்னஞ்சல் ஐடி மூலம் பதிவு செய்யலாம். நீங்கள் டெலிவரி பாய் வேலை செய்ய விரும்பினால், அமேசானின் வலைதளமான https://logistics.amazon.in/applynow இல் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இது தவிர, அமேசானின் எந்த மையத்திற்கும் சென்றும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த வழியில் நீங்கள் ஆயிரக்கணக்கான சம்பாதிக்க முடியும்

அமேசான் டெலிவரி பாயாக பணியாற்றி ஏராளமாக சம்பாதிக்கலாம். டெலிவரி செய்ய உங்கள் வாகனத்தை பயன்படுத்த வேண்டும். பெட்ரோல் செலவும் உங்களுடையது. ஒரு பேக்கேஜ் டெலிவரி 15 முதல் 20 ரூபாய் வரை கிடைக்கும். ஒரு நபர் தினமும் 100 பேக்கேஜ்களை டெலிவரி செய்தால், அவர் ஒரு மாதத்திற்கு 60000-70000 ரூபாயை எளிதாக சம்பாதிக்க முடியும்.

மேலும் படிக்க | தங்கம், வெள்ளி விலை நிலவரம்: தொடர்ச்சியாக குறைந்து வந்த விலை, தற்போது அதிகரித்து வருகிறது..!!

பிறகென்ன, இன்றே விண்ணப்பித்து, வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.