அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Amazon செயற்கை நுண்ணறிவு சார்ந்த எக்கோ ஸ்பீக்கர்களின் (Echo speakers) புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. 4,499 ரூபாய் முதல் 9,999 ரூபாய் என குறைந்த விலையில் செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்பீக்கர்கள் இளைஞர்களை கவரும் என்பது நிச்சயம். நிறுவனம், உலகளாவிய மெய்நிகர் நிகழ்வில் (virtual event) புதிய மின்னணு சில்லுகளைப் (electronic chips) பயன்படுத்தி அலெக்சா சாதனங்களின் (Alexa devices) குரல் பதிலை நூற்றுக்கணக்கான மில்லி விநாடிகள் குறைத்ததாகக் கூறியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"அலெக்ஸா மறுமொழி நேரத்திலிருந்து 100 மில்லி விநாடிகளை குறைக்க எங்கள் குழு மிகவும் கடினமாக உழைத்தது. அவர்கள் ஒரு புதிய AZ1 நியூரல் எட்ஜ் செயலியைக் (AZ1 neural edge processor) கண்டுபிடித்தனர். இது ஒரு புதிய சிலிக்கான் தொகுதி, இது இயந்திர கற்றல் வழிமுறைகளை சுலபமாக இயக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது" என்று அமேசான் சாதனங்கள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர் பராக் குப்தா கூறினார்.


"நாங்கள் Az1இல் இயங்கும் புதிய neural பேச்சு அங்கீகார மாதிரிகளையும் உருவாக்கியுள்ளோம், அவை ஒன்றாக இணைந்து, எக்கோ டாட்டில் (Echo DoT) பேச்சு பதில்களை விரைவாக உருவாக்குகின்றன" என்று அவர் கூறினார்.


Read Also | நீயா நானா? TikTok மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடுகளுக்கு ByteDance சவால்


இதற்கான முன்பதிவை நிறுவனம் தொடங்கிவிட்டது. 4,499 ரூபாயில் Echo DoT, கடிகாரத்துடன்  இணைந்த  Echo DoT 5,499  ரூபாயிலும், எக்கோ (Echo) 9,999 விலையிலும் முன்பதிவு செய்யத் தொடங்கிவிட்டது. இவை இந்த ஆண்டின் பிற்பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும்.


"புதிய அளவிலான எக்கோ சாதனங்களுடன், வாடிக்கையாளர்களுக்கு அலெக்ஸாவுடன் தொடர்புகொள்வது மிகவும் இயல்பானதாகவும் வசதியாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்" என்று குப்தா கூறினார்.