வளைகுடாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 10 இந்தியர்கள் மரணிக்கின்றனர்!
உலகில் அதிகரித்து வரும் புலம்பெயர்ந்தோரின் பார்வையில், 2000-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை ’டிசம்பர் 18-ஆம் தினத்தை’ ஒவ்வொரு ஆண்டும் `சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினமாக` அனுசரித்து வருகிறது.
உலகில் அதிகரித்து வரும் புலம்பெயர்ந்தோரின் பார்வையில், 2000-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை ’டிசம்பர் 18-ஆம் தினத்தை’ ஒவ்வொரு ஆண்டும் 'சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினமாக' அனுசரித்து வருகிறது.
நாட்டின் முன்னேற்றத்திற்கு புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு பெருமளவு முக்கியத்துவம் பெற்றது என்பதினை வலியுறுத்தும் விதமாக இந்த தினம் அனுசரிக்கப்படுகறிது.
சில நாட்களுக்கு முன்பு, உலக வங்கி 'இடம்பெயர்வு மற்றும் பணம் அனுப்புதல்' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு வெளிநாட்டு நாணயத்தை அனுப்புவதில் முன்னணியில் உள்ளனர் என குறிப்பிட்டிருந்தது. இந்த பட்டியலின் படி 2018-ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம் 80 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.57000 கோடி) என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக மக்கள்தொகை கொண்ட சீனா கூட இப்பட்டியில் இரண்டாவது இடத்தினையே பிடித்தது. இந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ளதன் படி வெளியாடுகளில் வசிக்கும் சீன குடிமக்கள் தங்கள் நாட்டிற்கு அனுப்பி வைத்த பணத்தின் மதிப்பு 67 பில்லியன் டாலர் ஆகும். இந்தியா மற்றும் சீனாவுக்குப் பிறகு, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து ஆகியவை தரவரிசையில் அடுத்த இடங்களை பிடித்தன.
இந்திய புலம்பெயர்ந்தோர் இந்தியாவுக்கு அனுப்பிய மொத்த பணத்தில் 75%-க்கும் அதிகமானவை 10 பெரிய செல்வந்த நாடுகளில் சம்பாதிக்கப்பட்டவை எனவும் அந்ந அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பிட்டு கூறுகையில்., அமெரிக்கா, சவுதி அரேபியா, ரஷ்யா, யுஏஇ, ஜெர்மனி, குவைத், பிரான்ஸ், கத்தார், பிரிட்டன் மற்றும் ஓமான் ஆகியவை இந்த செல்வந்த நாடுகளில் அடங்கும்.
பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறியவர்களால் வளரும் நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படும் பணம் 2018-ஆம் ஆண்டில் 528 பில்லியன் டாலர் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது, கடந்த நிதியாண்டை காட்டிலும் இது 10.8 சதவீதம் அதிகரித்துள்ளதை இந்த உலக வங்கி அறிக்கை காட்டுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், இந்திய வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு அனுப்பிய பணத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் இந்த அறிக்கை நமக்கு தெரிவிக்கிறது.
தொழில் வல்லுநர்கள் மட்டுமல்ல, இந்தியத் தொழிலாளர்களும் இந்த பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்: 1990-க்கும் 2017-க்கும் இடையில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக, கட்டாரில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 803 மடங்கு அதிகரித்துள்ளது. 1990-ல் 2,738 உடன் ஒப்பிடும்போது இது 22 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு மற்ற எந்த நாட்டையும் விட அதிகம். மறுபுறம், புலம்பெயர்ந்த இந்தியர்களில் பெரும்பாலோர் வளைகுடா நாடுகளில் வாழ்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வளைகுடா நாடுகளில் சுமார் 3 மில்லியன் புலம்பெயர் இந்தியர்கள் வாழ்கின்றனர் எனவும், பிரிட்டனில் சுமார் 1 மில்லியன் இந்தியர்கள் உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. அதேவேளையில் சுமார் ஒன்றரை மில்லியன் இந்தியர்கள் கனடாவில் வாழ்கின்றனர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் தகவல்களுக்கு, வெளிநாட்டு இந்தியர்களின் வளர்ச்சியின் கதையின் இருண்ட அம்சமும் உள்ளது என்பதை நாங்கள் மறுக்க இயலாது. உலகின் பிற நாடுகளில் வாழும் அனைத்து இந்திய புலம்பெயர்ந்தோரும் மிகவும் பணக்காரர்கள் அல்ல. பெரும்பாலான நாடுகளில், அவர்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமாகவே நீடிக்கிறது. மில்லியன் கணக்கான இந்திய தொழிலாளர்கள், குறிப்பாக வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் போதுமான ஊதியம் மற்றும் தேவையான வசதிகள் கிடைக்காமல் அவதிபடுகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகப் புகழ்பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான Commonwealth Human Rights Initiative வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்கள் கடினமான மற்றும் பாதகமான சூழ்நிலைகளில் பணியாற்றுவது குறித்து ஒரு அறிக்கையை முன்வைத்துள்ளது. இந்த அறிக்கை மிகவும் கவலை அளிக்கும் சில செய்திகளை நமக்கு தெரிவிக்கிறது. அந்த அறிக்கையின்படி, வளைகுடா நாடுகளில் 2012 முதல் 2018 நடுப்பகுதி வரை, கடினமான நிலையில் வேலை செய்வதால் ஒவ்வொரு நாளும் சராசரியாக 10 இந்திய தொழிலாளர்கள் மரணித்துள்ளனர் என தெரிவிக்கிறது.