கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான ‘சில’ முக்கிய காரணங்கள்!
கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு மோசமான கிரெடிட் ஸ்கோர் மட்டும் காரணம் அல்ல. இது தவிர, பல காரணங்களால் உங்கள் கடன் கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.
நீங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கும் போதெல்லாம், வங்கிகள் முதலில் உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பார்க்கின்றன. உங்கள் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால், கடன் மிக எளிதாகவும் குறைந்த வட்டியிலும் கிடைக்கும். ஏனெனில் அது உங்கள் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருந்தால், கடன் பெறுவதில் பல சிரமங்கள் ஏற்படும். பல நேரங்களில், சிபில் ஸ்கோர் தவிர வேறு காரணங்களாலும் கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
கிரெடிட் ஸ்கோர் மட்டும் காரணம் அல்ல
கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு மோசமான கிரெடிட் ஸ்கோர் (Credt Score) மட்டுமே காரணம் அல்ல. இது தவிர, பல காரணங்களால் உங்கள் கடன் கோரிக்கை நிராகரிக்கப்படலாம். உங்களுக்கும் வங்கி கடன் (Bank Loan) விண்ணப்பம் நிராகரிப்பட்டது தொடர்பான நிகழ்வுகள் நடந்தால், இங்கே உள்ள காரணத்தை அறிந்து, உங்களுக்கும் இதே பிரச்சனை வருகிறதா என்று பாருங்கள்.
விண்ணப்பத்தில் தவறான தகவல்
கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, உங்கள் விண்ணப்பத்தை கவனமாக பூர்த்தி செய்யவும். விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட விபரங்கள் அல்லது தகவல்கள் சரியான இல்லை என்றால் பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உங்கள் கடன் கோரிக்கை ரத்து செய்யப்படலாம்.
ஒரே நேரத்தில் பல இடங்களில் கடனுக்கு விண்ணப்பித்தல்
நீங்கள் ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பித்திருந்தாலும், உங்கள் கடன் நிராகரிக்கப்படலாம். ஏனென்றால், நீங்கள் ஒரே நேரத்தில் பல நிதி நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தால், அவை அனைத்தும் ஒரே நேரத்தில் உங்கள் கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்க்கும். இந்த விவரங்கள் உங்கள் கடன் அறிக்கையில் பதிவு செய்யப்படும். இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கிறது. மேலும், கடன் வழங்கும் நிறுவனங்கள் நீங்கள் எந்த விதித்திலும் கடன் வாங்க என தீவிரமாக முயற்சி செய்கிறீர்கள் என்றும் கருதுகின்றன.
மேலும் படிக்க | உங்கள் வங்கி கணக்கில் இருந்த 295 ரூபாய் காணவில்லையா... இது உங்களுக்கான எச்சரிக்கை!
அடிக்கடி வேலைகளை மாற்றுவது
நீங்கள் அடிக்கடி வேலைகளை மாற்றினால், இது உங்கள் கடனுக்கான சிக்கலையும் உருவாக்கலாம். உங்கள் வேலையை அடிக்கடி மாற்றுவது என்பது நிலையற்ற தன்மையின் அறிகுறியாகும். அதே நேரத்தில், உங்கள் கடன் தொகைக்கும் வருமானத்திற்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்றால், உங்கள் கடன் கோரிக்கையும் நிராகரிக்கப்படலாம். இது தவிர, நீண்ட நாட்களாக வேலையில்லாமல் இருந்தாலும், கடன் வழங்க வங்கிகள் தயங்குகின்றன. இது போன்ற சந்தர்ப்பங்களில் கடன் கொடுப்பது ஆபத்தானது என்றும், கடனை வசூலிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் வங்கிகள் கருதுகின்றன.
DTI விகிதம்
கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் உள்ளவரா இல்லையா என்பதைச் சரிபார்க்க, DTI விகிதம் அதாவது கடனுக்கான வருமான விகிதம் (debt-to-income ratio) பார்க்கப்படுகிறது. இதற்காக, உங்களிடம் ஏற்கனவே கடன்கள் இருந்தால், அவற்றின் தொகை உங்கள் சம்பளத்தால் வகுக்கப்படும். டிடிஐ விகிதம் குறைவாக இருந்தால், நீங்கள் கடன் பெறுவது எளிதாக இருக்கும். பொதுவாக 36%க்கும் குறைவான விகிதம் சிறந்ததாக கருதப்படுகிறது. இது அதிகமாக இருந்தால், வங்கி அல்லது நிதி நிறுவனங்கலீடம் இருந்து கடன் வாங்கும் விஷயத்தில் சிக்கல்கள் ஏற்படலாம்.
மேலும் படிக்க | பென்ஷன் இல்லை என்ற கவலை வேண்டாம்... LIC வழங்கும் அச்சதலான ஜீவன் சாந்தி திட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ