Home Renovation Loan: வீடு கட்டுவதற்கு வங்கிகள் கடன் வழங்குவது பற்றி நமக்கு தெரியும், ஆனால் வீட்டை சீரமைக்க கடன் வழங்குவது பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வீட்டை மேம்படுத்துதல், புதுப்பித்தல் அல்லது பழுதுபார்த்தல் போன்ற பலவிதமான தேவைகளுக்கு கடன் வழங்கப்படுகிறது.  பெரும்பாலான வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சி-கள்) மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் (ஹெச்எஃப்சி-க்கள்) இந்த வசதியை தங்கள் வழக்கமான வீட்டுக் கடன் தயாரிப்பு மூலமாகவோ அல்லது பரந்த வகை வீட்டுக் கடன்களின் மூலமாகவோ வழங்குகின்றது.  ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்குபவர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் இருவரும் வீட்டை புதுப்பிப்பதற்கான கடன்களைப் வாங்கி கொள்ளலாம்.  வீட்டை புதுப்பிக்கும் திட்டத்திற்கு நிதியளிக்க உதவும் திட்டங்களை பற்றி பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Haunted Railway Stations: இந்தியாவில் உள்ள சில ‘பேய்’ ரயில் நிலையங்கள்!


 


1) ஹோம் ஈக்விட்டி லோன்: 


ஹோம் ஈக்விட்டி லோன் என்பது உங்கள் வீட்டை அடமானமாகப் பயன்படுத்தி பணத்தைக் கடன் வாங்க அனுமதிக்கும் ஒரு வகை கடனாகும்.  இது உங்கள் வீட்டை புதுப்பிக்கும் திட்டத்திற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய மொத்த தொகையையும் வழங்குகிறது.  மற்ற வகை கடன்களுடன் ஒப்பிடும் போது இந்த ஹோம் ஈக்விட்டி லோனுக்கான வட்டி விகிதங்கள் பொதுவாக குறைவாக இருக்கும்.  மேலும் இந்த வகை கடன்களின் காலம் 5 முதல் 15 ஆண்டுகள் வரை இருக்கலாம், இருப்பினும் இந்தக் கடனுக்குத் தகுதிபெற உங்கள் வீட்டில் பங்கு இருக்க வேண்டும்.


2) ஹோம் ஈக்விட்டி லைன் ஆஃப் கிரெடிட் (ஹெலாக்) : 


ஒரு ஹெலாக் என்பது வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டை புதுப்பித்தல் திட்டங்களுக்கு நிதியளிக்க உதவும் ஒரு பிரபலமான தேர்வாகும்.  இந்த வகை கடன் உங்கள் வீட்டில் உள்ள ஈக்விட்டிக்கு எதிராக கடன் வாங்க உங்களை அனுமதிக்கிறது, இது உங்கள் வீட்டின் சந்தை மதிப்புக்கும் உங்கள் அடமானத்தில் நீங்கள் இன்னும் செலுத்த வேண்டிய தொகைக்கும் உள்ள வித்தியாசமாகும்.  ஒரு ஹெலாக் மூலம், நீங்கள் தேவைக்கேற்ப பணத்தை கோரலாம் மற்றும் நீங்கள் கடன் வாங்கும் தொகைக்கு மட்டும் வட்டி செலுத்தலாம்.  இந்த நெகிழ்வான கடன் விருப்பம் போட்டி வட்டி விகிதங்களை வழங்குகிறது மற்றும் உங்கள் வீட்டை குறைந்த செலவில் புதுப்பிப்பதற்கு நிதியளிக்கிறது.  இந்த ஹெலாக் கடன்களுக்கான காலம் சுமார்  5 முதல் 25 ஆண்டுகள் வரை இருக்கலாம், மேலும் இதன் வட்டி விகிதங்கள் மாறுபடுகிறது.


3) தனிநபர் கடன் : 


உங்கள் வீட்டில் குறிப்பிடத்தக்க ஈக்விட்டி இல்லாவிட்டால் அல்லது அதை பிணையமாகப் பயன்படுத்த வேண்டாம் என விரும்பினால், வீட்டைப் புதுப்பிக்கும் செலவை சமாளிக்க நீங்கள் தாராளமாக தனிநபர் கடன் விருப்பத்தை தேர்வு செய்யலாம், இது கண்டிப்பாக உங்களுக்கு பொருத்தமான விருப்பமாக இருக்கும். தனிநபர் கடன்கள் பாதுகாப்பற்ற கடன்கள், அதாவது இதற்கு எவ்வித பாதுகாப்பும் தேவையில்லை.  இந்தக் கடன்கள் பொதுவாக வீட்டுப் பங்குக் கடன்களுடன் ஒப்பிடும்போது அதிக வட்டி விகிதங்களைக் கொண்டிருக்கின்றன, ஆனால் கடன் தொகை மற்றும் திருப்பிச் செலுத்தும் காலத்தின் அடிப்படையில் விரைவான விண்ணப்ப செயல்முறை மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றது.  தனிநபர் கடனுக்கான காலம் 1 முதல் 7 ஆண்டுகள் வரை இருக்கலாம்.


4) FHA 203(k) கடன் : 


ஒரு பழைய வீட்டை அதாவது புதுப்பிப்பு செய்ய வேண்டிய நிலையிலுள்ள வீட்டை நீங்கள் வாங்கினாலோ அல்லது உங்கள் தற்போதைய வீட்டில் விரிவான புதுப்பித்தல்களை செய்ய திட்டமிடுகிறீர்கள் என்றாலோ, FHA 203(k) மறுவாழ்வுக் கடன் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.  இந்த கடனின் திருப்பிச் செலுத்தும் காலம் 15 முதல் 30 ஆண்டுகள் வரை இருக்கலாம், இருப்பினும் இந்தக் கடனுக்குத் தகுதிபெற நீங்கள் சில தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  FHA 203(k) கடன்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் வருகிறது மற்றும் அவை மிகவும் மென்மையான தேவைகளைக் கொண்டுள்ளன.


5) கட்டுமானக் கடன்: 


உங்கள் வீடு புதுப்பித்தல் திட்டமானது குறிப்பிடத்தக்க கட்டமைப்பு மாற்றங்கள் அல்லது சேர்த்தல்களை உள்ளடக்கியிருந்தால், கட்டுமானக் கடன் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும்.  இது ஒரு குறுகிய கால கடனாகும், இது ஒரு வீடு அல்லது பிற ரியல் எஸ்டேட் திட்டத்திற்கு நிதியளிக்கப் பயன்படுகிறது.  கட்டுமானக் கடனுடன் திட்டம் முன்னேறும் போது, ​​உங்களுக்கு நிதிபலன் நல்ல நிலையில் கிடைக்கப்பெறும்.  கட்டுமானம் முடிந்ததும், கடனை பாரம்பரிய அடமானமாக மாற்றலாம் அல்லது முழுமையாக செலுத்தலாம். இந்தக் கடன் வழக்கமான அடமானக் கடனை விட, அதிக வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளது என்பதால் இந்த கடனை தேர்வு செய்வதற்கு முன்னர் ஒருமுறைக்கு இரண்டு தடவை யோசித்து முடிவெடுப்பது நல்லது.


மேலும் படிக்க | Income Tax: வருமான வரி தாக்கல் செய்யும்போது கவனம்... இவர்கள் 30% வரி கட்ட வேண்டும்!


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ