Canara Bank FD Rates: தீபாவளிக்கு முன்னதாக கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பரிசை வழங்கியுள்ளது. 2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத்தொகை FD (Fixed Deposit) மீதான வட்டி விகிதங்களை கனரா வங்கி திருத்தியுள்ளது. வங்கியின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், புதிய விகிதங்கள் அக்டோபர் 27, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளதகா குறிப்பிடப்பட்டுள்ளது. கனரா வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை FD கணக்கு திறக்கும் வசதியை வழங்குகிறது. திருத்தத்திற்குப் பிறகு, கனரா வங்கி பொது மக்களுக்கு FD மீது 4 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரையிலும் வட்டி வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிக வட்டி விகிதம் கிடைக்கும் சில FD முதலீடுகள்


கனரா வங்கி இந்த புதிய வட்டி விகிதங்களை ரூ. 2 கோடிக்கும் குறைவான புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க FDகளுக்கு வழங்குகிறது. உங்கள் FDயை முன்கூட்டியே  மூடி பணத்தை திரும்ப பெற்றால், 1.00% அபராதம் விதிக்கப்படும். வங்கியின் இணையதளத்தில் வெளியான தகவலில், சூப்பர் மூத்த குடிமக்களுக்கு அதாவது 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வங்கி 0.60 சதவீதம் கூடுதல் வட்டி அளிக்கிறது. அதே சமயம் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீத வட்டியை வழங்குகிறது.


கனரா வங்கி FD முதலீடுகளுக்கான புதிய வட்டி விகிதங்கள்


கனரா வங்கி இப்போது 7 முதல் 45 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் நிலையான வைப்பு முதலீடுகளுக்கு (Investment Tips)  4% வட்டி விகிதத்தையும், 46 முதல் 90 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 5.25% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. கனரா வங்கி 91 முதல் 179 நாட்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 5.50 சதவீத வட்டி விகிதத்தையும், 180 முதல் 269 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 6.15 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு மெகா ஜாக்பாட் செய்தி.. அகவிலைப்படி 50% அதிகரிக்கும்


கனரா வங்கியின் திருத்தப்பட்ட விகிதங்கள் விபரம்


தற்போது 270 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு  6.25 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். இப்போது 6.90 சதவீத வட்டி விகிதம் 1 வருடத்தில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு கிடைக்கும். 444 நாட்களில் முதிர்ச்சியடையும் FDக்கு வங்கி அதிக வட்டி அளிக்கிறது. 444 நாட்களுக்கான FDக்கு 7.25 சதவீத வட்டியை வங்கி வழங்குகிறது.


திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் விபரம்


கனரா வங்கி ஒரு வருடத்திற்கும் இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் முதிர்ச்சியடையும் FD களுக்கு 6.85% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட 3 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு இப்போது 6.85% வட்டி விகிதத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. கனரா வங்கி இப்போது 6.80 சதவீத வட்டியை மூன்று வருடங்கள் அல்லது அதற்கு மேல் ஆனால் ஐந்தாண்டுகளுக்கு குறைவாக முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு வழங்குகிறது. ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 6.70 சதவீத வட்டி கிடைக்கும்.


மேலும் படிக்க | இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது என்று தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ