இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது என்று தெரியுமா?

இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகும் தெரியுமா? RTI மூலம், கரன்சி நோட்டுகளை அச்சிட எவ்வளவு செலவாகும் என்பது தெரிய வந்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 30, 2023, 09:41 AM IST
  • புதிய 500 ரூபாய் நோட்டை அச்சடிக்க செலவு குறைவு.
  • புதிய ரூ.500 நோட்டு ரூ.2.57க்கு அச்சிடப்படுகிறது.
  • ஒரு ரூ.2,000 நோட்டு ரூ.4.18 செலவாகிறது.
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது என்று தெரியுமா? title=

இந்தியாவில் ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் அதிகமாகி வந்தாலும், கரன்சி நோட்டுகளுக்கான முக்கியத்துவம் இன்னும் குறையவில்லை.  இந்தியாவில் உள்ள கிராம புறங்களில் நோட்டுகள் தேவை அதிகளவில் உள்ளது.  இந்தியாவில் இந்த ஆண்டு மே மாதம் முதல் புழக்கத்தில் இருந்து ரூ.2,000 ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற அல்லது டெபாசிட் செய்வதற்கான காலக்கெடுவை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.  முன்னதாக காலக்கெடு அக்டோபர் 7 வரை இருந்தது.  ரூ. 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டும் என்றும் என்றால் ரிசர்வ் வங்கியின் அதிகார்வப்பூர்வ மையங்களில் மட்டுமே மாற்ற முடியும்.  மேலும், ரிசர்வ் வங்கி பல்வேறு வகையான நோட்டுகளை இந்தியாவில் அச்சிடுகிறது.  ஒவ்வொரு நோட்டிற்கும் அதன் அச்சிடுவதற்கான செலவு மாறுபடும். 

மேலும் படிக்க | நீங்கள் வைத்திருக்கும் தங்கம் எவ்வளவு தூய்மையானது? கண்டுபிடிக்க 4 வழிகள்!

 

எடுத்துக்காட்டாக ஒரு 2000 ரூபாய் நோட்டை அச்சடிக்க தோராயமாக ரூ. 4 செலவாகும். 2018ம் ஆண்டு ஒரு 2000 ரூபாய் நோட்டை அச்சடிக்க செலவு ரூ.4.18 ஆக இருந்தது, பின்னர் அது ரூ.3.53 ஆக குறைந்தது. சுவாரஸ்யமாக, 10 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க அதிகம் செலவாகிறது என்றால் நம்ப முடியுமா? ஆம், 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க 960 ரூபாய் செலவாகும். நோட்டை அச்சிடுவதற்கான செலவு அதன் மதிப்பை விட அதிகமாக உள்ளது என்பது இதன் மூலம் தெரிகிறது.  வெவ்வேறு வகை நோட்டுகளை அச்சிடுவதற்காக  மாறுபட்ட செலவுகளை கையாளவேண்டி உள்ளது.

500 ரூபாய் நோட்டுகள் 1,000 அச்சடிக்க 2,290 ரூபாய் செலவாகும்.

200 ரூபாய் நோட்டுகள் 1,000 அச்சடிக்க 2,370 ரூபாய் செலவாகும்.

100 ரூபாய் நோட்டுகள் 1,000 அச்சடிக்க 1,770 ரூபாய் செலவாகும்.

ஆச்சரியப்படும் விதமாக, 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவு இந்த சில வகை நோட்டுகளுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளது, இது அச்சிடும் செலவுகளின் அடிப்படையில் மிகவும் குறைந்த அளவாக அமைகிறது.  ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, மே 19ஆம் தேதி வரை புழக்கத்தில் இருந்த ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியில், ரூ.3.42 லட்சம் கோடி வங்கிகளுக்குத் திரும்பியுள்ளது. செப்டம்பர் 29ஆம் தேதி நிலவரப்படி ரூ.0.14 லட்சம் கோடி மட்டுமே புழக்கத்தில் உள்ளது. இந்த நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்றுவதற்கான ஆரம்ப காலக்கெடு செப்டம்பர் 30 ஆகும். ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, “மே 19, 2023 வரை புழக்கத்தில் இருந்த ரூ.2,000 ரூபாய் நோட்டுகளில் 96 சதவீதம் திரும்பி வந்துவிட்டன. மேலும், அக்டோபர் 8ஆம் தேதி முதல் வங்கிக் கிளைகளில் ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும் அல்லது மாற்றும் செயல்முறை நிறுத்தப்படும் என்று கூறியத".

தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் 19 ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்களில் ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம், ஒரே நேரத்தில் ரூ.20,000 என்ற வரம்பு உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்த ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்களில் ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை இந்திய வங்கிக் கணக்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். கூடுதலாக, நேரடியாக வங்கிக்கு செல்ல முடியாத தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை இந்தியாவில் உள்ள தங்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்காக 19 ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றிற்கு இந்திய தபால் மூலம் அனுப்பலாம்.

மேலும் படிக்க | மது பிரியர்களே உசார்! இந்த சமயங்களில் மது அருந்தவே கூடாது!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News