புதுடெல்லி: நீங்கள் கனரா வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு முக்கியமான செய்தியாக இருக்கும். வங்கி தொடர்பான முக்கியமான பணிகளை நீங்கள் உடனடியாக முடித்துக்கொள்வது நல்லது. ஏனென்றால் வரும் வாரத்தில் வங்கியின் சேவைகள் பாதிக்கப்படலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல வங்கி தொழிற்சங்கங்களால் முன்மொழியப்பட்ட வேலைநிறுத்தம் காரணமாக இந்த மாத இறுதியில் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என்று பொதுத்துறை கனரா வங்கி வியாழக்கிழமை NSE-யில் கூறியது.


கனரா வங்கி தனது ஒழுங்குமுறை தாக்கல் அறிக்கையில், வங்கி தொழிற்சங்கங்களின் ஒன்றிணைப்பான IBF, மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தொழில்துறை தொடர்பான பிரச்சினைகளுக்காக வங்கித் துறையில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய வங்கிகள் சங்கம் (IBA) தெரிவித்துள்ளதாக கூறியது. இது எந்த வங்கி அளவிலான பிரச்சினைக்காகவும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.


மார்ச் 15-16 அன்று வங்கி வேலைநிறுத்தம்


வேலைநிறுத்தம் ஏற்பட்டால் கிளைகள் / அலுவலகங்களின் செயல்பாடு பாதிக்கப்படலாம் என்று வங்கி கூறுகிறது. எனினும், வேலைநிறுத்த நாட்களில் கிளைகள் மற்றும் அலுவலகங்கள் சீராக இயங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் 15-16 அன்று வங்கி (Bank) தொழிற்சங்கங்களால் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: SBI Power Demat Account: அதிரடி கடன் வசதி, இலவச ATM Card, இன்னும் எக்கச்சக்க offers


AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF, INBEF, IBOC, NOBW, NOBO மற்றும் AINBOF ஆகியவை இந்த வங்கி தொழிற்சங்கங்கள் ஆகும். அரசுக்கு சொந்தமான இரண்டு வங்கிகளை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு எதிராக நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு இவை அழைப்பு விடுத்துள்ளன.


ஏப்ரல் 1 முதல் புதிய விதி இருக்கும்


சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் (Canara Bank) இணைக்கப்படவுள்ளது. இதன் காரணமாக, பல வங்கிகளின் IFSC குறியீடுகளும் மாற்றப்படும். இந்த புதிய விதி ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும். நீங்கள் முன்பு சிண்டிகேட் வங்கியில் கணக்கு வைத்திருந்தால், உங்கள் குறியீடும் மாறும். புதிய குறியீடு பற்றிய விவரங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், வங்கி புதிய IFSC குறியீடுகளையும் வெளியிட்டுள்ளது.


இவைதான் உங்கள் புதிய IFSC குறியீடுகளாக இருக்கும். கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியை இணைத்த பின்னர், இந்த வங்கியின் மொத்த வணிகம் ரூ. 15.20 லட்சம் கோடியாகவும், அதன் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 10,342 ஆகவும் அதிகரிக்கும்.


ALSO READ: உங்கள் கனவு இல்லத்தை வாங்க சிறந்த வாய்ப்பு; இந்த வங்கியில் வீட்டுக் கடன் SBI-யை விட குறைவு!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR