FD வட்டி விகிதங்களை உயர்த்தியது ஆக்சிஸ் வங்கி: விகித விவரங்கள் இதோ
Axis Bank FD Interest Rates: ஆக்சிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி. தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி 2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத்தொகைக்கான (எஃப்டி) வட்டி விகிதத்தை 25 பிபிஎஸ் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி: ஆக்சிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி. தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி 2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத்தொகைக்கான (எஃப்டி) வட்டி விகிதத்தை 25 பிபிஎஸ் அதிகரித்துள்ளது. புதிய விகிதங்கள் செப்டம்பர் 9 முதல் அமலுக்கு வந்துள்ளதாக வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பல்வேறு தவணைக்கால எஃப்டி-களுக்கான வட்டி விகிதங்களை வங்கி உயர்த்தியுள்ளது. வட்டி விகிதங்கள் 2.75% முதல் 5.75% வரை உள்ளன.
2 கோடிக்குக் கீழ் ஆக்சிஸ் வங்கியின் எஃப்டி விகிதங்கள்
- 7 நாட்கள் முதல் 14 நாட்களுக்குள் மெச்யூர் ஆகும் எஃப்டி-களுக்கான வட்டி விகிதம் 25 பிபிஎஸ் (2bps), 2.50%-லிருந்து 2.75% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- 15 நாட்கள் முதல் 29 நாட்களுக்குள் மெச்யூர் ஆகும் எஃப்டி-களுக்கான வட்டி விகிதம் 25 பிபிஎஸ் (2bps), 2.50%-லிருந்து 2.75% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- 30 நாட்கள் முதல் 45 நாட்கள், 46 நாட்கள் முதல் 60 நாட்கள் மற்றும் 61 நாட்கள் முதல் 3 மாதங்களுக்கும் குறைவாக உள்ள எஃப்டி-களுக்கான புதிய விகிதம் 3.25% ஆகும்.
மேலும் படிக்க | பாரத ஸ்டேட் வங்கியில் வேலை வாய்ப்பு - 600க்கும் அதிகமான காலி பணியிடங்கள்
- 3 மாதங்கள் முதல் 4 மாதங்களுக்கும் குறைவான காலத்துக்கும், 4 மாதங்கள் முதல் 5 மாதங்களுக்கும் குறைவான காலத்துக்கும், 5 மாதங்கள் முதல் 6 மாதங்களுக்கும் குறைவான காலத்துக்கும் 3.75% வட்டி விகிதம் வழங்கப்படும்.
- 6 மாதங்கள் முதல் 7 மாதங்களுக்கும் குறைவான கால எஃப்டி-களுக்கு, 4.65% வட்டி விகிதம் இப்போது வழங்கப்படும்.
- முரண்பாடாக, 7 மாதங்கள் முதல் 8 மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதிக்கு 4.40% வட்டி விகிதம் வழங்கப்படும்.
- 8 மாதங்கள் முதல் 9 மாதங்களுக்கும் குறைவான காலத்துக்கு 4.65% வழங்கப்படும்.
- 9 மாதங்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள் மெச்யூர் ஆகும் எஃப்டி-களுக்கு இப்போது 4.75% விகிதம் வழங்கப்படும்.
- 1 வருடம் முதல் 1 வருடம் 11 நாட்களுக்கு 5.45% வட்டி வழங்கப்படும்.
- 1 வருடம் 25 நாட்கள் முதல் 2 வருடங்களுக்கும் குறைவான காலக்கட்டத்தில் மெச்யூர் ஆகும் எஃப்டி-களுக்கு வட்டி விகிதம் அப்படியே இருக்கும்.
- 2 ஆண்டுகளுக்கு மேல் 5 ஆண்டுகளுக்கு குறைவான காலத்துக்கு இப்போது 5.70% வட்டி வழங்கப்படும்.
- 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்.டி-களுக்கான வட்டி விகிதம் 5.75% ஆக இருக்கும்.
மேலும் படிக்க | 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தபால் துறையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ