எஃப்டி மீதான அதிக வட்டி விகிதம்: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை அதிகரித்து மக்களுக்கு பெரும் அதிர்சியை அளித்துள்ளது. ஆனால் இதன் மூலம் பலர் பயனடைந்தும் வருகின்றனர். ஏனென்றால், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியதிலிருந்து, வங்கிகளும் சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகளுக்கு அதிக வட்டி செலுத்தத் தொடங்கியுள்ளன. நீங்களும் எஃப்டி-யில் முதலீடு செய்ய நினைத்தால், பல்வேறு வங்கிகளின் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தைப் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதத்தின் மூலம் சில வருடங்களில் உங்கள் தொகை இரட்டிப்பாக்கும். இது தவிர, இந்த பதிவில் அளிக்கப்பட்டுள்ள சில குறிப்புகளின் உதவியுடன் நீங்கள் அதிக வட்டி சம்பாதிப்பது மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் பெற முடியும்.
எஃப்டி வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்
எஃப்டி, அதாவது நிலையான வைப்பில் நீங்கள் பெறும் எந்த வட்டிக்கும் வரி விதிக்கப்படும். ஒரு வருடத்தில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வட்டி கிடைத்தால், வங்கி அதில் டிடிஎஸ் கழித்து உங்களுக்கு வழங்கும். இந்தத் தொகையில் வங்கி டிடிஎஸ்-ஐக் கழிக்காவிட்டாலும், உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது இந்த வருமானத்தை வரிக் கணக்கில் காட்ட வேண்டும். ஆனால் உங்கள் வருமானம் குறைவாக இருந்து, அதற்கு வரி விதிக்கப்படாது என்ற நிலை இருந்தால், வருமான வரி ரிட்டனைச் சமர்ப்பித்து டிடிஎஸ் ஆகக் கழிக்கப்பட்ட தொகையைத் திரும்பப் பெறலாம்.
மேலும் படிக்க | EPF பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு செயல்முறை இதோ
எஃப்டி முற்றிலும் பாதுகாப்பானதா?
எஃப்டி முற்றிலும் பாதுகாப்பானது அல்ல. இரண்டு வகையான எஃப்டி-கள் உள்ளன. ஒன்று வங்கி எஃப்டி, மற்றொன்று கார்ப்பரேட் எஃப்டி. கார்ப்பரேட் டெபாசிட்டுகள் பாதுகாப்பற்றவையாக கருதப்படுகின்றன. இதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வங்கிகளைப் பொறுத்தவரை, டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) ஒரு வாடிக்கையாளருக்கு அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை உத்தரவாதம் அளிக்கிறது. மேலும் இந்த விதி வங்கியின் ஒவ்வொரு கிளைக்கும் பொருந்தும். நீங்கள் 20 லட்சம் ரூபாயை எஃப்டியில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், அதை வெவ்வேறு வங்கிகளில் மூன்று முதல் நான்கு இடங்களில் முதலீடு செய்யுங்கள்.
இந்த வழியில் பணம் இரட்டிப்பாகும்
ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் எஃப்டி-க்கு 8.75 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறியுள்ளது. ஆனால் இது கார்ப்பரேட் டெபாசிட், அதாவது வங்கி வைப்பு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது தவிர, பல சிறு நிதி வங்கிகளும் ஆண்டுக்கு 6 முதல் 7 சதவீதம் வரை வட்டி தருகின்றன. ரெப்போ ரேட் உயர்வுக்குப் பிறகு, பெரும்பாலான வங்கிகள் எஃப்டிக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளன.
சமீபத்தில், பந்தன் வங்கியும், யெஸ் வங்கியும் எஃப்டிகளுக்கு அதிக வட்டி விகிதங்களை அறிவித்தன. ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸில் சுமார் 8 ஆண்டுகளுக்கு நீங்கள் எஃப்டி போட்டால், அந்த கால அளவில் உங்கள் முதலீடு இரட்டிப்பாகும். அதே நேரத்தில், ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் உங்கள் முதலீடு சுமார் 11 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ