SBI லாக்கர் புதிய விதிகள்... வாடிக்கையாளர்கள் இதை உடனே செய்யுங்கள்!
SBI New Locker Rules: வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க புதுப்பிக்கப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட வங்கிகள் அவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.
SBI New Locker Rules: கடந்த சில நாள்களாக, புதுப்பிக்கப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்குமாறு, வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து செய்திகளை அனுப்பி வருகின்றன. லாக்கர் குறித்து எஸ்பிஐ, தனது வாடிக்கையாளர்களுக்காக வெளியிட்ட தகவலில்,"திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தில் தீர்வு காண தயவுசெய்து உங்கள் வங்கி கிளை அணுகவும்.
நீங்கள் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால், நீங்கள் இன்னும் துணை ஒப்பந்தத்தையும் செயல்படுத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது. இது தவிர, பாங்க் ஆப் பரோடாவும் தனது வாடிக்கையாளர்களை திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தங்களில் உரிய தேதிக்குள் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்கிறது.
ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை
உண்மையில், இந்திய ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க கடந்த ஜனவரி 23ஆம் தேதி அன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இந்த சுற்றறிக்கையின்படி, வங்கிகள் லாக்கர் ஒப்பந்தங்களைப் புதுப்பித்தல் குறித்து வாடிக்கையாளர்களுக்கு 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: மே 31 டிஏ ஹைக் பற்றிய முக்கிய அறிவிப்பு... விரைவில் சம்பள உயர்வு
அத்துடன் ஜூன் 30க்குள் 50 சதவீத வாடிக்கையாளர் ஒப்பந்தங்களும், செப்டம்பர் 30க்குள் 75 சதவீதமும் திருத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். எனவே, இந்த தேதிககுள் அருகில், வங்கிகள் தங்கள் ஒப்பந்தங்களை புதுப்பிக்க வாடிக்கையாளர்களை கேட்கலாம்.
திருத்தப்பட்ட லாக்கர் விதிகளின்படி, தீ, திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கட்டட இடிபாடு, வங்கியின் அலட்சியம், ஊழியர்களின் மோசடி உள்ளிட்டவை தொடர்பான சம்பவங்கள் ஏற்பட்டால், வங்கிகள் ஆண்டுக்கு லாக்கரில் இருக்கும் பொருள்களின் மதிப்பில் 100 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
வாடிக்கையாளர் லாக்கரை ஒப்படைத்துவிட்டு வாடகையை முன்கூட்டியே செலுத்தினால், அந்த விகிதாச்சாரத் தொகையை வங்கி திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனால் வாடகையை முறையாக செலுத்தினாலும், லாக்கர் 7 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது என்றால், மற்ற வழிகாட்டுதல்களில் ஒப்பந்தம் முத்திரைத் தாளில் இருக்க வேண்டும். அந்த ஒப்பந்தத்தின் நகலை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
லாக்கர்களை ஒதுக்கும் நேரத்தில், வங்கிகள் 3 வருட வாடகையை ஈடுகட்ட நிலையான வைப்புகளை (FD) பெறுவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. தேவைப்பட்டால் லாக்கர் உடைக்கும் கட்டணங்களும் இதில் அடங்கும். லாக்கர் செயல்பாடுகள் குறித்து வங்கிகளுக்குத் தெரிவிக்க உங்கள் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை வங்கியில் பதிவு செய்வது அவசியம்.
மேலும் படிக்க | அடேங்கப்பா...இந்தியாவிலேயே இந்த ஊரில் தான் சம்பளம் அதிகம் - முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ