7th Pay Commission: மே 31 டிஏ ஹைக் பற்றிய முக்கிய அறிவிப்பு... விரைவில் சம்பள உயர்வு

7th Pay Commission: ஜூலை மாதம் அகவிலைப்படியில் 3 முதல் 4 சதவீதம் அதிகரிப்பு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 26, 2023, 06:27 PM IST
  • மே 31 ஆம் தேதி மாலையில் அரசாங்கம் அகவிலைப்படி மதிப்பெண்ணைப் புதுப்பிக்கும்.
  • ஏஐசிபிஐ தரவின் புதிய எண்கள் மே 31 அன்று வெளியிடப்படும்.
  • AICPI எண்களைக் கொண்டு அகவிலைப்படி அதிகரிப்பு விகிதத்தைக் கணக்கிடுவது எளிதாக இருக்கும்.
7th Pay Commission: மே 31 டிஏ ஹைக் பற்றிய முக்கிய அறிவிப்பு... விரைவில் சம்பள உயர்வு title=

7வது ஊதியக் குழு, அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு நல்ல செய்தி வரவுள்ளது. மே 31 ஆம் தேதி அறிவிப்பு வெளியான பிறகு ஊழியர்களின் சம்பளம் பெரிய அளவில் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் மார்ச் மாதம் மத்திய அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்தியது. அதன் பிறகு ஊழியர்களின் அகவிலைப்படி தற்போது 42 சதவிகிதமாக உள்ளது. இது ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. மீண்டும் அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில், அகவிலைப்படி உயர்வு தொடர்பாக மே 31 ஆம் தேதி மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

முக்கிய ஆலோசனைக் கூட்டம்

மே 31 ஆம் தேதி மாலையில் அரசாங்கம் அகவிலைப்படி மதிப்பெண்ணைப் புதுப்பிக்கும். ஏஐசிபிஐ தரவின் புதிய எண்கள் மே 31 அன்று வெளியிடப்படும். AICPI எண்களைக் கொண்டு அகவிலைப்படி அதிகரிப்பு விகிதத்தைக் கணக்கிடுவது எளிதாக இருக்கும். இது ஜூலை மாதத்தில் டிஏ அதிகரிப்பு பற்றிய தெளிவான விவரங்களைத் தரும். ஏஐசிபிஐ எண்கள் இதுவரை ஊக்கமளிக்கும் வகையில் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜூலை மாதம் அகவிலைப்படியில் 3 முதல் 4 சதவீதம் அதிகரிப்பு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு

தற்போதைய கணக்கீட்டின்படி, டிஏ உயர்வு 44.46 சதவீதமாக அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் இது 43.79 சதவீதமாக இருந்தது. இருப்பினும், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான எண்கள் இன்னும் வரவில்லை. மே மாதத்துக்கான ஏஐசிபிஐ எண் மே 31 அன்று வரும். ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில், அகவிலைப்படி 2 சதவீதம் அதிகரித்துள்ளது. 

ஏஐசிபிஐ குறியீடுகள்

டிசம்பரில் குறியீட்டு எண் 132.3 புள்ளிகளாக இருந்தது, அப்போது அகவிலைப்படி 42.37 சதவீதமாக இருந்தது. மார்ச் 2023 புள்ளிவிவரங்களின்படி, குறியீட்டு எண் 133.3 ஐ எட்டியது. அதைத் தொடர்ந்து அகவிலைப்படி மதிப்பெண் 44.46 சதவீதத்தை எட்டியது. இப்போது, ​​இந்தக் கணக்கீட்டை அடிப்படையாகக் கொண்டால், ஜூன் வரை குறியீட்டு எண் 2 சதவிகிதம் அதிகரிக்கலாம். அப்படி நடந்தால், அகவிலைப்படி 46 சதவீதத்தை எட்டும். டிஏ -வில் ஏற்படும் இந்த அதிகரிப்பு ஜூலை 2023 முதல் பொருந்தும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்.. மாநில அரசு ஊழியர்களுக்கு 8% டிஏ ஹைக், தொடரும் கொண்டாட்டம்

மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி

மத்திய அரசின் கீழ் உள்ள ஊழியர்களுக்கான அகவிலைப்படி விகிதம் 42 சதவீதமாக உள்ளது. ஜூலை மாதத்திற்குள் 4 சதவீதம் அதிகரித்தால், அகவிலைப்படி 46 சதவீதமாக உயரும். இதனால், ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் ஏற்படும். ஏப்ரல் எண்கள் மே 31 அன்று வரும். ஆனால், மே, ஜூன் எண்களுக்குப் பிறகுதான் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது தெளிவாகத் தெரியும்.

மத்திய ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024-ம் ஆண்டு சம்பளத்தில் பெரும் உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது. ஜூலையில் டிஏ 4 சதவீதம் அதிகரிக்கப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் மொத்த டிஏ 46 சதவீதமாக இருக்கும். ஜனவரி 2024 இல் அகவிலைப்படி மேலும் 4% அதிகரிக்கப்பட்டால், ஜனவரியில் மொத்த டிஏ 50% ஆக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், மொத்த அகவிலைப்படி பூஜ்ஜியமாக (0) குறைக்கப்படும். அரசு அடிப்படை ஆண்டை மாற்றியபோது, ​​அகவிலைப்படி 50% -ஐ எட்டினால், அது பூஜ்ஜியமாக்கப்பட்டு, ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி பணம் சேர்க்கப்படும் என்ற இந்த விதியையும் அமல்படுத்தியது. இதற்குப் பிறகு அகவிலைப்படி பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும். 50 சதவிகித அகவிலைப்படியின் தொகை அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்பட்டால், ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் பெருமளவு ஏற்றம் இருக்கும்.

மேலும் படிக்க | DA Hike: அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி! மே 31 முதல் சம்பள உயர்வு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News