SBI, HDFC வங்கிகளை தொடர்ந்து வட்டி விகிதத்தை குறைத்தது BoB!
SBI மற்றும் HDFC வங்கிக்குப் பிறகு, தற்போது BoB மற்றும் BoI தனது வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளன.
SBI மற்றும் HDFC வங்கிக்குப் பிறகு, தற்போது BoB மற்றும் BoI தனது வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளன.
இந்த மறுஆய்வுக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வீதத்தைக் குறைக்கவில்லை என்றாலும், SBI மற்றும் HDFC வங்கிக்குப் பிறகு, இப்போது பாங்க் ஆப் பரோடா மற்றும் பாங்க் ஆப் இந்தியாவும் தனது வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளன.
அரசுக்கு சொந்தமான BoB மற்றும் BoI ஆகியவை பல்வேறு கால கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. BoB ஒரு வருட கடனில் விளிம்பு செலவு அடிப்படையிலான வட்டி விகிதத்தை (MCLR) 0.5% குறைத்துள்ளது. இந்த வழியில், வங்கியின் MCLR அடிப்படையிலான வட்டி விகிதம் ஒரு வருட காலத்திற்கு 8.25%-ஆக இருக்கும். அதாவது MCLR 0.20% குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதம் 7.65%-ஆக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று மாத மற்றும் ஆறு மாத MCLR முறையே 0.10% குறைத்து 7.8% மற்றும் 8.1%-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக BoB வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய விகிதங்கள் டிசம்பர் 12 முதல் அமலுக்கு வரும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
அதேப்போல், பாங்க் ஆப் இந்தியாவும் ஒரு நாள் கடனுக்கான வட்டியை 0.20% குறைத்துள்ளது. இந்த வழியில் விகிதம் 7.75%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிற கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.10% குறைக்கப்பட்டுள்ளது. இந்த வழியில், வங்கி இப்போது ஒரு வருட கடனில் 8.3%-க்கு பதிலாக 8.2% வட்டி வசூளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக BoI தெரிவித்துள்ளது.
முன்னதாக திங்களன்று, நாட்டின் மிகப்பெரிய வங்கியான SBI ஒரு வருட காலத்திற்கு கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 0.10% குறைப்பு அறிவித்தது. இதனால் வங்கியின் ஒரு ஆண்டு MCLR 7.90%-ஆக குறைக்கப்பட்டது. HDFC வங்கி MCLR விகிதங்களை 0.15% குறைப்பதாக அறிவித்தது. வங்கிகளிடமிருந்து MCLR குறைக்கப்படுவதால் வீடு, ஆட்டோ மற்றும் தனிநபர் கடன்கள் வாடிக்கையாளர்களுக்கு மலிவான வட்டிகளுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.