EMI-ல் டூவீலர் வாங்க போறீங்களா? இந்த விஷயங்களை நியாபகம் வச்சுக்கோங்க!
Applying for Two Wheeler Loan: இரு சக்கர வாகனத்தை கடனில் எடுக்கும் முன்பு அல்லது விண்ணப்புக்கும் முன்பு சில விஷயங்களை நினைவில் வைத்து கொள்ள வேண்டிய அவசியம்.
நீங்கள் புதிய பைக் அல்லது ஸ்கூட்டர் வாங்க விரும்பினால், அதனை முழு பணத்தை கொடுத்தும் அல்லது தவணை முறையிலும் எடுக்கலாம். ஏழை மக்களுக்கு உதவும் வகையில் இரு சக்கர வாகன கடன் திட்டம் அமலில் உள்ளது. பெரிய வங்கிகள் தொடங்கி, சிறு நிறுவனங்கள் வரை பலரும் இரு சக்கர வாகன கடன் தருகின்றனர். வாகன கடனை பெரும் முன்பு, இந்த கடன்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை பற்றி அறிந்து கொள்வது முக்கியம். இதன் மூலம் நீங்கள் சிறந்த நிறுவனங்களில் இருந்து, எந்த பிரச்சனையும் இல்லாமல் தவணை முறையில் பைக் அல்லது ஸ்கூட்டர் எடுத்து பணத்தை திருப்பி செலுத்த முடியும்.
இரு சக்கர வாகனங்களுக்கான கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
EMIல் பைக் வாங்குவதற்கான முதல் படி, உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை தீர்மானிப்பது தான். நீங்கள் நிறைய கடன் வாங்க விரும்பலாம், ஆனால் நினைவில் கொள்ளுங்கள் அதிக பணத்தை கடன் வாங்கினால், ஒவ்வொரு மாதமும் நீங்கள் அதிகமாக திருப்பி செலுத்த வேண்டும். இது உங்களுக்கு தேவையான மற்ற விஷயங்களில் பணத்தைச் செலவழிப்பதை கடினமாக்கும். எனவே, உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற கடன் தொகையை தேர்ந்தெடுப்பது முக்கியம்.
நீங்கள் கடன் வாங்கும்போது திரும்பி செலுத்தும் கட்டணத்தை வட்டி விகிதம் நிர்ணயிக்கிறது. கடன் கொடுக்கும் பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இருசக்கர வாகனங்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன. நீங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கடனைத் தேர்ந்தெடுத்தால், காலப்போக்கில் திருப்பிச் செலுத்தும் போது நீங்கள் நிறைய பணத்தை மிச்சப்படுத்துவீர்கள்.
நீங்கள் கடன் வாங்கும்போது, குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். அதை திருப்பி செலுத்த அதிக காலம் எடுத்துக் கொண்டால், வட்டியின் காரணமாக கூடுதல் பணத்தை செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் கடனைத் திருப்பி செலுத்த எவ்வளவு காலம் எடுக்க விரும்புகிறீர்கள் மற்றும் கடனை கேட்கும் முன் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் செலுத்த முடியும் என்பதை பற்றி சிந்திப்பது மிகவும் முக்கியம்.
நீங்கள் கடன் வாங்கும் போது, கடன் கொடுக்கும் வங்கிகள் அல்லது நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் கேட்கலாம். இவை உங்கள் விண்ணப்பத்தை கையாளுவதற்கான கட்டணம் அல்லது பணத்தை முன்கூட்டியே திருப்பி செலுத்தினால் அதற்கான கட்டணமாக இருக்கலாம். எனவே இந்த கூடுதல் கட்டணங்களைச் சரிபார்த்து, நியாயமான கட்டணங்களுடன் கடன் வழங்குபவரை தேர்ந்தெடுப்பது அவசியம்.
உங்கள் கிரெடிட் ஸ்கோர் உங்களுக்கு எவ்வளவு கடன் வழங்கலாம் என்பதை தீர்மானிக்கிறது. நீங்கள் அதிக மதிப்பெண் வைத்திருந்தால் குறைந்த வட்டி விகிதத்தில், அதிக கடன் பெறலாம். எனவே இருசக்கர வாகன கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு உங்கள் கிரெடிட் மதிப்பெண்ணை சரிபார்த்து, தேவைப்பட்டால் அதை இன்னும் அதிகப்படுத்துவது எப்படி என்பதை தெரிந்துகொள்வது நல்லது.
பைக்கை வாங்குவதற்கு முன்பு உங்களால் சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்த முடியுமா என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியம். உங்கள் மாதாந்திர பட்ஜெட் மற்றும் ஏற்கனவே உள்ள கடன் போன்றவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும். கடனுக்கான மாதாந்திர கொடுப்பனவுகள் உங்கள் பட்ஜெட்டுக்கு பொருந்துமா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும், எனவே மாதாந்திர கடன் செலுத்துவதில் உங்களுக்கு சிக்கல் இருக்காது.
எந்த ஒரு பொருளை கடனாக வாங்கும் முன்பு, முன்பணமாக நீங்கள் அதிகமாகச் செலுத்தினால், நீங்கள் குறைவான வட்டி விகிதத்தை பெறலாம். இரு சக்கர வாகனக் கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் நிதி திறனை மதிப்பீடு செய்து கொள்வது நல்லது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ