Tamil Nadu Today Latest News Live Updates:பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு நாள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமசந்திரனின் 37ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
ஹைதராபாத் நகரில் சந்தியா திரையரங்கில் கூட்டநெரிசல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் இன்று காலை 11 மணிக்கு சிக்கட்பள்ளி போலீஸார் முன் ஆஜராகுமாறு போலீசார் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. போலீசார் செய்தியாளர் சந்திப்பில் அல்லு அர்ஜுன் தியேட்டர் முன்பாக ரசிகர்களுடன் செல்பி எடுத்தது போன்ற வீடியோ பதிவை ஆதாரமாக வெளியிட்டனர்.
முன்னதாக, அல்லு அர்ஜுன் தான் 'ரோட் ஷோ' நடத்தவில்லை என செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அல்லு அர்ஜுனின் ஜாமீனை எதிர்த்து தெலுங்கானா அரசு இன்று மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அல்லு அர்ஜுன் மீண்டும் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
வங்கக்கடலில் நிலவும் ஆழவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகேவும் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், இன்று சென்னையில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.