Cibil Credit Score Wealth Tips: திருமணம் என்பது இருவரின் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் முக்கியமான படியாகும். இதுவரை சிங்கிளாக இருந்தவர்கள், தன்னுடைய பார்ட்னரின் வாழ்க்கையில் பங்கெடுக்க இருக்கிறார்கள். அதனால், இருவரின் வாழ்க்கையில் என்ன நடந்தாலும், அது இன்னொருவரையும் பாதிக்கும். இதனால், இந்த விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. அந்தவகையில் நீங்கள் விரைவில் திருமண பந்தத்தில் பங்கெடுக்க இருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு இந்த டிப்ஸ் மிகவும் உதவியாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடனை தெரிந்து கொள்ளுங்கள்


திருமண உறவு இனிப்பாக இருப்பதுவும், கசப்பாக அமைவதும் திருமணம் செய்து கொள்ளும் பார்ட்னரின் நிதி நிலையை பொறுத்தது. இதனை பெரும்பாலானோர் கவனத்தில் கொள்ள மாட்டார்கள். ஆனால், அதிக கடன் இருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், நிச்சயம் தர்ம சங்கடமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் பார்ட்னரின் நிதி நிலை, கடன் மற்றும் வருவாயை தெரிந்து கொள்ளுங்கள். 


ஆண் அல்லது பெண் என யாராக இருந்தாலும் இதனை தெரிந்து கொள்வது அவசியம். இருவரின் குடும்பப் பின்னணியையும் நீங்கள் தெரிந்து கொண்டால் மட்டுமே உங்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இது தொடர்பாக கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுங்கள். 


திருமண முறிவுக்கு முக்கிய காரணம்


அண்மைக்காலமாக ஏற்படும் திருமண முறிவுகளுக்கு கடன் பின்னணியாக இருப்பது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. நிதி பிரச்சனையை பார்க்காமல் திருமண உறவில் பங்கெடுக்கும் தம்பதிகள், பின்னால் கடன் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திருமண உறவை முடித்துக் கொள்ள விரும்புகின்றனர். வெளிநாடுகளில் மட்டுமல்லாது இந்தியாவிலும் இத்தகைய மண முறிவுகள் இருப்பதை பார்க்க முடிகிறது.  


சிபில் ஸ்கோர்


கடன் பற்றி தெரிந்து கொள்ள முடியவில்லை என்றால், குறைந்தபட்சம் சிபில் ஸ்கோரையாவது தெரிந்து கொள்ளுங்கள். வங்கிகளில் பெற்றிருக்கும் கடன்கள், நிதி நிறுவனங்களில் பெற்றிருக்கும் கடன்களை இதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். தனிநபர் கடன்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியாது என்றாலும், குறைந்தபட்சம் வங்கிக் கடன்களையாவது தெரிந்து கொள்ள வாய்ப்பு உங்களுக்கு உண்டு. 


மேலும் படிக்க: ரூ.20 ஆயிரத்துக்குள் இருக்கும் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்கள்


மேலும் படிக்க: ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் புதிய ஸ்மார்ட்போன்


மேலும் படிக்க: Redmi: குறைந்த விலையில் களமிறங்கும் புதிய ஸ்மார்ட்போன்; ரெட்மி பிளான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata