Benefits of Having Higher CIBIL Score: சிபில் ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருப்பதால், பல நீண்ட கால நன்மைகள் உள்ளன. இதனால் பிரீமியம் கிரெடிட் கார்டுகள் மற்றும் பிரத்யேக வங்கிச் சேவைகள் போன்ற சில சிறப்பு சலுகைகளை பெறலாம். இது தவிர, சில நிறுவனங்கள் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் போது கூட அவர்களின் கிரெடிட் ஸ்கோரையும் சரிபார்க்கின்றன. இது குறிப்பாக நிதி மற்றும் முக்கியமான தகவல் தொடர்பான வேலை வாய்ப்புகளில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. இந்த வகையில், அதிக CIBIL மதிப்பெண் உங்களுக்கு வேலை கிடைப்பதற்கும் உதவும். உயர் CIBIL ஸ்கோரின் 5 நீண்ட கால நன்மைகளை அறிந்து கொண்டால், உங்கள் CIBIL ஸ்கோரை அதிகமாக வைத்திருக்க நீங்கள் நிச்சயம் முயற்சி செய்வீர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிபில் கிரெடிட் ஸ்கோர் என்பது 300- 900க்கும் இடைப்பட்ட மூன்று இலக்க எண்ணாகும். 300 என்பது மிகக் குறைந்த ஸ்கோர்.  900 என்பது அதிகபட்ச ஸ்கோர். இது அளவு கடந்த காலத்தில், நிதி ரீதியாக நீங்கள் எடுத்துள்ள முடிவுகளையும், நிதி தொடர்பான பொறுப்புகளை நீங்கள் நிறைவேற்றியதையும் பிரதிபலிக்கிறது.


1. கடன் பெறுவது எளிதாக இருக்கும்


அதிக கிரெடிட் ஸ்கோர் (Credit Score) வாடிக்கையாளரின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. இது உங்கள் கடன், கிரெடிட் கார்டு போன்றவற்றுக்காக நீங்கள் விண்ணப்பிக்கும் போது, அதற்கு கிடைக்கும் ஒப்புதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்கும் போது, ​​அதிக கடன் வரம்புகளுக்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள். நீங்கள் அதிக கடன் தொகையைப் பெறலாம் (Loan Tips) மற்றும் விதிமுறைகளும் எளிதாக இருக்கும்.


2. வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும்


வீட்டுக் கடன், தனிநபர் கடன் அல்லது வாகனக் கடன் எதுவாக இருந்தாலும், உங்கள் கிரெடிட் ஸ்கோர்  அல்லது சிபில் ஸ்கோர் (CIBIL Score) அதிகமாக இருந்தால், உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும். குறைந்த வட்டி விகிதத்தில் கிரெடிட் கார்டு வசதியும் கிடைக்கும். குறைந்த வட்டி விகிதம் இருந்தால், அதிக அளவில் பணத்தை சேமிக்கலாம்.


மேலும் படிக்க | Post Office FD: ரூ.5 லட்சத்தை 10 லட்சமாக்கும் அஞ்சலக வைப்பு திட்டம்..!!


3. கடன் ஒப்புதல் விரைவாக கிடைக்கும்


அதிக சிபில் ஸ்கோர் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு கடன் வழங்குபவர்கள் பெரும்பாலும் விரைவான ஒப்புதல் செயல்முறையைக் கடைபிடிக்கின்றனர். ஏனெனில் அவர்களுக்கு கடன் கொடுப்பது ரிஸ்க் குறைவான கடனாக கருதப்படுகிறது. அதாவது, உங்கள் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால், உங்களுக்கு விரைவில் கடன் கிடைக்கும். முன் ஒப்புதல் பெற்ற கடனையும் பெறலாம்.


4.  விரும்பிய வகையில் கடன் ஒப்பந்தத்தைப் பெறலாம்


அதிக கிரெடிட் ஸ்கோர் உங்களுக்கு அதிக பேரம் பேசும் சக்தியை அளிக்கிறது, அதாவது நீங்கள் விரும்பும் வகையில் கடன் ஒப்பந்தத்தைப் பெற பேச்சுவார்த்தை நடத்தலாம். குறைந்த வட்டியில் கடன் பெறலாம். நீங்கள் உங்களுக்கு சாதகமான வகையில் கடனை திருப்பிச் செலுத்தும் விதிமுறைகளை பெற பேச்சுவார்த்தை நடத்தலாம்.


5. குறைந்த காப்பீட்டு பிரீமியம்


சில காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டு பிரீமியத்தை தீர்மானிக்கும் போது கிரெடிட் ஸ்கோரையும் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால், உங்களுக்கு குறைந்த அளவிலான காப்பீட்டு பிரீமியத்தைப் பெறலாம்.


மேலும் படிக்க | SCSS Vs மூத்த குடிமக்களுக்கான வங்கி FD... வட்டி வருமானத்தை அள்ளிக் கொடுப்பது எது..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ