சொந்த வீடு கட்டி குடும்பத்தோடு குடியிருக்க வேண்டும் என்பது பலரின் வாழ் நாள் கனவாக இருக்கிறது. அதற்காக சிறுக சிறுக சேமித்து சொந்த நிலம் வாங்கும் பலருக்கும் வீடு கட்ட பணம் இருப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டே வங்கிகள் வீட்டுக் கடன்களை குறைந்த வட்டியில் வழங்குகின்றன. தேசிய வங்கி மற்றும் தனியார் முதல் சிறு குறு நிதி நிறுவனங்கள் வரை வீட்டுக் கடன்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றன. காரணம் வீட்டு கடன்களுக்கான தொகை உத்தரவாதம் இருப்பதால், அவற்றை வங்கிகள் முதன்மையாக பரிசீலிக்கின்றன. இப்போது நீங்கள் வீடு கட்ட திட்டமிட்டு வங்கிக் கடனை எதிர்பார்த்து இருந்தால் பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் முயற்சி செய்யுங்கள். குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்களை கொடுக்க தயாராக இருக்கிறது. இப்போது கொடுக்கும் வீட்டு கடன்களுக்கான குறைந்த வட்டி என்பது மார்ச் 31 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | EPFO அதிக ஓய்வூதியத் திட்டம் 2023: விண்ணப்பிக்க கடைசி தேதி..! எப்படி விண்ணப்பிக்கலாம்


எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?


உங்களுக்கு வீட்டுக் கடன் தேவைப்பட்டால் அருகில் இருக்கும் பாங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு செல்லுங்கள். அங்கு உங்களின் புதிய வீடு கட்ட இருக்கும் திட்டத்தையும், அதற்கான ஆவணம் குறித்த தகவலையும் வங்கி வீட்டு கடன் பிரிவு ஊழியரிடம் தெரிவியுங்கள். அவர் புதிய வீடு அமைய இருக்கும் இடம், அதற்கான ஆவணங்களை பரிசீலித்து, உங்களின் பழைய கடன் விவரம் மற்றும் வருவாய் ஆதாரங்களை குறித்து அறிந்து கொண்டு கடன் வழங்குவதற்கான செயல்முறையை முன்னெடுப்பார். 


பாங்க் ஆஃப் பரோடா வட்டி 


வீட்டுக் கடன்களுக்கான வட்டிவ விகிதத்தை பாங்க் ஆஃப் பரோடா குறைத்திருக்கிறது. இந்த வங்கியில் இப்போது 8.5 விழுக்காட்டில் வங்கி கடன் கொடுக்கப்படுகிறது. புதிய வீடு கட்ட கடன் எதிர்பார்ப்பவர்களுக்கு இது உகந்த நேரம் என்று கூட சொல்லலாம். இதில் கூடுதல் அம்சம் என்னவென்றால் வீட்டு கடன்களுக்கான செயலாக்க கட்டணங்களையும் பாங்க் ஆஃப் பரோடா முழுமையாக தள்ளுபடி செய்திருக்கிறது. ஆனால், மார்ச் 31 ஆம் தேதிக்குள் வரும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். மேலும் விபரங்களுக்கு அருகில் இருக்கும் பாங்க் ஆஃப் பரோடா வங்கி கிளைகளுக்கு நேரில் சென்று கூடுதல் விவரங்களை கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். 


மேலும் படிக்க | பழைய ரூபாய் தாள்களை வெளிநாட்டினர் இப்போதும் மாற்றிக் கொள்ளலாமா? முக்கிய அறிவிப்பு


மேலும் படிக்க | Home Loan: மிக குறைந்த வட்டியில் வீட்டு கடன் பெற ஏற்ற வங்கிகள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ