SBI அம்ரித கலசம் திட்டம்... இன்னும் 13 நாட்களே உள்ளன... மிஸ் பண்ணாதீங்க!
SBI Amrit Kalash FD Scheme: பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்திய, அமிர்த கலச திட்டம் என்னும் சிறப்பு எஃப்டி திட்டத்திற்கு வாடிக்கையாளர் மத்தியில், பலத்த ஆதரவு இருந்ததால், இதில் முதலீடு செய்வதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, கொண்டு வந்துள்ள சிறப்பு நிலையான வைப்பு திட்டமான எஸ்பிஐ அமிர்த கலசம் என்னும் திட்டத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய, 2024 மார்ச் 31ஆம் தேதி தான் கடைசி தினம். அமிர்த கலச திட்டம் என்னும் சிறப்பு எஃப்டி திட்டத்திற்கு வாடிக்கையாளர் மத்தியில், பலத்த ஆதரவு இருந்ததால், இதில் முதலீடு செய்வதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது.
எஸ்பிஐ அமிர்த கலச திட்டத்திற்கு கிடைக்கும் வட்டி விகிதம்
அமிர்த கலசம் என்னும் 400 நாட்களுக்கான எஃப்டி திட்டத்தில் செய்யும் முதலீடுகளுக்கு 7.6 சதவீத வட்டி கிடைக்கும். இது மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம். சாதாரண வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்ட முதலீட்டின் மூலம் 7.10% வட்டி கிடைக்கும். யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் ஆஃப்லைன் அல்லது ஆன்லைனில் முதலீடு செய்யலாம். SBI (State Bank of India) அமிர்த கலச திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள், கடன் வசதியும் பெறலாம்.
முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தை எடுப்பதற்கான நிபந்தனைகள்
முதிர்வு காலத்துக்கு முன்பே பணத்தை திரும்ப பெற்றால், உங்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதம் 0.5% முதல் 1% வரை குறைக்கப்படும். அமிர்த கலசம் சிறப்பு எப்டி திட்டத்திற்கான வட்டியை, உங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாதாந்திரமாகவோ, காலாண்டு, அல்லது அரையாண்டுகளுக்கு ஒரு முறையோ பெறலாம். முதலீட்டிற்கான வட்டி வருமானம் உங்கள் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.
எஸ்பிஐ வங்கியின் பிற FD திட்டங்கள்
எஸ்பிஐ கிரீன் டெபாசிட் திட்டம்
அமிர்த கலசம் எப்டி திட்டத்தைத் தவிர, எஸ்பிஐ கிரீன் டெபாசிட் இன்னும் திட்டத்தையும் பாரத ஸ்டேட் வங்கி கொண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முதலீட்டாளர்கள் 1111 நாட்கள், 1777 நாட்கள், 2222 நாட்கள் ஆகிய கால அளவில் முதலீடு செய்யலாம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) உட்பட அனைத்து தனிநபர்களும் இந்தத் திட்டம் மூலம் பயனடையலாம். தற்போது இந்த திட்டம் கிளை நெட்வொர்க் மூலம் கிடைக்கிறது. எனினும் விரைவில் இது 'YONO' செயலி மற்றும் ஆன்லைன் பேங்கிங் போன்ற டிஜிட்டல் முறையிலும் கிடைக்கும். இந்த திட்டங்களில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் பணம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நீர் பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு போன்ற துறைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
SBI WeCare திட்டம்
பாரத ஸ்டேட் வங்கி, கடந்த 2020 ஆம் ஆண்டு, மூத்த குடிமக்களுக்கான பிரத்தியேக திட்டமான எஸ்பிஐ விகேர் திட்டம் (SBI WeCare) என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இதில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வழக்கமான வட்டி விகிதத்தை விட கூடுதலாக 0.5% வட்டி வழங்கப்படுகிறது.
SBI வங்கியின் வழக்கமான FD திட்டங்களுக்கு கிடைக்கும் வட்டி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பொது மக்களுக்கு, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு செய்யப்படும் எஃப்டி முதலீடுகளுக்கு, 3.5% முதல் 7% வரையினான வட்டி அளிக்கிறது. இதில் மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.5% அதிக வட்டி கிடைக்கும். அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு 4 % முதல் 7.5% என்ற அளவில் வட்டி கிடைக்கும்.
மேலும் படிக்க | LIC Index Plus policy: பங்கு சந்தை சார்ந்த அசத்தலான புதிய பாலிஸி... முழு விபரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ