LIC Index Plus policy: பங்கு சந்தை சார்ந்த அசத்தலான புதிய பாலிஸி... முழு விபரம்!

LIC Index Plus policy: இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு சேவை நிறுவனமான எல்ஐசி,பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்ட புதிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 16, 2024, 03:25 PM IST
LIC Index Plus policy: பங்கு சந்தை சார்ந்த அசத்தலான புதிய பாலிஸி... முழு விபரம்! title=

LIC Index Plus policy: இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு சேவை நிறுவனமான எல்ஐசி புதிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்ட யூனிட்- லிங்க்ட் திட்டமான இது, வழக்கமான பிரீமியத்துடன் கூடிய தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ஆகும். அதில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் எல்ஐசி இன்டெக்ஸ் பிளஸ் திட்டம் ஒரு ULIP திட்டம் என்பதால் ஆயுள் காப்பீட்டுடன் சேர்த்து உங்கள் ப்ரீமியம் யூனிட்களாகும் சேமிக்கப்பட்டு பாலிசி காலம் முழுவதும் லாபத்தை தரும்.

எல்ஐசி இண்டெக்ஸ் பிளஸ் என்பது மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் சேமிக்கும் வகையிலான ஆப்ஷன்களை அளிக்கும் ஒரு ப்ரீமியம் திட்டமாகும். பாலிசிதாரரின் வயது 51 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் பாலிசி கவரேஜ் 7 மடங்காகவும், 51 அண்டுகளுக்கு கீழ் இருந்தால் பாலிசி கவரேஜ் 7 மற்றும் 10 மடங்காகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாண்டுகளின் ஆரம்ப லாக்-இன் காலத்திற்குப் பிறகு, பாலிசிதாரர்கள் சில நிபந்தனைகளின் கீழ் யூனிட்களை ஓரளவு திரும்பப் பெறும் ஆப்ஷனும் உள்ளது. கூடுதலாக, வருடாந்திர பிரீமியத்தின் சதவீதமாக கணக்கிடப்பட்ட உத்தரவாத பலன்கள், மீதமுள்ள பாலிசி ஆண்டுகளுக்குப் பிறகு யூனிட் ஃபண்டில் சேர்க்கப்படும் என்று எல்ஐசி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | DA, DR உயர்வு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோரின் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா?

பாலிஸி விதிகள்

1. பாலிஸியில் சேர்வதற்கான வயது வரம்பு

காப்பீட்டுத் திட்டத்திற்கு, தனிநபர்களின் வயது குறைந்தது 90 நாட்களாக இருக்க வேண்டும் மற்றும் அவர்களின் காப்பீட்டு தொகையைப் பொறுத்து, வயது 50 அல்லது 60 வயதாக இருக்கலாம். 

2. ப்ரீமியம் தொகை

திட்டத்தில் சேரும் 90 நாட்கள் வயதான குழந்தை மற்றும் 50 வயதினருக்கான தனிநபர்களுக்கான அடிப்படை காப்பீட்டுத் தொகை ஆண்டு பிரீமியத்தின் 7 முதல் 10 மடங்கு வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரீமியம் உங்கள் வயதின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

3. பாலிஸி முதிர்ச்சியின் குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்

4. முதிர்வின் போது அதிகபட்ச வயது: அடிப்படை உத்தரவாதத் தொகையைப் பொறுத்து 75 அல்லது 85 ஆண்டுகள் .

5. குறைந்தபட்ச பாலிசி காலம்: வருடாந்திர பிரீமியத்தைப் பொறுத்து 10 அல்லது 15 ஆண்டுகள்

 6. அதிகபட்ச காலம் 25 ஆண்டுகள். பிரீமியம் செலுத்தும் காலமும் பாலிசி காலமும் ஒன்றே தான் .

7. குறைந்தபட்ச பிரீமியம்: பிரீமியம் செலுத்தும் முறையை பொறுத்து ₹30000/-(ஆண்டு ப்ரீமியம்), ₹15000/-(அரையாண்டு ப்ரீமியம்), ₹7500/-(காலாண்டு ப்ரீமியம்), மற்றும் மாதாந்திர ப்ரீமியம் ₹2500/- என்ற அளவில் இருக்கும்

8. அதிகபட்ச பிரீமியம்: குறிப்பிட்ட வரம்பு ஏதும் இல்லை.

பாலிஸி திட்டத்தில் 2 ஃபண்டுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் கிடைக்கும்

பாலிசிதாரர்கள் பிரீமியம் முதலீட்டிற்கான இரண்டு விதமான முதலீடுகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். அவை Flexi Growth Fund மற்றும் Flexi Smart Growth Fund. இந்த நிதிகள் முதன்மையாக தேசிய பங்குச் சந்தை NSE Nifty 100 இன்டெக்ஸ் அல்லது தேசிய பங்குச் சந்தை NSE Nifty 50 ஆகியவற்றின் ஒரு பகுதியாக இருக்கும். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளில் முதலீடு செய்லாம் . பாலிசிதாரர்கள் முதலில் இந்த ஃபண்டுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதுடன், தேவைக்கேற்ப முதலீட்டு முறையை மாற்றிக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | ஏழைகள் கூட ‘இந்த’ கார்களை வாங்கலாமாம்! மிஸ் பண்ணிடாதீங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News