Investment Tips: இதில், இப்படி முதலீடு செய்தால் போதும், சில ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரர்
Investment Tips: நாம் செய்யும் முதலீட்டை சரியான இடத்தில் செய்ய வேண்டும். அதாவது, எங்கு முதலீடு செய்தால், நாம் அதிகப்படியான லாபத்தை காண முடியும் என்பதை நன்கு ஆராய வேண்டும்.
பணக்காரராக வேண்டுமென்றால், பணம் கொண்டு பணம் ஈட்ட வேண்டும் என்று ஒரு பழமொழி உள்ளது. அதாவது, எதிர்காலத்தில் பணக்காரராக, இக்காலத்தில் உங்களிடம் இருக்கும் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். நாம் செய்யும் முதலீட்டை சரியான இடத்தில் செய்ய வேண்டும். அதாவது, எங்கு முதலீடு செய்தால், நாம் அதிகப்படியான லாபத்தை காண முடியும் என்பதை நன்கு ஆராய வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான நிபுணர்கள் முதலீட்டைப் பொறுத்தவரை மியூசுவல் ஃபண்டுகள் மிகவும் நல்லது என்று கருதுகின்றனர். சந்தையின் சக்தியை நீங்கள் அறிந்திருந்தால், அதன் முக்கியத்துவத்தையும் நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருந்தால், சில ஆண்டுகளிலேயே நீங்கள் கோடீஸ்வரராகும் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. இதை எப்படி செய்வது என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
வெறும் ரூ. 5000 மட்டும் முதலீடு செய்தால் போதும்
நிதி நிபுணர் ஷிகா சதுர்வேதி, நல்ல மியூச்சுவல் ஃபண்டைத் தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்தால், சில வருடங்களில் கோடீஸ்வரனாவது கடினம் அல்ல என்று கூறியுள்ளார். ஒரு நல்ல மியூசுவல் ஃபண்டு பொதுவாக ஆண்டுக்கு 12% வரை வட்டி அளிக்கிறது. சில சமயம் இது 14 முதல் 15 சதவீதம் கூட அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த வகையில் நீங்கள் முதலீட்டில் நல்ல லாபத்தைப் பெற முடியும்.
ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்டில் மாதம் ரூ.5000 வரை முதலீடு செய்தால், அடுத்த 23 ஆண்டுகளில் 12 சதவீத வட்டியில் தொகை 1 கோடியாகிவிடும் என்கிறார் ஷிகா. 23 ஆண்டுகளில் உங்கள் முதலீடு மொத்தம் 1380000 ரூபாயாக இருக்கும். வட்டி விகிதம் இதை விட சிறப்பாக இருந்தால், உங்கள் பணம் அதிகமாக அதாவது சுமார் 1.25 கோடியை எட்டும்.
சரியான மியூச்சுவல் ஃபண்டை எவ்வாறு தேர்வு செய்வது
முதலீட்டிற்கு சரியான மியூச்சுவல் ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமாகும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய மியூசுவல் ஃபண்டுகளை தேர்ந்தெடுப்பது மிக அவசியம். ஒவ்வொரு நபரும் முதலீடு செய்வதற்கு முன் தனது நிதி இலக்கை முடிவு செய்ய வேண்டும், அதன் பிறகு எந்த மியூச்சுவல் ஃபண்ட் அதற்கு ஏற்றதாக இருக்கும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.
உங்களுக்கு ஏற்ற மியூசுவல் ஃபண்டை தேர்வு செய்ய, முதலில் சிறந்த மியூச்சுவல் ஃபண்டிற்கான சிறந்த போட்டியாளர்களின் பட்டியலை உருவாக்கவும். அவற்றை ஒப்பிட்டு, எது உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்பதைப் பார்க்கவும். நீங்கள் விரும்பினால், நிதி ஆலோசகரின் உதவியையும் பெறலாம்.
ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத்திற்கான வசதி
மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமாகவும் மாதாந்திர ஓய்வூதியம் பெறலாம். மியூச்சுவல் ஃபண்ட் சிஸ்டமிக் வித்ட்ராயல் திட்டத்தின் கீழ் (Systematic Withdrawal Plan), நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து ஒரு நிலையான தொகையைத் திரும்பப் பெறுவீர்கள். இதில் உங்கள் கணக்கு தொகை ஒரு கோடி என்றால், மாதந்தோறும் 50 முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை மாத ஓய்வூதியம் கிடைக்கும். 50 லட்சம் வரை நிதி இருந்தால், 25 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். நல்ல விஷயம் என்னவென்றால், இதற்குப் பிறகும் உங்கள் வைப்புத்தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
SWP ஐ எவ்வாறு தொடங்குவது
முறையான முதலீட்டுத் திட்டத்தைப் போலவே சிஸ்டமிக் வித்ட்ராயல் திட்டம் செயல்படுகிறது. SWP-ஐ எந்த நேரத்திலும் தொடங்கலாம். நீங்கள் ஒரு திட்டத்தில் முதலீடு செய்துகொண்டிருந்தால், அதில் SWP ஆப்ஷனை செயல்படுத்தலாம். வழக்கமான பணப்புழக்கத் தேவைக்காக எப்போது வேண்டுமானாலும் இதைத் தொடங்கலாம். SWPஐச் செயல்படுத்த, ஃபோலியோ எண், வித்ட்ராயலின் ஃப்ரீக்வென்சி, பணத்தை முதல் முறை எடுக்கும் தேதி, பணத்தைப் பெறும் வங்கிக் கணக்கு ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஏஎம்சி-யில் அறிவுறுத்தல் சீட்டை (இன்ஸ்ட்ரக்ஷன் ஸ்லிப்) நிரப்ப வேண்டும்.
மேலும் படிக்க | HDFC வங்கியில் அக்கவுண்ட் இருக்கா? அப்போ உடனே இதை படியுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ