எச்சரிக்கை LIC பெயரில் போலி அழைப்புகள்!! என்ன செய்ய வேண்டும்; செய்யக்கூடாது -அறிக
LIC பெயரில் உங்களுக்கு பல போலி அழைப்புகள் வரும். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்காக என்ன செய்ய வேண்டும்; செய்யக்கூடாது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Beware LIC Policy Holder: நீங்கள் எல்.ஐ.சியின் வாடிக்கையாளராக இருந்தால், LIC நிறுவனம் போலி அழைப்புகள் குறித்து சிறப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி -LIC) தனது வாடிக்கையாளர்களுக்கு எல்.ஐ.சி அதிகாரிகள், முகவர்கள், ஐ.ஆர்.டி.ஏ அதிகாரிகள், ஈ.சி.ஐ அதிகாரிகள் (நிர்வாக கவுன்சிலின் காப்பீட்டு கவுன்சில் அலுவலகம் போன்றவை) என்ற பெயரில் வரும் போலி அழைப்பை குறித்து, நீங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளது.
ALSO READ | உங்கள் பணப் பிரச்சினையை தீர்க்கும் LIC.. இனி பாலிசியுடன் கடன் வழங்கப்படும்
வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்காக எல்.ஐ.சி (Life Insurance Corporation) அதிகாரிகள் அல்லது ஏஜெண்டுகள் என்ற போர்வையில் மோசடி நடப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பெரிய பரிசி, பெரிய வாக்குறுதிகள் கொண்ட போலி திட்டங்களுடன் மக்களை கவர்ந்திழுக்க இந்த அழைப்புகள் பெரும்பாலும் செய்யப்படுகின்றன.
பாலிசிதாரர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் உங்கள் போனஸ் தகவல்களைக் குறித்து பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று காப்பீட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. பாலிசிதாரர்கள் தங்களின் தற்போதைய பாலிசியை நிறுத்த இது ஒருபோதும் நிறுவனத்தால் ஊக்குவிப்பதில்லை. அதுபோன்ற கால்களை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
ALSO READ | LIC பாலிசிதாரரா நீங்கள்...? உங்களுக்காகவே ஒரு மகிழ்ச்சியான செய்தி...
உங்களுக்கு ஒரு போலி அழைப்பு வரும்போது இவற்றைக் கவனியுங்கள்:
எல்.ஐ.சி வலைத்தளமான www.licindia.in க்கு நீங்கள் எப்போது சென்றாலும், பாலிசி தகவலை சரிபார்க்கவும்.
வாடிக்கையாளர் LIC பராமரிப்பு எண்ணை அழைப்பதன் மூலம் நீங்கள் தகவல்களைப் பெறலாம்.
நீங்கள் விரும்பினால், நீங்கள் அருகிலுள்ள எல்.ஐ.சி கிளைக்கு நேரடியாக செல்லலாம்.
ஏதேனும் அழைப்பு உங்களுக்கு சந்தேகமாகத் தெரிந்தால், அந்த தொலைபேசி எண்ணுடன் தங்கள் அதிகார வரம்பின் காவல் நிலையத்தில் புகார் அளிக்க எல்.ஐ.சி அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறது.
சந்தேகத்திற்கிடமான அழைப்பு விவரங்களை spuriouscalls@licindia.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் தெரிவிக்க வேண்டும்.
ALSO READ | பெண்களுக்கான LIC Aadhaar Shila திட்டம்; அதன் சிறப்பு, விதிமுறை அறிந்து கொள்ளுங்கள்