LIC Policy Loan: நாடு முழுவதும் கொரோனா (Coronavirus) நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான சூழ்நிலையில், அனைவருக்கும் பணம் மிகவும் தேவையாக உள்ளது. மக்களிடம் போதிய பணம் இல்லாத நிலையில், பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அது அவர்களின் வாழ்வாதரத்தை பெரிதும் பாதித்துள்ளது. ஆனால் LIC-யின் புதிய கொள்கை உங்களுக்கு பணத்தேவையை பூர்த்தி செய்யும். அதாவது நீங்கள் பணப்பிரச்சனையில் சிக்கிக்கொண்டால், சிறிதும் வருத்தப்பட வேண்டாம். ஏனெனில் இப்போது எல்.ஐ.சி (LIC) இந்த சிக்கலை நீக்கும். உங்களிடம் ஏதேனும் எல்.ஐ.சி பாலிசி (LIC Policy) இருந்தால், நீங்கள் பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து பார்ப்போம்.
நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யிடம் (Life Insurance Corporation) காப்பீட்டு வாங்கியிருந்தால், நீங்கள் பிரீமியம் தொகைக்கு பதிலாக கடன் பெறலாம். உங்கள் தேவைகளுக்கு ஈடாக எல்.ஐ.சி யிலிருந்து தனிப்பட்ட கடன் பெறலாம்.
Read Also | பெண்களுக்கான LIC Aadhaar Shila திட்டம்; அதன் சிறப்பு, விதிமுறை அறிந்து கொள்ளுங்கள்
Read Also | சூரிய கிரகணம் 2020: டெல்லி, குர்கானில் கிரகணம் தென்படும் நேரங்கள் இங்கே
எல்.ஐ.சியின் (LIC Policy) புதிய கொள்கை காரணமாக, நீங்கள் கடன் வாங்க எங்கும் செல்ல வேண்டியதில்லை, மாறாக வீட்டில் இருந்தபடியே நிறுவனம் உங்களுக்கு கடன் வழங்கும். இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், இந்த கடனை நீங்கள் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை. பாலிசி (LIC Policy Loan) முதிர்ச்சியடைந்த பிறகு, நிறுவனம் கடனுக்கான தொகையை கழித்துவிட்டு, மீதமுள்ள பணத்தை உங்களுக்கு திருப்பி அளிக்கும். அதாவது, நீங்கள் அதன் வட்டியை மட்டுமே திருப்பிச் செலுத்த வேண்டும், மேலும் பாலிசியில் உறுதிப்படுத்தப்பட்ட தொகையில் இருந்து, உங்கள் கடன் தொகையை நிறுவனம் கழித்துக்கொள்ளும்.
எல்.ஐ.சி (LIC) நிறுவனத்தில் கடன் வாங்க இந்திய குடிமகனாக இருப்பது அவசியம். இது தவிர, நீங்கள் எல்.ஐ.சி பாலிசியை வாங்கி இருக்க வேண்டும். கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும். உங்கள் வயது 18 வயதுக்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். பாலிசியின் உறுதிப்படுத்தப்பட்ட மதிப்பில் அதிகபட்சம் 90 சதவீதம் வரை நீங்கள் கடன் பெறலாம்.
Read Also | தமிழ்நாட்டில் COVID-19 எப்போது முடிவடையும்? முதல்வர் சொன்ன "பலே" பதில்
Read Also | பிரதமர் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் ரூ.6000 பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
எல்.ஐ.சி பாலிசி (LIC policy) மூலம் நீங்கள் வாங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 9 சதவீதம் ஆகும். இந்த கடனை குறைந்தபட்சம் ஆறு மாத காலத்திற்கு நீங்கள் வாங்கலாம்.
எல்.ஐ.சியின் இந்த திட்டம் குறித்த முழுமையான தகவல்களை நிறுவனத்தின் இணையதளத்தில் பெறலாம். எல்.ஐ.சி வலைத்தளமான https://www.licindia.in/home/policyloanoptions ஐப் பார்வையிட்டு ஆன்லைன் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிட்ட பிறகு, நீங்கள் ஒரு படிவத்தைப் பெறுவீர்கள், அதை நீங்கள் முழுமையாக நிரப்ப வேண்டும். அதில் கோரப்பட்ட அனைத்து தகவல்களையும் நீங்கள் நிரப்ப வேண்டும். இது தவிர, உங்கள் கையொப்பத்தை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இதற்குப் பிறகு உங்கள் செயல்முறை நிறைவடையும். இதற்குப் பிறகு, எல்.ஐ.சி உங்களுக்கு கடன் கொடுக்கும்.