Pensioners Latest News: மாத ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரரா நீங்கள்? உங்கள் வீட்டில் ஓய்வூதியம் பெறும் முதியோர் இருக்கிறார்களா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஓய்வூதியதாரர்களுக்கு அவ்வப்போது மத்திய அரசு பல வித புதுப்பித்தல்களை வெளியிடுகிறது. ஓய்வூதியதாரர்களுக்கு, ஓய்வூதியம் பெறும் செயல்முறையை எளிதாக்கவும், கூடுதல் வசதிகளை செய்து கொடுக்கவும் பல வகையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Unified Pension Scheme


ஆகஸ்ட் மாதத்தில், புதிய ஓய்வூதியத் திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) அரசு அமல்படுத்தியது. அப்போதிருந்து, டிஜிட்டல் குற்றவாளிகள் அதை தங்கள் ஆயுதமாக்கி வருகின்றனர். யுபிஎஸ் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் என்பதால், இது குறித்த பல வித சந்தேகங்களும், கேள்விகளும் பலருக்கு இருப்பது சகஜம். அதை பயன்படுத்தும் ஆன்லைன் மோசடிக்காரர்கள் இதை தங்கள் தீய நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். 


ஓய்வூதியத் திட்டம் தொடர்பான பல போலி தொலைப்பேசி அழைப்புகள் பலருக்கு வந்த வண்ணம் உள்ளன. உங்களுக்கும் அப்படி ஒரு அழைப்பு வந்தால் கவனமாக இருங்கள். ஏனெனில் தற்போது ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இப்படிப்பட்ட போலி தொலைபேசி அழைப்புகள் வந்த வாண்ணம் உள்ளன. மேலும், கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ளுமாறும் அவர்கள் மீது அழுத்தம் கொடுக்கப்படுகிறது. 


போன் செய்யும் மோசடி நபர்கள், பிபிஓ எண் (PPO), பிறந்த தேதி மற்றும் வங்கிக் கணக்குத் தகவல்களைக் கேட்கிறார்கள். பதற்றத்துக்கு ஆளாகும் ஓய்வூதியம் பெறுவோர் சில சமயங்களில், இந்த போலி அழைப்புகளை உண்மையான அழைப்பு என எண்ணி தகவக்களை பகிர்ந்து விடுகிறார்கள். 


Pensioners: அரசு விடுத்துள்ள எச்சரிக்கை


எனினும், ஓய்வூதியதாரர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்று அரசு கூறியுள்ளது. அப்படி செய்தால், கணக்கில் உள்ள தொகை முழுவதும் ஒரு நொடியில் காலியாக வாய்ப்புள்ளது. போலி அழைப்புகளை செய்யும் மோசடி நபர்கள், தகவல்களை தெரிவிக்காவிட்டால், வரும் டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் மிரட்டுகின்றனர். எனினும், இப்படிப்பட்ட மிரட்டல்களுக்கு அஞ்சத் தேவையில்லை என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.


மேலும் படிக்க்க | SIP Mutual Fund: தினம் ரூ.167 முதலீடு போதும்... 50வது வயதில் ரூ.5 கோடி கையில் இருக்கும்


Central Government: மத்திய ஓய்வூதிய கணக்கு அலுவலகம் வெளியிட்ட ஆலோசனை


போலி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகமானதை அடுத்து, ​​மத்திய ஓய்வூதியக் கணக்கு அலுவலகத்திற்கு இது பற்றிய தகவல் கிடைத்தது. ஏனென்றால், நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய ஓய்வூதியக் கணக்கு அலுவலகத்தின் அதிகாரி போல் நடித்து மோசடிக்காரர்கள் அழைக்கிறார்கள். செப்டம்பர் மாதமே அலுவலகத்திலிருந்து இது குறித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், 'மோசடி நபர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு வாட்ஸ்அப், மின்னஞ்சல், எஸ்எம்எஸ் மூலம் படிவங்களை அனுப்பி நிரப்பச் சொல்வதாக கூறப்பட்டது. மேலும், இந்த படிவத்தை பூர்த்தி செய்யாவிட்டால் அடுத்த மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் மிரட்டலும் விடுத்துள்ளனர். எனினும், இப்படிப்பட்ட செய்திகளை கண்டு பயந்து அவர்களின் வலையில் விழ வேண்டாம்.' என எச்சரிக்கப்பட்டது.


எச்சரிக்கை தேவை


ஓய்வூதியம் பெறுவோர் விழிப்புடன் இருக்குமாறு மத்திய ஓய்வூதிய கணக்கு அலுவலகம் (Central Pension Accounting Office) வேண்டுகோள் விடுத்துள்ளது. CPAO ஓய்வூதியம் பெறும் அல்லது குடும்ப ஓய்வூதியம் (Family Pension) பெறும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் PPO எண், பிறந்த தேதி மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய ஓய்வூதிய கணக்கு அலுவலகத்திலிருந்து யாரும் இப்படி ஓய்வூதியதாரர்களை அழைத்து விவரங்களை பெறுவதில்லை என CPO கூறியுள்ளது. இப்படி அழைப்பவர்கள் மோசடிக்காரர்கள் என்றும், அவர்களின் விலையில் விழ வேண்டாம் என்றும் CPO எச்சரித்துள்ளது.


மேலும் படிக்க்க | 5 ஆண்டுகளில் 1 கோடி வீடுகள்: மோடி அரசின் அட்டகாசமான வீட்டு வசதி திட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ