Weight Loss Tips: உடல் பருமன் என்பது இந்த நவீன யுகத்தில் பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றது. பல இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பது பலருக்குத் தெரிவதில்லை. எடை இழப்பில் காலை எழுந்தவுடன் நாம் உட்கொள்ளும் உணவுக்கும் பானங்களுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. காலை வேளையில் சரியான உணவுகளுடன் நாளைத் தொடங்குவது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக இருக்க வைக்கும்.
காலை உணவுகள் மூலம் எடை இழப்பு முயற்சிக்கு வலு சேர்க்கலாம். ஊட்டச்சத்து நிறைந்த, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், கொழுப்பை எரிக்கும் உணவுகளை காலை உணவுகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உங்களை உற்சாகமாக இருக்கவும், பசியைக் கட்டுப்படுத்தவும், கூடுதல் கொழுப்பு மற்றும் கலோரிகளை விரைவாக வெளியேற்றவும் உதவுகிறது. தினமும் காலையில் தொடர்ந்து சாப்பிட்டால் தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை விரைவாக குறைக்க உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடையை குறைக்க காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவுகள்:
ஊறவைத்த பாதாம்,வால்நட்ஸ்:
பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற உலர் பழங்களில் நல்ல கொழுப்புகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. அவற்றை இரவில் ஊறவைப்பதால் செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் சக்தி அதிகரிக்கிறது. காலையில் ஒரு கையளவு பருப்புகளை ஊறவைத்து உட்கொள்வது நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கும். அவற்றின் ஆரோக்கியமான கொழுப்புகள் மூளையின் செயல்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கின்றன. இவை உடல் எடையை வேகமாக குறைகக் உதவும்.
நெல்லிக்காய் சாறு
நெல்லிக்காய், வைட்டமின் சி நிறைந்த சூப்பர்ஃபுட் ஆகும். இது உடலில் உள்ள நச்சுகளை நீக்கி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றை உட்கொள்வது உடலில் உள்ள நச்சுகளை விரைவாக நீக்க உதவும். செரிமானத்தை மேம்படுத்தவும் கொழுப்பு இழப்பை ஊக்குவிக்கவும் இது உதவும். இதன் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கும். மேலும் இது உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பைக் கொடுக்கும். இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க இது ஒரு சக்திவாய்ந்த காலை பானமாக கருதப்படுகின்றது.
சூடான மஞ்சள், கருப்பு மிளகு நீர்
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் கொழுப்பை எரிக்கும் பண்புகள் உள்ளன. இது கருப்பு மிளகுடன் இணைந்தால், அதன் செயலில் உள்ள கலவை குர்குமின் ஆற்றல் அதிகமாகின்றது. மஞ்சள் மற்றும் கருப்பு மிளகை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து நாளின் தொடக்கத்தில் குடித்தால், உடலில் வீக்கம் குறையும், செரிமானம் சீராகும், கொழுப்பு வேகமாக எரிக்கப்படும்.
சியா விதை தண்ணீர்
சியா விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளன. ஒரு தேக்கரண்டி சியா விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அதை வெறும் வயிற்றில் குடிப்பது உங்கள் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை வழங்குகிறது. சியா விதை நீர் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கின்றது. உடல் எடையை குறைக்க இந்த பானம் மிக உதவியாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குளிர்காலத்தில் இந்த மசாலா பொருட்களை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டாம்!
மேலும் படிக்க | தைராய்டு பிரச்சனையின் முக்கிய அறிகுறிகள் இவைதான்: ஜாக்கிரதை!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ