Income Tax: இது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலம். வரி செலுத்துவோர் அனைவரும் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான ஆயத்தப்பணிகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில், வரி செலுத்துவோருக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. வருமான வரித்துறை (Income Tax Department) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இதை பற்றியும் இதனால் வரி செலுத்துவோருக்கு (Taxpayers) ஏற்படக்கூடும் நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரி செலுத்துவோர் / தொழிலதிபர்களுக்கு TDS/TCS பிடித்தம் தொடர்பாக அரசாங்கம் பெரிய நிவாரணத்தை  வழங்கியுள்ளது. PAN (நிரந்தர கணக்கு எண்) செயலிழப்பு தொடர்பாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சகத்தின் வருவாய்த்துறை இது தொடர்பான சுற்றறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. பான் செயலிழக்கப்பட்டால், இரட்டைக் கழித்தல் விதியிலிருந்து வரி செலுத்துவோர்  விலக்கு பெற்றுள்ளனர். இனி  செயலற்ற பான் மீது இரட்டைப் பிடித்தம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


இதனால் கிடைக்கும் பலன் என்ன?


பான் எண் செயல்படாத பட்சத்தில், இருமடங்கு வரியைக் கழிக்க, விலக்கு அளிக்கப்பட்டது.  இந்த விலக்கு மே 31, 2024 வரை தொடரும் . இரட்டைப் பிடித்தம் இல்லை என்ற விதி மே 31 வரை அமலில் இருக்கும். மார்ச் 31 வரை செய்யப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு இந்த விதியிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.


வருமான வரி செலுத்தோருக்கு இது ஒரு முக்கிய செய்தியாக வந்துள்ளது. இதை பற்றிய புரிதல் வைத்திருப்பது, வசதிகளை பயன்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.


TDS என்றால் என்ன? 


- மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (Tax deduction at source) அதாவது TDS என்பது ஒரு நபர் வாடகை, சம்பளம் அல்லது கமிஷன் போன்ற குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தும்போது கழிக்கப்படும் வருமான வரியாகும். 


- வெவ்வேறு வருமான ஆதாரங்களில் டிடிஎஸ் கழிக்கப்படுகிறது. 


- சம்பளம், வட்டி அல்லது ஏதேனும் முதலீடு மூலமாக பெறப்பட்ட கமிஷன் ஆகியவை பொதுவான உதாரங்களாகும். 


- TDS மூலம் அரசாங்கம் வரிகளை வசூலிக்கிறது. 


- எனினும், இது ஒரு நபரது அனைத்து வருமானத்திற்கும் பரிவர்த்தனைக்கும் பொருந்தாது.


- TDS கழிக்க வருமான வரித்துறை சில விதிகளை வகுத்துள்ளது. 


- அரசாங்கம் TDS -ஐ நேரடியாகக் கழிப்பதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


அரசாங்கக் கணக்கில் TDS -ஐ டெபாசிட் செய்வதற்கான பொறுப்பு கட்டணத்தை செலுத்தும் நபர் அல்லது கட்டணத்தை செலுத்தும் நிறுவனத்தை சார்ந்தது. TDS -ஐ கழிப்பவர்கள் டிடக்ட்ரஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். வரியைக் கழித்த பிறகு பணம் பெறுபவர்கள் டிடக்டீ என்று அழைக்கப்படுகிறார்கள்.


மேலும் படிக்க  | அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி: OPS -க்கு நிகராக புதுப்பிக்கப்படும் NPS, ஓய்வூதிய உத்தரவாதம்


டிடிஎஸ் விகிதங்கள் என்ன?


- TDS விகிதங்கள் 1 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உள்ளது.  
- ஒருவர் பெறும் சம்பளத்தின் டிடிஎஸ் பற்றி பேசினால், வருமான அடுக்கின் படி, அந்த நபரின் மொத்த வருமானத்தில் 10 சதவீதம் டிடிஎஸ் விதிக்கப்படுகிறது.
- ஃபிக்ஸ்ட் டெபாசிட், அதாவது FD மெச்யூர் ஆகி, அதன் மூலம் கிடைக்கும் தொகைக்கு 10 சதவீதம் வரை TDS செலுத்த வேண்டும். 
- வங்கியில், வாடிக்கையாளர் தனது பான் கார்டு (PAN Card) தகவலை கொடுக்கவில்லை என்றால், 20 சதவீதம் டிடிஎஸ் வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.


TCS என்றால் என்ன?


- TCS என்பது மூலத்தில் டெபாசிட் செய்யப்படும் வரி ஆகும். 


- இது வருமானத்திலிருந்து வசூலிக்கப்படும் வரி (Tax Collected from Income) என்றும் அழைக்கப்படுகிறது. 


- விற்பனையாளர்கள், வியாபாரிகள், வெண்டர்கள் மற்றும் கடைக்காரர்கள் ஆகியோர் TCS -ஐ செலுத்துகிறார்கள். 


- டிசிஎஸ் பொதுவாக அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளில் கழிக்கப்படுகிறது.


மேலும் படிக்க  | 8வது ஊதியக்குழு.. பட்ஜெட்டில் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ