EPFO புதிய விதிகள்: தனியார்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம், அரசு அறிவிப்பு விரைவில்
EPS Pension: மத்திய அரசு இபிஎஃப்ஓ -வின் கீழ் ஊதிய உச்சவரம்பை மாதத்திற்கு ரூ.15,000 -லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நடந்தால், சம்பள வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக இருக்கும்.
EPS Pension: பிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு அட்டகாசமான அப்டேட் உள்ளது. மத்திய அரசு இபிஎஃப்ஓ -வின் கீழ் ஊதிய உச்சவரம்பை மாதத்திற்கு ரூ.15,000 -லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நடந்தால், சம்பள வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக இருக்கும்.
Employee Pension Scheme
இது அமலுக்கு வந்தால், முதலாவதாக, EPF இல் இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) பங்களிப்பு அதிகரிக்கும். இதன் மூலம் பணி ஓய்வுக்குப் பிறகு அவர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கும். மேலும், இதற்கு பிறகு முன்பை விட அதிகமான ஊழியர்கள் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தில் பங்கேற்க முடியும்.
Wage Ceiling Limit
ஊதிய உச்சவரம்பு வரம்பு என்பது அதிகபட்ச சம்பள வரம்பு ஆகும். இந்த வரம்பின் அடிப்படையில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (Employees Provident Fund) மற்றும் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (Employees Pension Scheme) ஆகியவற்றில் பணியாளர்களின் பங்களிப்பு தீர்மானிக்கப்படுகிறது.
EPFO: EPS -கான பங்களிப்பு அதிகரிக்கும்
தற்போது, ஒவ்வொரு மாதமும் இபிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscribers) அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதம் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. நிறுவனமும் அதே அளவு தொகையை டெபாசிட் செய்கிறது. நிறுவனம் வழங்கிய பங்களிப்பில், 8.33 சதவீதம் ஊழியர்களின் ஓய்வூதிய நிதிக்கு (இபிஎஸ்) செல்கிறது, மீதமுள்ள 3.67 சதவீதம் இபிஎஃப் கணக்கிற்கு (EPF Account) செல்கிறது. தற்போதைய விதிகளின்படி, ஓய்வூதியம் பெறும் ஊதியத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.15 ஆயிரம் ஆகும். அதன் படி,
- ஒவ்வொரு மாதமும் அவரது ஓய்வூதியக் கணக்கிற்கு ரூ.15,000 X 8.33 / 100 = ரூ.1,250 செல்லும்.
- மீதமுள்ள 1,750 ரூபாய் EPF கணக்கில் செல்கிறது.
- ஆனால் ஓய்வூதிய ஊதியத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.21,000 ஆக உயர்ந்தால், ஓய்வூத்யத்திற்கான இபிஎஸ் கணக்கில் ரூ.21,000 X 8.33 /100 = ரூ.1,749 டெபாசிட் செய்யப்படும்.
- இபிஎஃப் -இல் ரூ.1,251 டெபாசிட் செய்யப்படும்.
Pension Calculation: ஓய்வூதிய கணக்கீடு
அடிப்படை சம்பளம் ரூ.21,000 ஆக உயர்ந்தால், ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். நீங்கள் 25 வயதில் வேலை செய்ய ஆரம்பித்து 58 வயதில் ஓய்வு பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதாவது நீங்கள் மொத்தம் 33 வருடங்கள் வேலை செய்திருக்கிறீர்கள். இபிஎஸ்ஸில் இருந்து வெளியேறும் முன் கடந்த 60 மாதங்களில் உங்களின் அதிகபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.21,000 ஆகக் கருதப்பட்டால், அதன் அடிப்படையில் ஓய்வூதியம் கணக்கிடப்படும்.
பணியாளர்களின் ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம், இபிஎஸ்ஸில் இருந்து வெளியேறுவதற்கு முன் கடந்த 60 மாதங்களுக்கான சராசரி மாதச் சம்பளமாகும். தற்போது இதற்கு 15,000 ரூபாய் வரம்பு உள்ளது. எனினும், மத்திய அரசு EPFO இன் கீழ் ஊதிய உச்சவரம்பை மாதத்திற்கு 21,000 ரூபாயாக உயர்த்தக்கூடும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
EPS இன் கீழ் ஓய்வூதியத்திற்கான கணக்கீடு சூத்திரம் = (மொத்த சேவை ஆண்டுகள் x சராசரி மாத சம்பளம்)/70.
இந்த உதாரணத்தின் படி, மாதாந்திர ஓய்வூதியம் = 21,000X 33/70 = ரூ 9,900 ஆக இருக்கும்.
ஓய்வுபெறும் போது உங்களின் அடிப்படை ஊதியம் அதிகமாக இருக்கலாம். ஆனால், இப்போது கேப்பிங் (வரம்பு) ரூ.15,000 ஆக இருப்பது போல, எதிர்காலத்தில் ரூ.21,000 அதிகபட்ச வரம்பாகக் கருதப்படும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
EPFO: தற்போதைய விதிகளின்படி அதிகபட்ச ஓய்வூதியம் என்ன?
முன்னர் கொடுத்த அதே உதாரணத்தின் படி, நீங்கள் 25 வயதில் வேலை செய்ய ஆரம்பித்து 58 வயதில் ஓய்வு பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதாவது உங்கள் சேவை காலம் 33 ஆண்டுகள். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அதிகபட்ச ஓய்வூதியம் 15,000 ரூபாயாகக் கருதப்படுகிறது.
மாதாந்திர ஓய்வூதியம் = ஓய்வூதியம் பெறக்கூடிய ஊதியம் x ஓய்வூதியம் பெறக்கூடிய சேவைக்காலம் / 70
மாதாந்திர ஓய்வூதியம் = ரூ.15,000X 33/70 = ரூ.7,071
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ