இலவச ரேஷன் திட்டம் புதுப்பிப்பு: இலவச ரேஷன் வாங்குபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. மத்திய அல்லது மாநில அரசின் இலவச ரேஷன் (Free Raion) வசதியை நீங்களும் பயன்படுத்திக் கொண்டு இருந்தால், இனி நீங்கள் இதனுடன் மற்றொரு பெரிய பலனைப் பெறவீரகள் என்று அரசு தரப்பில் (Central Government) அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தவகையில் அரசின் புதிய திட்டத்தின்படி, இனி வரும் காலங்களில் அந்த்யோதயா அட்டைதாரர்களுக்கு (antyodaya ration card) இலவச ரேஷன் உடன் இலவச சிகிச்சையும் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலவச சிகிச்சையின் பலன் கிடைக்கும்
இந்த நிலையில் அனைத்து அந்த்யோதயா அட்டைதாரர்களுக்கும் (antyodaya ration card) இலவச சிகிச்சை அளிக்க ஆயுஷ்மான் அட்டைகள் தயாரிக்கப்படும் என்று அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தற்போது அரசு தரப்பில் பெரிய அளவில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க | இந்த மாதம் 15 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை! இணையத்திலும் சேவைகள் கிடைக்காது!


மாவட்ட அளவில் பிரசாரம் நடக்கிறது
இந்த வசதி பல மையங்களில் அரசால் தற்போது செய்யப்பட்டு வருகிறது, இதில் ரேஷன் கார்டைக் காட்டி பொது வசதி மையத்தில் ஆயுஷ்மான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அந்த்யோதயா கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஆயுஷ்மான் கார்டுகள் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக யோகி அரசு தெரிவித்துள்ளது. இந்த பிரச்சாரம் மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது.


அரசாங்கத்தின் இந்த முடிவுக்குப் பிறகு, உங்கள் சிகிச்சையைப் பெற நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. தற்போது, ​​புதிய ஆயுஷ்மான் கார்டுகள் அரசால் தயாரிக்கப்படவில்லை, மாறாக ஏற்கனவே பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே கார்டுகள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


ஆயுஷ்மான் கார்டு என்றால் என்ன
ஆயுஷ்மான் பாரத் திட்டம் அல்லது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (PMJAY) என்பது ஆயுஷ்மான் பாரத் யோஜனா அட்டை மூலம் அவசர காலங்களில் அதன் பயனாளிகளுக்கு மருத்துவமனை செலவுகளுக்கு எதிராக நிதிப் பத்திரங்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும்.


2023 இறுதி வரை இலவச ரேஷன் கிடைக்கும்
இதனிடையே 2023 ஆம் ஆண்டின் இறுதி வரை இலவச ரேஷன் வழங்கப்படும் என்று முன்னதாக மத்திய அரசு அறிவித்தது. அரசின் இலவச ரேஷன் வசதியை கோடிக்கணக்கான மக்கள் தற்போது பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், பிபிஎல் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் டிசம்பர் 2023 ஆம் தேதி வரை இலவச ரேஷன் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இன்று முதல் இவர்களுக்கு அரிசி, கோதுமை நிறுத்தம்
இதற்கிடைகயில் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்காத பொதுமக்களின் ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் பொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. தற்போது ரேஷன் கார்டுடன் ஆதார் அணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்தி மக்கள் தங்களுடைய ரேஷன் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த கூடுதல் அவகாசத்திலும் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இணைக்காதவர்களுக்கு இன்று முதல் அரிசி, கோதுமை போன்ற எந்த ஒரு பொருளும் கிடைக்காது என்று எச்சரித்துள்ளது.


மேலும் படிக்க | தங்க நகைகளை வாங்கும்/விற்கும் முன்பு இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ