இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு ஜாக்பாட், இனி இந்த அசத்தல் பலன் கிடைக்கும்

Ration Card Update: அனைத்து அந்த்யோதயா அட்டைதாரர்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்க ஆயுஷ்மான் அட்டைகள் தயாரிக்கப்படும் என்று அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பெரிய அளவில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 16, 2023, 02:46 PM IST
  • ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஆயுஷ்மான் கார்டு.
  • சிகிச்சை இலவசமாக நடக்கும்.
இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு ஜாக்பாட், இனி இந்த அசத்தல் பலன் கிடைக்கும் title=

இலவச ரேஷன் திட்டத்தில் அப்டேட்: நீங்களும் மத்திய அல்லது மாநில அரசின் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பெற்றுக்கொண்டு ஜ வந்தால், உங்களுக்கு பெரிய பலன் கிடைக்கும். இது தொடர்பாக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசின் திட்டப்படி அந்த்யோதயா அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் உடன் இலவச சிகிச்சை அளிக்கப்படும். அதன்படி அனைத்து அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கும் இலவச சிகிச்சைக்காக ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்படும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக பெரிய அளவில் தற்போது பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட அளவில் பிரசாரம் நடப்பட்டு வருகிறது
இந்த வசதி பல மையங்களில் அரசால் செய்யப்பட்டு வருகிறது, இதில் ரேஷன் கார்டைக் காட்டி பொது வசதி மையத்தில் ஆயுஷ்மான் கார்டுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அந்த்யோதயா கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஆயுஷ்மான் கார்டுகள் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக யோகி அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த பிரச்சாரம் மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது.

மேலும் படிக்க | வந்தது புதிய விதி! இனி ஹெல்மெட் போட்டாலும் அபராதம் விழும்... எப்படி தெரியுமா?

ஏற்கனவே பெயரிடப்பட்டவர்களின் அட்டை தயாரிக்கப்படுகிறது
அரசாங்கத்தின் இந்த முடிவுக்குப் பிறகு, உங்கள் சிகிச்சையைப் பெற நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. தற்போது, ​​புதிய ஆயுஷ்மான் கார்டுகள் அரசால் தயாரிக்கப்படவில்லை, மாறாக ஏற்கனவே பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு கார்டுகள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த்யோதயா அட்டை யாருக்கு கிடைக்கும்?
அந்த்யோதயா ரேஷன் கார்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு (பிபிஎல்) வழங்கப்படுகிறது. இந்த அட்டையின் மூலம் பயனாளிகளுக்கு மாதந்தோறும் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்கும். கார்டுதாரர்களுக்கு மொத்தம் 35 கிலோ கோதுமை மற்றும் அரிசி வழங்கப்படுகிறது. இதற்கு கோதுமை கிலோவுக்கு ரூ.2ம், அரிசி கிலோவுக்கு ரூ.3ம் கொடுக்க வேண்டும்.

2023 இறுதி வரை இலவச ரேஷன் கிடைக்கும்
இதனிடையே 2023 ஆம் ஆண்டின் இறுதி வரை இலவச ரேஷன் வழங்கப்படும் என முன்னதாக மத்திய அரசு அறிவித்தது. அரசின் இலவச ரேஷன் வசதியை கோடிக்கணக்கான மக்கள் தற்போது பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், பிபிஎல் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் டிசம்பர் 2023 வரை இலவச ரேஷன் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | EPFO Alert: இதை செய்யாவிட்டால் உங்கள் இபிஎஃப் கணக்கு தானாக மூடப்படலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News