ரேஷன் கார்டு குறித்து முக்கிய அப்டேட் வெளியீடு: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு துள்ளி குதிக்கும் அளவிற்கு ஒரு பெரிய செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசு ஆரவார ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி இதன் கீழ் ரேஷன் கடைகளில் கூடுதலாக இரண்டு பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். ஆனால் இதற்கான அரசாணையை கூடிய விரைவில் அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டு கூடுதல் பொருட்கள் இலவசம்:
உண்மையில், சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் பயனாளிகளுக்கு இரண்டு கூடுதல் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவலை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது வழங்கினார். மேலும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க ஆயத்தம் செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் முதற்கட்டமாக கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். 


மேலும் படிக்க | சூப்பர் செய்தி!! இந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தின் பலன்கள்.. முன்மொழிவு அனுப்பப்பட்டது


100 ரூபாய் ரேஷன் கிட் வழங்க முடிவு:
மறுபுறம் மகாராஷ்டிரா மாநிலத்தில் தீபாவளி மற்றும் பிள்ளையார் சதுர்த்தி பூஜைக்கு முன், லட்சக்கணக்கான ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 100 ரூபாய் மதிப்பிலான ரேஷன் கிட் வழங்க முடிவு செய்துள்ளது, தற்போது இதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடம் தீபாவளிக்கு முன்னதாக மகாராஷ்டிரா அரசு பொதுமக்களுக்கு தீபாவளி பரிசுகளை வழங்கும். கடந்த ஆண்டும் தீபாவளிக்கு முன் இவர்களுக்கு ரூ.100 ரேஷன் கிட் வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த முறையும், கணபதி மற்றும் தீபாவளியை முன்னிட்டு, பயனாளிகளுக்கு ரூபாய் 100 மதிப்பிலான ரேஷன் கிட்கள் வழங்கப்படும். அரசு வழங்கும் ரேஷன் கிட்டில் 1 கிலோ பருப்பு தவிர, சமையலுக்கு தேவையான எண்ணெய், ரவை, சர்க்கரை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. மேலும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இதன் பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இரண்டு மாத ரேஷன் நன்மை:
அதே சமயம் இமாச்சலப் பிரதேசத்தில், பழங்குடியினப் பகுதி நுகர்வோரில் 20% பேர் ஆகஸ்ட் மாதத்தில் ரேஷன் பலனைப் பெறவில்லை. அத்தகைய நுகர்வோருக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பலன், செப்டம்பர் மாதத்துக்கான ரேஷனுடன் சேர்த்து வழங்கப்படும். ஆகஸ்ட் மாதம் மோசமான வானிலை காரணமாக, ரேஷன் கிடங்கிற்கு செல்ல முடியவில்லை. இதனால் பயனாளிகள் ரேஷன் பெற முடியவில்லை. எனவே இப்போது ஒதுக்கீடு குறைவின்றி, இந்த வசதி பயனாளிகளுக்கு கிடைக்கும், மேலும் இதில் பருப்பு, உப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட இதர ரேஷன்களும் வழங்கப்படும். இது தவிர, ரேஷன் கார்டு நுகர்வோருக்கான கேஒய்சிக்கான தேதியையும் ஹிமாச்சல் அரசு நீட்டித்துள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ரேஷன் ஆதார் லிங்க் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | 5 ஆண்டுகளில் அதிரடி லாபம் வேண்டுமா? இந்த 5 இடங்களில் முதலீடு செய்தால் போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ