Live Election Results 2024: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள், IND vs AUS டெஸ்ட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்

Live Election Results 2024: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள், இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் அப்டேட் உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 23, 2024, 09:21 PM IST
    Live Election Results 2024: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது. முன்னிலை நிலவரம் உள்ளிட்ட லேட்டஸ்ட் அப்டேட்டுகள்
Live Blog

Live Election Results 2024: Maharashtra and Jharkhand Updates INDIA vs NDA : Live Today Election Results மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பரபரப்பாக நடக்கிறது. ஓய்வூதியம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகள்

23 November, 2024

  • 17:57 PM

    அவதூறு கருத்துக்கு எதிராக ஏ ஆர் ரகுமான் நோட்டீஸ்

    தன்னை பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களும் கட்டுரைகளும் வீடியோக்களும் வெளியிட்ட சமூக வலைதளங்கள், youtube பதிவர்கள் மற்றும் வலைதள நிறுவனங்களுக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சார்பில் நோட்டீஸ்

  • 17:54 PM

    ஒட்டுமொத்த முடிவுகள் எதிர்பார்த்தபடி இல்லை' -சிவசேனாவின் (யுபிடி) ஆதித்யா தாக்கரே 

    மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் 2024: மும்பையின் வொர்லி தொகுதியை வெற்றி பெற்ற சிவசேனாவின் (UBT) ஆதித்யா தாக்கரே, வொர்லி தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாங்க எண்ணும் மையத்தை அடைந்தார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசும் போது, "இந்தத் தொகுதி மற்றும் மாநிலத்தில் உள்ள மற்ற இடங்களை வெல்ல எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த முடிவுகள் எதிர்பார்த்தபடி இல்லை. இதே மகாராஷ்டிரா மே மாதம் மக்களவைத் தேர்தலின் போது வித்தியாசமாக வாக்களித்தனர்" என்றார்.

  • 17:37 PM

    கேரளா வயநாடு தேர்தல் முடிவுகள் 2024: பிரியங்கா காந்தி வெற்றி

    கேரளாவின் வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியை காலி செய்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் கேரளா வயநாடு தொகுதியில் அவரது சகோதரி பிரியங்கா வேட்பாளராக களம் இறங்கினார். முதல் முறையாக தேர்தல் அவர் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 17:13 PM

    ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து 

    ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்கும் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளித்த ஜார்க்கண்ட் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். 

    "மக்கள் பிரச்சினைகளை எழுப்புவதிலும், மாநிலத்திற்காக உழைப்பதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம். மாநிலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியை வாழ்த்துகிறேன்" என்று தனது X தளத்தில் அவர் தெரிவித்துள்ளார். 

  • 17:12 PM

    மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் 2024: கட்சி வாரியான முன்னிலை பட்டியல்

    பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மகாராஷ்டிராவில் இந்திய கூட்டணிக்கு எதிராக வெற்றிபெற உள்ளது. 

    பாஜக+ : 229

    காங்கிரஸ்+ : 50

    சுயேச்கைகள்: 2

    மற்றவை: 7

  • 17:09 PM

    மகாராஷ்டிராவில் வெற்றி குறித்து பிரதமர் மோடி

    மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) செயல்திறன் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார், அவர், "என்டிஏவின் மக்கள் சார்பு முயற்சிகள் எல்லா இடங்களிலும் எதிரொலிக்கின்றன" என்றார். 

  • 17:06 PM

    சஞ்சய் ராவத்தின் ‘ஈவிஎம் மோசடி’ குற்றச்சாட்டுகளுக்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் பதில்

    மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பான சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ரவுத்தின் ‘EVM மோசடி’ குற்றச்சாட்டுகளுக்கு பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதிலளித்தார். மேலும் மக்கள் தங்கள் வார்த்தைகளையும் செயல்களையும் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.

    ஜார்க்கண்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வெற்றி பெற்றதை நான் ஒப்புக்கொள்கிறேன், அது மிகவும் நியாயமான முறையில் வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்ய முடியாத அளவுக்கு பாதுகாப்பாக இருந்தன. இதனால் ஜார்க்கண்டில் ஜனநாயகம் நிலவுகிறது எனட்ராஎன்றால், மறுபுறம், மகாராஷ்டிராவில் நாங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளோம் என்றால், ECI ஒரு சார்புடையதாகிவிட்டது என்று அவர்கள் சொன்னார்கள். இங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்கட்சியினர் கூறுகிறார்கள். இது எப்படி நியாமாக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார். 

  • 17:01 PM

    தேர்தல் முடிவுகள் 2024: எந்த சிவசேனா உண்மையான சேனா? ஏக்நாத் ஷிண்டே 

    மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் மகாயுதியின் அமோக வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே , யார் உண்மையான சிவசேனா மற்றும் என்சிபி என்று பதிலளித்தார். யார் உண்மையானவர்? யார் போலி? என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், பாலாசாகேப் தாக்கரேவின் கொள்கைகளுக்கு ஏற்ப மக்கள் சிவசேனாவைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று ஷிண்டே கூறினார்.

  • 15:21 PM

    தங்க மோதிரம்.. தவெக தலைவர் விஜய்

    தவெக மாநாட்டை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்த விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி, பாலாஜி மற்றும் நிகழ்ச்சி ஒப்பந்ததாரர் விஸ்வநாதன் ஆகியோருக்கு தங்க மோதிரம் வழங்கி கௌரவித்தார் விஜய்.

  • 15:18 PM

    ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் 2024: 

    ஜார்க்கண்டின் 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி 57 இடங்களிலும், என்டிஏ 24 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. ஜேஎம்எம் 33 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 17 இடங்களிலும், ஆர்ஜேடி (RJD) 5 இடங்களிலும், சிபிஐ (CPI(ML)(L) இரண்டிலும். தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 21 இடங்களிலும், AJSUP, LJP(RV), JD(U) ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன. ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா நிறுவனர் ஜெய்ராம் மஹதோ தும்ரி தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.

  • 15:14 PM

    கர்நாடக தேர்தல் முடிவுகள் 2024: சித்தராமையாவை பாராட்டிய டி.கே.சிவக்குமார்

    கர்நாடக இடைத்தேர்தல் வெற்றி குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், முதல்வர் சித்தராமையாவின் தலைமைக்கும், சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கான ஐந்து உத்தரவாதங்களையும் வழங்கினார்.

  • 14:40 PM

    ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள்: ஜேஎம்எம் தொண்டர்களுடன் கல்பனா சோரன் கொண்டாட்டம்

    ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் நிலையில், ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் கட்சி தொண்டர்களுடன் கொண்டாடினார்.

  • 14:36 PM

    நிச்சயமாக என் மகன் தான் அடுத்த முதல்வராக வருவார்

    நாக்பூர் தென்மேற்கு சட்டமன்றத் தொகுதியில் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் இருப்பதாகப தரவுகள் காட்டுகின்றன. இந்நிலையில் அவரது தாயார் சரிதா ஃபட்னாவிஸ், தனது மகன் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

  • 14:20 PM

    மகாராஷ்டிர மக்களுக்கு வாழ்த்துக்கள் -நிதின் கட்கரி

    மஹாயுதி மகத்தான வெற்றியை நெருங்கும் நிலையில் பாஜகவின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

  • 13:53 PM

    ஷிண்டே, பவார், ஃபட்னாவிஸ் ஆகியோருக்கு அமித் ஷா வாழ்த்து

    2024 சட்டமன்றத் தேர்தலில் மகாயுதி கூட்டணி அமோக வெற்றியை நெருங்கியுள்ள நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்தார்.

    மஹாயுதி கூட்டணி பெரும்பான்மையை தாண்டி, மதியம் 1:00 மணி நிலவரப்படி 200 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்தது. பாஜகவின் மும்பை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்கள் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். ஷிண்டே மற்றும் ஃபட்னாவிஸின் வீடுகளுக்கு இனிப்புகள் கொண்டு செல்லப்பட்டன.

  • 13:49 PM

    மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் 2024

    மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகிய இருவருடனும் மாலை 3 மணிக்கு வர்ஷாவில் செய்தியாளர்களை சந்திக்ககிறார். அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர நாரிமன் பாயின்ட்டில் உள்ள பாஜக அலுவலகத்தில் பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறும் கொண்டாட்டத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸ் கலந்து கொள்கிறார்.

  • 13:41 PM

    உ.பி.யில் 9 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வெற்றி அடையும் -உ.பி துணை முதல்வர் நம்பிக்கை

    உ.பி.யில் 8 இடங்களில் பாஜக வெற்றி பெறும்; மகாராஷ்டிராவில் பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது' என உ.பி துணை முதல்வர் பிரஜேஷ் பதக் கூறினார்

    உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக், இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது குறித்து நம்பிக்கை தெரிவித்ததோடு, மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளில் 8 இடங்களில் அக்கட்சி வெற்றி பெறும் என்றார். மேலும் மகாராஷ்டிராவில் பாஜக-கூட்டணி அமோக பெரும்பான்மையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும், பிரதமர் நரேந்திர மோடியின் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாகவும், அவர்கள் மகாயுத்திக்கு வாக்களித்துள்ளதாகவும் பிரஜேஷ் பதக் கூறினார்.

  • 12:47 PM

    மேற்கு வங்காள இடைத்தேர்தல் முடிவுகள் 2024: திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

    மேற்கு வங்க மாநிலம் சீதை தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) வேட்பாளர் சங்கீதா ராய் 1.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Trending News