எரிசக்தி மாற்றக் குழு: மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு, பெரும்பாலான வீடுகளுக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அநிதாவகையில் தற்போது கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய நல்ல செய்தி வெளியாக உள்ளது . எல்பிஜி சிலிண்டருக்கான மானியத்தை அரசு மீண்டும் தொடங்கலாம் என்று செய்திகள் வந்துள்ளன. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் எரிசக்தி மாற்றக் குழுவின் (Energy Transition Committee) அறிக்கையில், ஆண்டுதோறும் ஏழு முதல் எட்டு சிலிண்டர்களுக்கு மானியம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இது தொடர்பான அறிவிப்பை விரைவில் அரசாங்கம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

9.5 கோடி குடும்பங்களுக்கு எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
இந்த நிலையில் பிரபல நாளிதழ் ஒன்றில், எல்பிஜி சிலிண்டருக்கு மீண்டும் மானியம் வழங்குவது தொடர்பாக செய்தி ஒன்று வெளியானது, அத்துடன் மானியம் வழங்குவது குறித்து தற்போது அரசு மறுபரிசீலனை செய்யலாம் என்று கூறப்பட்டு இருந்தது. முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டில், 'பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம்' (Pradhan Mantri Ujjwala Yojana) பிரதமர் மோடி அரசால் தொடங்கப்பட்டது. அதன்பிறகு, செப்டம்பர் 2022 வரை, 9.5 கோடி குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டன. இன்று நாட்டில் 30 கோடி வீடுகளில் எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | அமேசானின் பம்பர் ஆஃபர்...! ரூ.7000க்கும் குறைவான விலையில் சாம்சங்க் மொபைல்


பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் என்றால் என்ன?
பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் பிரதமர் மோடியால் கடந்த 1 மே 2016 அன்று வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள (பிபிஎல்) குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு 50 மில்லியன் எல்பிஜி இணைப்புகளை விநியோகிக்க தொடங்கப்பட்டது. பிரதான் மந்தி உஜ்வாலா யோஜனா திட்டம் BPL நிலையில் வசிப்பவர்களுக்கு சுத்தமான எரிபொருள் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏழைகள் பொதுவாக தீங்கு விளைவிக்கும் கூறுகளைக் கொண்ட தூய்மையற்ற சமையல் எரிபொருளைப் பயன்படுத்துகிறார்கள். இந்தத் திட்டம் LPG ஐ மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


முன்னதாக 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது
இதனிடையே எல்பிஜியின் விலை அதிகமாக இருப்பதால், நாட்டில் உள்ள 85 சதவீத குடும்பங்கள் முழுமையாக சமையலுக்கு எல்பிஜியை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா காலத்திற்கு முன்பு, அரசு ஆண்டுதோறும் 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கியது. ஆனால் தற்போது எட்டு சிலிண்டர்களுக்கு எல்பிஜி மானியம் வழங்குவது குறித்து பேசப்படுகிறது. மானியம் வழங்கப்படும் எல்பிஜி சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம், அரசு வழங்கும் மொத்த மானியத் தொகை 13 முதல் 15 சதவீதம் வரை குறையும்.


ஒரு வீட்டில் சமைப்பதற்கு ஆண்டுக்கு எட்டு சிலிண்டர்கள் தேவை என்று நம்பப்படுகிறது. அந்த அறிக்கையில், பணக்காரர்கள் சார்பில் மானியத்தை முன்பு போல் விட்டுவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர, ஒரு குடும்பம் ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் பயன்படுத்தினால், நான்கு முதல் ஏழு சிலிண்டர்கள் எடுப்பவர்களை விட, அவர்களுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.


இதனிடையே இன்னுமும் நாட்டிலுள்ள நான்கில் மூன்று குடும்பங்களுக்கு எல்பிஜி இணைப்பு இல்லை. இந்த குடும்பங்களின் மாத வருமானமும் ரூ.10,000க்கும் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | IRDAI: கிரெடிட் கார்ட் புதிய விதிகள்! இனி இந்த சேவைக்கு பயன்படுத்த முடியாது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ