இனி கம்மி விலையில் காஸ் சிலிண்டர் - அரசு எடுத்த முக்கிய முடிவு!

LPG Price: அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் நாடு முழுவதும் புதிய எரிவாயு விலை நிர்ணய முறையை அறிமுகப்படுத்த உள்ளன. இது பொதுமக்களுக்கு நிம்மதியை அளிக்கும்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 14, 2023, 11:02 PM IST
இனி கம்மி விலையில் காஸ் சிலிண்டர் - அரசு எடுத்த முக்கிய முடிவு!  title=

LPG Price: நாடு முழுவதும் அதிகரித்து வரும் எரிவாயு விலையை குறைக்க அரசாங்கம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இப்போது அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் நாடு முழுவதும் புதிய எரிவாயு விலை நிர்ணய முறையை அறிமுகப்படுத்த உள்ளன. இது பொதுமக்களுக்கு நிம்மதியை அளிக்கும். இதனுடன் காஸ் விலையும் குறையும். நாட்டின் புதிய எரிவாயு விலை நிர்ணய முறையானது ஓஎன்ஜிசி மற்றும் இந்தியன் ஆயில் லிமிடெட் (ஓஐஎல்) போன்ற எரிவாயு நிறுவனங்களின் வருமானத்தைக் குறைக்கும்.

இதுகுறித்து எஸ்&பி ரேட்டிங்ஸ் வெள்ளிக்கிழமை தகவல் அளித்துள்ளது. இருப்பினும், புதிய விதிமுறைகள் கடினமான பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிவாயு விலையை பாதிக்காது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் இத்தகைய துறைகளில் செயல்படுகின்றன.

மேலும் படிக்க | Old Pension Scheme: ஓய்வூதியத் திட்டத்தில் பெரிய மாற்றம், ஊழியர்களுக்கு நிம்மதி

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி, அரசு இந்த புதிய வழிகாட்டுதல்களை அறிவித்தது. இதன் கீழ், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவின் விலையை மாதாந்திர அடிப்படையில் அரசாங்கம் நிர்ணயிக்கும். இந்த விகிதம் முந்தைய மாதத்தில் இந்திய கச்சா எண்ணெயின் விலையில் (இந்தியாவால் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் சராசரி விலை) 10 சதவீதமாக இருக்கும். 

அரசாங்கம் ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கு (அலகு) 4 அமெரிக்கா டாலர்கள் என்ற குறைந்த வரம்பையும், எரிவாயு விலைக்கு ஒரு யூனிட்டுக்கு 6.5 அமெரிக்க டாலர்கள் என்ற உச்ச வரம்பையும் நிர்ணயித்துள்ளது. S&P குளோபல் ரேட்டிங்கில் கடன் பகுப்பாய்வாளர் ஸ்ருதி ஜாடகியா கூறுகையில், "புதிய எரிவாயு விலை நிர்ணய விதிமுறைகள் விரைவான விலை திருத்தங்களை ஏற்படுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார். இதற்கு முன், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை விலை மதிப்பாய்வு செய்யப்பட்டது.

குறைந்த விலை வரம்பில் ஓஎன்ஜிசி அதன் எரிவாயு உற்பத்தியில் ஒரு யூனிட்டுக்கு குறைந்தபட்சம் 4 அமெரிக்க டாலர் விலையைப் பெற முடியும் என்று S&P ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சர்வதேச இயற்கை எரிவாயு விலை வரலாறு காணாத வகையில் குறைவாக இருந்தாலும் இதே விலைதான். அதேபோன்று, விலைகளின் உயர் வரம்பு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கான வருவாய் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். குறிப்பாக தற்போது அதிகரித்துள்ள விலைகளின் மத்தியிலும் இது காணப்படும்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்..ரயில்வே இந்த பெரிய முடிவை எடுக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News