அந்த்யோதயா ரேஷன் கார்டு: நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு மட்டுமல்லால், மாநில அரசுகளும் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இதில் உணவு தானியங்கள் மட்டுமல்லாமல் பல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தான் ரேஷன் கார்டு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் குடும்பத்துடன் வசித்து வருபவர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர் விபரங்களுடன் குடும்ப அட்டை அதாவது ரேஷன் கார்டு (Ration card) வழங்கப்படுகிறது. குடும்ப அட்டையானது இந்தியக் குடிமகனுக்கு மிக முக்கிய ஆவணமாகும். அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1995 அத்தியாவசியப் பொருள்களின் உற்பத்தி வழங்கல் விநியோகம் போன்றவற்றை நியாயமான முறையில் வழங்கிட மத்திய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. அதன்படி அனைவருக்கும் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இதன்மூலம் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை பெறுவதற்கு உணவுச் சீட்டாகவும், பிற அரசு திட்டங்களில் பங்கேற்க அடையாள அட்டையாகவும் பயனபடுகிறது. வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள், கீழ் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் இந்த அட்டைகள் வேறுபடுகின்றன.


இந்நிலையில் தற்போது இரண்டு நாட்களுக்கு முன்பு ரேஷன்கடை ஊழியர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவு வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.


மேலும் படிக்க | Pension Funds: நிம்மதியாக ஓய்வூதியம் பெற வேண்டுமா? அப்போ ‘இந்த’ திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்..


அந்தியோதயா ரேஷன் கார்டுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையாகும். இந்த அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) ரேஷன் கார்டுகள், அரசாங்கத்தால் அந்த்யோதயா குடும்பங்களாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன. அந்த்யோதயா அன்ன யோஜனா என்பது இந்திய அரசின் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் இலட்சக் கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு அதிக மானிய விலையில் உணவை வழங்குவதற்கான இந்திய அரசின் நிதியுதவித் திட்டமாகும். இத்திட்டம் 25 டிசம்பர் 2000 அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசினால் தொடங்கப்பட்டது. மேலும் இந்த திட்டமானது முதலில் இந்திய மாநிலமான ராஜஸ்தானில் செயல்படுத்தப்பட்டது.


அதுமட்டுமின்றி இந்த திட்டத்தின் மூலம் தலா ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாதமும் 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கபடுகிறது. அந்தவகையில், தமிழக ரேஷன் கடைகளிலும் முன்னுரிமையுள்ள, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரிசி வழங்கப்படுகிறது. 


அந்த வகையில் தற்போது அந்தியோதயா ரேஷன் கார்டுகளுக்கு மொத்தம் 18.61 லட்சமும், 95.66 லட்சம் முன்னுரிமை கார்டுகளும் உள்ளன. எனவே, மத்திய அரசு அரிசி, மாநில அரசு அரிசி என தனித்தனியாகப் பிரித்து ரசீது பதிவு செய்யப்படுகிறது. இதில் அந்தியோதயா பிரிவில் கார்டுக்கு மாதம் 35 கிலோ அரிசியும், முன்னுரிமை பிரிவு கார்டுதாரர்களுக்கு 5 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது.


இதனிடையே தற்போது மத்திய அரசு ரேஷன் கடைகளில் முன்னுரிமை, அந்தியோதயா கார்டில் உள்ள ஒவ்வொரு நபரின் விரல் ரேகையையும் பதிவு செய்து, ஆதார் வாயிலாக உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளது. இதில் தற்போது வரை 66 சதவீதம் பேரின் விவரங்கள் சரிபார்க்கப்படுகிறது. மீதியுள்ள பயனாளிகளின் விரல் ரேகை சரிப்பார்ப்பு வரும் 29ம் தேதிக்குள் முடிக்கு உத்தரவிட்டுள்ளது. அதனுடன் கைவிரல் ரேகை கருவியை வீட்டிற்கே எடுத்துச்செல்ல உத்தரடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Ration Card Name List: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. உடனே இதை சரிபார்க்கவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ