ரேஷன் கார்டுதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி, உடனே படியுங்கள்
Ration Card News: பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
ரேஷன் கார்டு சமீபத்திய செய்திகள்: நீங்கள் ரேஷன் கார்டில் அரசு வழங்கும் இலவச அல்லது மானிய ரேஷன் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு ரேஷன் கார்டு சரிபார்ப்பு பணி நீண்ட நாட்களாக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது பீகார மாநிலத்தில், அரசின் இலவச ரேஷன் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் தங்கள் ரேஷன் கார்டுகளை ஜாக்கிரதையாக எந்த பிரச்சனையும் சந்திக்காமல் இருப்பதற்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும்
இந்நிலையில் ரேஷன் கார்டுதாரர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டு மற்றும் ஆதாரை இணைக்குமாறு / லிங்க் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், உங்களின் ரேஷன் கார்டு முடக்கப்படும். பீகார் மாநிலத்தில் சுமார் 1.7 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் நாளந்தா மாவட்டத்தில் உள்ள 25 லட்சத்து 18 ஆயிரத்து 770 நுகர்வோரில் 20 லட்சத்து 97 ஆயிரத்து 825 நுகர்வோர் ரேஷன் கார்டுகளை ஆதார் கார்டுடன் தற்போது வரை இணைத்துள்ளனர். அதன்படி பீகார் மாநிலத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களில் மொத்தம் 80 சதவீத பேர் தங்களின் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைத்துள்ளனர்.
ரேஷன் பொருள் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்
இதுபோன்ற சூழ்நிலையில், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் இணைக்காத வாடிக்கையாளர்களின் ரேஷன் கார்டு போலி என கருதி முடக்கப்படும். அதன்பிறகு, இது தொடர்பான ரேஷன் கார்டு தரவுகள் கிடைக்காவிட்டால், அரசு தானியங்கள் வழங்குவதை நின்றுவிடும். தற்போது இது தொடர்பாக அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலகங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் ஒரு பிரச்சாரத்தை நடத்தி, ரேஷன் கார்டுதாரர்களின் ரேஷன் கார்டை ஆதாருடன் உடனடியாக இணைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
எப்படி இணைப்பது?
உங்களுடைய ரேஷன் கார்டை ஆன்லைன் மூலமாக ஆதாருடன் இணைக்கலாம்.
* அதற்கு uidai.gov.in என்ற வெப்சைட்டில் செல்லவும்.
* இப்போது 'Start Now' என்பதை கிளிக் செய்யவும்.
* அடுத்து உங்கள் முகவரி, மாவட்டம் போன்ற விவரங்களை நிரப்பவும்.
* இப்போது 'Ration Card Benefit' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* அதன் பிறகு ஆதார் நம்பர், ரேஷன் கார்டு நம்பர், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும்.
* பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP நம்பரை நிரப்பி submit கொடுக்க வேண்டும்.
நேரடையாக இணைக்க நீங்கள் ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் கார்டுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களை எடுத்துக் கொண்டு ரேஷன் கார்டு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு நற்செய்தி: 23 முதல் மெகா ஜாக்பாட்.. உடனே படியுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ