EPS உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: இனி அனைத்து வங்கிகளிலும் ஓய்வூதியம் பெறலாம்
EPFO Update: EPFO -வின் ஓய்வூதியத் திட்டமான EPS -இன் கீழ் உள்ள ஓய்வூதியம் பெறுவோர் ஜனவரி 2025 முதல் எந்த வங்கி அல்லது அதன் கிளையிலிருந்தும் ஓய்வூதியத்தைப் பெற முடியும்.
EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனமான EPFO மூலம் நிர்வகிக்கப்படும் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) பயனாளிகளுக்கு மத்திய அரசு மிக நல்ல செய்தி ஒன்றை அளித்துள்ளது. நாட்டின் பல்லாயிரக்கணக்கான ஓய்வூதியதாரர்களின் மிகப்பெரிய பிரச்சனை விரைவில் தீர்க்கப்பட உள்ளது. EPFO -வின் ஓய்வூதியத் திட்டமான EPS -இன் கீழ் உள்ள ஓய்வூதியம் பெறுவோர் ஜனவரி 2025 முதல் எந்த வங்கி அல்லது அதன் கிளையிலிருந்தும் ஓய்வூதியத்தைப் பெற முடியும் என்று தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை தெரிவித்தார். இது ஒரு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது.
தற்போதுள்ள முறைப்படி, ஓய்வூதியம் பெறுவோர், தங்களுடைய கணக்கு திறக்கப்பட்டுள்ள அதே வங்கி அல்லது கிளையில்தான் ஓய்வூதியத்தை வித்ட்ரா செய்ய முடியும். இது பெரும்பாலான ஓய்வூதியதாரர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்துகிறது. ஏனெனில் பணி ஓய்வுக்கு பிறகு பல ஓய்வூதியதாரர்கள் தங்கள் வீடு அல்லது ஊரை மாற்றி விடுவார்கள். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அவர்கள் ஓய்வூதியத்தை பெற கணக்கு திறக்கப்பட்டுள்ள அதே வங்கி அல்லது கிளைக்கு செல்ல வேண்டும்.
Centralized Pension Payment System
ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (இபிஎஸ்) 1995க்கான மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கட்டண முறைக்கான (சிபிபிஎஸ்) முன்மொழிவுக்கு மாண்டவியா ஒப்புதல் அளித்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. EPFO -இன் உச்ச நிர்ணயங்களை எடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) தலைவராகவும் அவர் இருக்கிறார். மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் செலுத்தும் முறையானது (CPPS), நாடு முழுவதும் உள்ள எந்த வங்கி அல்லது எந்த கிளை மூலமாகவும் ஓய்வூதியத்தை விநியோகிக்கும் செயல்முறைக்கு அனுமதி அளிக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை தீர்க்கப்படும்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) செயல்முறைகளின் நவீனமயமாக்கலை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது என்றும், அந்த திசையில் CPPS இன் ஒப்புதல் ஒரு மைல்கல் என்றும் அமைச்சர் கூறினார். இதன் கீழ், ஓய்வூதியம் பெறுவோர் (Pensioners) நாட்டிலுள்ள எந்த வங்கியிலும், எந்த கிளையிலும் தங்களுடைய ஓய்வூதியத்தைப் பெற முடியும். இம்முயற்சியின் மூலம் ஓய்வூதியதாரர்களின் நீண்டகாலப் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என நம்பப்படுகின்றது. இந்த அமைப்பு தடையற்ற மற்றும் திறமையான விநியோக முறையை உறுதி செய்யும்.
CPPS: 78 லட்சம் பேர் பயனடைவார்கள்
இபிஎஃப்ஓ அதன் உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் தேவைகளை சிறப்பாகச் பூர்த்தி செய்ய, வலுவான, தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பாக மாறும் முபைப்புடன் இருக்கிறது. CPPS அதை நோக்கிய ஒரு முக்கிய படியாக இருக்கும். மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் செலுத்தும் முறை மூலம் EPFO இன் 78 லட்சத்திற்கும் அதிகமான EPS-95 ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மையப்படுத்தப்பட்ட அமைப்பு, ஓய்வூதியம் செலுத்தும் ஆணையை (PPO) ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமின்றி, நாடு முழுவதும் தடையின்றி ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்கின்றது.
ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம்
பணி ஓய்வுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பும் ஓய்வூதியதாரர்களுக்கு CPPS பெரிய நிவாரணமாக இருக்கும். EPFO இன் தற்போதைய தகவல் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் திட்டத்தின் மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப சாதனத்தின் (CITES 2.01) ஒரு பகுதியாக இந்த வசதி ஜனவரி 1, 2025 முதல் தொடங்கப்படும். அடுத்த கட்டத்தில், CPPS, ஆதார் அடிப்படையிலான கட்டண முறைக்கு (ABPS) அடுத்த கட்ட மாற்றத்தைக் கொண்டுவரும்.
மேலும் படிக்க | EPF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: CPPS... ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அளித்த பெரிய பரிசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ