Pradhan Mantri Jan Arogya Yojana: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளியா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் 55 கோடி பயனாளிகளுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (NDA Government) பெரிய திட்டத்தை வகுத்து வருகிறது. பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (ஆயுஷ்மான் பாரத் யோஜனா) திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இது பயனாளிகளுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியாக வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தவிர, பெண்களுக்கான இந்த காப்பீடு ரூ.15 லட்சம் வரை இருக்கக்கூடும். இந்த திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் நான்கு லட்சம் படுக்கைகளை அதிகரிக்கும் திட்டமும் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், இந்த ஆட்சியில், பயனாளிகளின் எண்ணிக்கையை 55 கோடியில் இருந்து 100 கோடியாக உயர்த்துவதே மத்திய சுகாதார அமைச்சகத்தின் இலக்காக இருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


Ayushman Bharat: உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம்


அரசாங்க அதிகாரிகள் குழு (GoS) அடுத்த ஐந்தாண்டுகளுக்கான இலக்குகளையும் அவற்றை அடைவதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்துள்ளது. இந்த குழுவின் அறிக்கையில் முக்கியமான செயல் புள்ளிகளுக்கான பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், காப்பீடு, விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட ஒன்பது அமைச்சகங்களை உள்ளடக்கிய இத குழு, கூடிய விரைவில் அமைச்சரவை செயலாளரிடம் இதை விளக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் யோஜனா மத்திய அரசின் முக்கிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக உள்ளது. இது உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த திட்டத்தின் மூலம் 12.34 கோடி குடும்பங்கள் பயன் பெறுகின்றன


இந்த சுகாதார நலத்திட்டத்தின் கீழ், சுமார் 55 கோடி பயனாளிகளைக் கொண்ட 12.34 கோடி குடும்பங்கள் பயன் பெறுகின்றன. இந்த குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சுகாதாரப் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது. இந்தக் குடும்பங்கள் அனைத்தும் நாட்டின் மக்கள்தொகையில் அடிமட்ட 40% -ஐ சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இத்திட்டத்தின் கீழ், ஜூன் 30 வரை, 7.37 கோடி பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களது சிகிச்சைக்காக மொத்தம் ரூ.1 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் இந்த திட்டம் வெற்றி பெற்றதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் போது, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில், 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் அதன் கவரேஜ் விரிவுபடுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பெண்களுக்கான கவரேஜ் தொகை


பாஜகவின் 'உறுதிமொழி பத்திரத்தின்’ அடிப்படையில் பல்வேறு அரசு அதிகாரிகளின் குழுக்களுக்கு இலக்குகளை நிர்ணயிக்கும் பணி மற்றும் அதற்கேற்ப நேர வரம்புகளை அமைக்கும் பணி வழங்கப்பட்டது. 'அதிக அணுகல் மற்றும் பங்கேற்பு' என்ற கருப்பொருளின் கீழ் சுகாதார அமைச்சகத்தின் (Health Ministry) முக்கிய நடவடிக்கை அம்சங்களின்படி, ஒரு குடும்பத்திற்கு ஆண்டு காப்பீட்டு வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்துவது இலக்குகளில் ஒன்றாக உள்ளது. 


மேலும் படிக்க | NPS புதிய விதி, மகிழ்ச்சியில் ஊழியர்கள்: ஓய்வூதியத்தில் 40% ஏற்றம், முழு கணக்கீடு இதோ


இது தவிர அடுத்த ஐந்து ஆண்டுகளில், 'குறிப்பிட்ட நோய்கள் மற்றும் குறிப்பிட்ட சுகாதார நிலைமைகள்' ஏற்பட்டால், பெண்களுக்கு இந்த கவரேஜ் ரூ.15 லட்சமாக அதிகரிக்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்க்கின்றன.


ஆயுஷ்மான் கார்டு பெற்றவர்களில் 49% பேர் பெண்கள்


- ஆயுஷ்மான் பாரத் கார்டுகளைப் பெறுபவர்களில் சுமார் 49% பெண்களாக இருப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதி பெறுபவர்களில் 48% பேர் பெண்களாக இருப்பதாகவும் அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 


-இந்த புள்ளிவிவரங்கள் கடந்த ஆண்டு இறுதியில் சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. 


- இது தவிர பயனாளிகளின் எண்ணிக்கையை 100 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


- இது மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிகை படிப்படியாக 4 லட்சமாக உயர்த்தப்படும் என்வும் கூறப்பட்டுள்ளது. 


- தற்போது பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 7.22 லட்சம் தனியார் மருத்துவமனை படுக்கைகள் உள்ளன. 


- இதை 2026-27ல் 9.32 லட்சமாகவும், 2028-29ல் 11.12 லட்சமாகவும் அதிகரிக்க அமைச்சகத்தின் மூலம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


-இந்த அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவதற்குள், மலிவு விலை மருந்துகளை அளிக்கும் ஜன் ஔஷதி மையங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது. 


- இந்த மையங்களில் தரமான மருந்துகள் மலிவான விலையில் கிடைக்கும்.


மேலும் படிக்க | கிராஜுவிட்டி கணக்கீட்டில் நோட்டீஸ் பீரியடும் சேர்க்கப்படுமா? இதற்கான விதிகள் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ