Additional Pension For Pensioners: ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய உயர்வு தொடர்பான நல்ல செய்தி ஒன்று வந்துள்ளது. ஜனவரி 1, 2025 முதல் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய விதிகளில் பெரிய மாற்றம் வரவுள்ளது. இதனுடன் வயதுக்கு ஏற்ப ஓய்வூதிய உயர்வின் பலன் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்குமா என்ற கேள்வியும் ஓய்வூதியம் பெறுவோர் மத்தியில் அதிகமாக உள்ளது. ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் குறித்து வந்துள்ள பெரிய செய்திகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அப்டேட்


ஓய்வூதியம் என்பது அரசியல் சாசன உரிமை என்று கேரள உயர் நீதிமன்றத்தின் மிகப் பெரிய தீர்ப்பு வந்துள்ளது. ஓய்வூதியம் என்பது எந்த அரசாங்கத்தின் விருப்பத்தையும் சார்ந்தது அல்ல. ஓய்வூதியம் பெறுவோருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளின் விளைவு. நிதிச் சாக்குகளைக் கூறி அரசு அதைத் தடுக்க முடியாது என நீதிமன்றம் கண்டிப்பாக கூறியுள்ளது.


Life Certificate: வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்காத காரணத்தால் ஓய்வூதியத்தை நிறுத்தக்கூடாது


இதனுடன், வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்காத காரணத்தால் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்தக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. முதலில், வங்கி ஊழியர்கள் ஓய்வூதியதாரரின் வீட்டிற்குச் சென்று, ஓய்வூதியதாரர் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்காததற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.  ஓய்வூதியம் பெறுபவர் உயிருடன் இருந்தால், அவரது வாழ்க்கைச் சான்றிதழை அதே நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்காத காரணத்தால் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Employee Pension Scheme: ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டம்


EPS-95 ஓய்வூதியதாரர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO -வின் ஒரு முக்கிய ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஜனவரி 1, 2025 முதல், EPS 95 ஓய்வூதியதாரர்கள் நாட்டிலுள்ள எந்த வங்கியிலிருந்தும், எந்த கிளையிலிருந்தும் ஓய்வூதியம் பெறலாம். இபிஎஸ் 95 ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய வினியோக அமைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது ஓய்வூதிய முறை CPPS ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓய்வூதியம் பெறுவோர் இனி எந்த வங்கியிலிருந்தும், கிளையிலிருந்தும் ஓய்வூதியம் பெறலாம்.


Higher Pension: உயர் ஓய்வூதியம்


இதனுடன், இபிஎஸ் 95 ஓய்வூதியதாரர்களின் உயர் ஓய்வூதியம் குறித்தும் பெரிய செய்தி உள்ளது. மத்திய அரசு ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது, அதில் அனைத்து முதலாளிகள் / நிறுவனங்களும் ஓய்வூதியதாரர்களின் விண்ணப்பங்களை 31 ஜனவரி 2025க்குள் புதுப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க | வரி அடுக்கு முதல் TDS வரை... 2024ம் ஆண்டில் அமலுக்கு வந்த புதிய வருமான வரி விதிகள்


Penion: அடிப்படை ஊதியத்தில் 70% ஓய்வூதியம்


இந்திய ஓய்வூதியர் சங்கம், ஓய்வு பெற்ற பிறகு, ஓய்வூதியம் பெறுவோர் தாங்கள் கடைசியாக பெற்ற அடிப்படை சம்பளத்தில் 70% -ஐ ஓய்வூதியமாக பெற வேண்டும் என்று மத்திய அரசிடம் ஒரு பெரிய கோரிக்கையை முன்வைத்துள்ளது. தற்போது பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஓய்வூதிய முறையை சீர்திருத்த வேண்டிய நேரம் வந்துள்ளதாக இந்திய ஓய்வூதியர் சங்கம் தெரிவித்துள்ளது.


தற்போது பணியாளரின் ஓய்வுக்குப் பிறகு, அவருடைய கடைசி அடிப்படைச் சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இது மிகவும் குறைவு. இந்திய ஓய்வூதியர் சங்கத்தின் இந்தக் கோரிக்கை நியாயமானதாக கருதப்படுகின்றது. 


Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வயதுக்கு ஏற்ப ஓய்வூதிய உயர்வு


மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை வயதுக்கு ஏற்ப உயர்த்த வேண்டும் என்று 2023ல் நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC) பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின்படி, 65 வயதில் 5%, 70 வயதில் 10%, 75 வயதில் 15%, 80 வயதில் 20% என்ற வகையில் ஓய்வூதியத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இந்த பரிந்துரை இதுவரை அமல்படுத்தப்படவில்லை.


தற்போதைய விதியின்படி, 80 வயது முடிந்தவுடன் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை ஓய்வூதியம் 20% அதிகரிக்கப்படுகிறது, இந்த விதியை மாற்றுவதற்கான கோரிக்கை உள்ளது. இந்திய ஓய்வூதியர் சங்கம் 65 வயதில் இருந்து இந்த சலுகையை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. இதை நடைமுறைப்படுத்தினால், ஓய்வூதியதாரர்களுக்கு அது மிகப்பெரிய பரிசாக இருக்கும்.


மேலும் படிக்க | ஜனவரி 1 முதல் முக்கிய மாற்றங்கள்: எல்பிஜி சிலிண்டர், ஓய்வூதியம், FD விதிகள்.... முழு லிஸ்ட் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ