ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை: வாழ்வின் பல வித தேவைகளுக்காக வங்கிகளில் கடன் வாங்கி உள்ளவர்களுக்கு நல்ல செய்தி. வங்கிகள் மூலம் வட்டி உயர்த்தப்படுவதை குறித்து நீங்கள் கவலையில் இருந்தால், உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. இந்தச் செய்தி உங்களுக்கு நிம்மதியைத் தரும். 43வது நிதிக் கொள்கை மீளாய்வுக் கூட்டத்தில் (எம்பிசி கூட்டம்) இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அடிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ விகிதம் பழைய நிலையிலேயே தொடர்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, ஏப்ரல் மாதம் நடைபெற்ற எம்பிசி கூட்டத்தில், ரெப்போ விகிதம் 6.5 சதவீத அளவில் அப்படியே தக்கவைக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரெப்போ விகிதம் ஓராண்டில் இரண்டரை சதவீதம் அதிகரித்துள்ளது


நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் (எம்பிசி கூட்டத்தில்) எடுக்கப்பட்ட முடிவு குறித்த தகவலை அளித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ஒருமித்த கருத்துடன் ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகத் தக்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கி, மே 2022 முதல் ரெப்போ விகிதத்தை இரண்டரை சதவீதம் உயர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு 4 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் இம்முறை 6.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.


ரெப்போ விகிதம் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது


ரெப்போ விகிதம் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது இருந்து வருகிறது. அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதன் விளைவாக சில்லறை பணவீக்கம் 18 மாதங்களில் மிகக் குறைந்த அளவான 4.7 சதவீதமாக குறைந்துள்ளது. முன்னதாக மார்ச் மாதத்தில் இது 5.7 சதவீதமாக இருந்தது.


மேலும் படிக்க | ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! ஜூன் 10 முதல் ரயில்களில் பெரும் மாற்றம்


பங்குச் சந்தையின் நிலை


வியாழக்கிழமை காலை பங்குச்சந்தை சற்று சரிவுடன் தொடங்கியது. எம்பிசி முடிவுகளுக்கு முன்பே சந்தையில் ஒரு விதமான மந்தநிலை காணப்பட்டது. ஆனால், ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததை அடுத்து, பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது. காலை 10.20 மணியளவில் சென்செக்ஸ் 162.52 புள்ளிகள் உயர்ந்து 63,305.48 புள்ளிகளுடனும், நிஃப்டி 46.40 புள்ளிகள் உயர்ந்து 18,772.80 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வந்தன. 


யாருக்கு நிவாரணம் கிடைக்கும்?


ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாததால், வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் பலன் கிடைக்கும். இந்த அறிவிப்பு வந்த பின்னர், தற்போது, ​​எந்த வகையான கடனுக்கான வட்டி விகிதத்தையும் வங்கிகள் உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியிருந்தால், அதன் தாக்கம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடனில் தெரியும்.


ஏப்ரல் மாதம் நடந்த நடப்பு நிதியாண்டின் முதல் இருமாத நாணயக் கொள்கை மதிப்பாய்விலும் (எம்பிசி) ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் 6.5 சதவீதமாகவே தொடரும் என அப்போது அறிவிக்கப்பட்டது. 


ரெப்போ விகிதம் என்றால் என்ன?


வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன் விகிதம் ரெப்போ ரேட் எனப்படும். ரெப்போ விகிதம் அதிகரிக்கப்பட்டால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டியும் அதிகரிக்கும். இதன் விளைவாக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் கடன்களின் விகிதமும் உயர்த்தப்படும். இதன் தாக்கம் வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி விகிதங்களில் தெரியும். இது கடன் வாங்கியுள்ள வங்கி வாடிக்கையாளர்களின் இஎம்ஐ மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு அருமையான அறிவிப்பு... ஓய்வூதியம் வரம்பை குறைத்த மாநில அரசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ