ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்: ரிசர்வ் வங்கி மக்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் இருமாத நாணயக் கொள்கை மதிப்பாய்வில் (எம்பிசி) ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் 6.5 சதவீதமாகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருமாத நாணயக் கொள்கை மதிப்பாய்வின் அறிக்கையை வழங்கிய ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ், அமெரிக்காவில் வங்கி முடக்கங்கள் காரணமாக நிதி நெருக்கடி இன்னும் ஒரு பிரச்சினையாக உள்ளது என்று கூறினார். நாணயக் கொள்கைக் குழுவின் (எம்பிசி) மூன்று நாள் கூட்டத்தின் முடிவுகள் இன்று வந்தன.
ரெப்போ விகிதம் முந்தைய நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளது
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், “ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாகவே வைத்திருக்க பணவியல் கொள்கைக் குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது. பொருளாதாரத்தின் வளர்ச்சியைத் தொடர, ரெப்போ விகிதம் முந்தைய நிலையிலேயே தக்கவைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார். வங்கி மற்றும் என்பிஎஃப்சி நிதி அமைப்பு வலுவாக உள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது
2022-23ல் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. பணவீக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார். பணவீக்க விகிதம் அதிகரிக்காததால், மே 2022 முதல் தொடங்கப்பட்ட வட்டி விகிதத்தை அதிகரிக்கும் செயல்முறை நிறுத்தப்பட்டுள்ளது. மே 2022 முதல், மத்திய வங்கி ரெப்போ விகிதத்தை 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் ரெப்போ விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது இது நான்கு ஆண்டுகளில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெப்போ விகிதம் என்றால் என்ன?
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன் விகிதம் ரெப்போ ரேட் எனப்படும். ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதால், வங்கிகள் அதிக விகிதத்தில் ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற வேண்டிய சூழல் ஏற்படும். இது வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இது கடன் வாங்கியவர்களின் இஎம்ஐ-களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | DA Hike: அடுத்தடுத்து வரும் அகவிலைப்படி உயர்வு... இன்று வெளியாகும் அறிவிப்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ