EPS Pension: ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. எனினும், இன்னும் இது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. EPFO எடுக்கும் ஒரு முடிவால், லட்சக்கணக்கான இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) இபிஎஸ் 95 மூலம் பெரிய நிவாரணம் கிடைக்கக்கூடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

EPFO Board Meeting


EPFO இடம் 58,000 கோடி ரூபாய்க்கு உரிமை கோரப்படாத டெபாசிட்கள் உள்ளன. அதில் ஒரு பகுதியை EPS-95 ஓய்வூதிய நிதிக்கு மாற்றுவது குறித்து சனிக்கிழமை EPFO ​​வாரியக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். உரிமை கோரப்படாத தொகையில் ஒரு பகுதியை மாற்றி, அதன் மூலம் இபிஎஸ் 95 ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்களுக்கு அதிக ஓய்வூதியம் வழங்குவதே இதன் நோக்கமாகும்.


EPS 95 Pension Scheme: இப்போது உள்ள பங்களிப்பு எவ்வளவு?


தற்போது, ​​15,000 ரூபாய் வரை சம்பளம் (அடிப்படை ஊதியம் + DA) உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்கள், பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருகிறார்கள். சம்பளத்தில் 8.33 சதவிகிதம் EPS-95 ஓய்வூதிய நிதிக்கு செல்கிறது. அதாவது அதிகபட்சமாக மாதம் 1250 ரூபாய் டெபாசிட் செய்யலாம். EPFO படி, இதில் 68 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.


மேலும் படிக்க | EPFO: UAN இணைப்பதற்கான கடைசி தேதியை மேலும் சில நாட்களுக்கு நீட்டித்து அதிரடி உத்தரவு


பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் பணப் பரிமாற்றத் தொகை குறித்து சனிக்கிழமை முடிவு எடுக்கப்படும். அரசாங்கத்தின் 2015 வழிகாட்டுதல்களின்படி, கோரப்படாத வைப்புத் தொகையை மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்றலாம். ஆனால் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில், மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்றுவதற்கு EPFO ​​வாரியத்தில் எதிர்ப்பு இருந்தது.


இதுபோன்ற சூழ்நிலையில், இதை செய்வது சாத்தியமில்லை. ஆனால் இந்த முறை ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) உரிமை கோரப்படாத தொகையைப் பயன்படுத்தி அதிக ஓய்வூதியம் வழங்க வாரிய உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். பரிமாற்றத் தொகை குறித்து சனிக்கிழமை நடைபெறும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 EPS-95: இனி அதிக ஓய்வூதியம் கிடைக்கும்


- EPS-95 ஓய்வூதிய நிதி 95 கணக்கிற்கான பங்களிப்பு சம்பளத்தில் 8.33% ஆகும். 
- இருப்பினும், அதிகபட்ச ஓய்வூதிய ஊதியம் ரூ.15,000 மட்டுமே.
- இதன் காரணமாக, அதிகபட்ச ஓய்வூதிய பங்கு மாதம் 1250 ரூபாயாக உள்ளது.
- இதன் கீழ், குறைந்தபட்ச ஓய்வூதியம் 1000 ரூபாய் மற்றும் அதிகபட்சம் 7,500 ரூபாய் வழங்கப்படும். 
- ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்ட கூட்டத்தில், இந்த வரம்பை ரூ.15 ஆயிரமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டும்.
- இந்த வரம்பு உயர்த்தப்பட்டால், குறைந்தபட்ச ஓய்வூதியத்தின் பங்கும் அதிகரிக்கும்.


Employees Pension Scheme: பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டம்


தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை வருங்கால வைப்பு நிதிக்கு, அதாவது இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்கிறார்கள். வருங்கால வைப்பு நிதி (PF) ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) கட்டுப்படுத்தப்படுகிறது. இது தவிர, நிறுவனங்களும் 12 சதவீத பங்களிப்பை அளித்து, அந்தத் தொகையை EPFO-ல் டெபாசிட் செய்கின்றனர். நிறுவனம் வழங்கும் பங்களிப்பு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 8.33 சதவிகிதம் பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்திற்கும் 3.67 சதவிகிதம் இபிஎஃப் திட்டத்திற்கும் செல்கிறது.


Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்


2014 முதல், மத்திய அரசு இபிஎஸ்-95 ஓய்வூதிய நிதியின் கீழ் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக 1000 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை மாதம் 7500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதற்கு விரைவில் அரசு ஒரு தீர்வை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மேலும் படிக்க | Mutual Funds: 30% வருமானத்துடன் வரி சேமிப்பு பலன்கள்... டாப் 5 நிதியங்கள் இவை தான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ