கம்மி விலையில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி: வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையில் தற்போது மோடி அரசு இன்று மக்களுக்கு பெறும் நிவாரணம் வழங்கியுள்ளது. அதன்படி 200 ரூபாய் வீதம் எல்பிஜி சிலிண்டரின் விலையை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை சாமானியர்களுக்கு மிகுந்த நிம்மதியை அளிக்கும். அந்தவகையில் தலைநகர் டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1,103 ஆக இருந்தது. இந்த விலை 2020 மே மாதத்தை விட இரட்டிப்பாகும். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வெளியான புதிய விலை நிலவரத்தில் படி தற்போது டெல்லியில் 14.2 கிலோ கொண்ட எல்பிஜி சிலிண்டர் 200 ரூபாய் குறைந்துள்ள நிலையில் தற்போது ரூ.903 ஆக சிலிண்டர் விற்பனை செய்யப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேஸ் சிலிண்டர்:
இந்நிலையில், தற்போது வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்து, உஜ்வாலா பயனாளிகளுக்கு ரூ.400 மானியம் வழங்கி ஏழை, நடுத்தர மக்களுக்கு அரசு பரிசாக வழங்கியுள்ளது. இதற்கிடையில், ஆன்லைனில் கேஸ் சிலிண்டரை எவ்வாறு பதிவு செய்வது என்று உங்களுக்குத் தெரியுமா? உண்மையில், கேஸ் சிலிண்டரை ஆன்லைனில் முன்பதிவு செய்வதன் மூலமும் சில தள்ளுபடிகளை நீங்கள் பெறலாம். அதன் முழு விவரத்தை நாம் இங்கே விரிவாக காண்போம்.


மேலும் படிக்க | எல்பிஜி சிலிண்டரை இப்படி முன்பதிவு செய்தால்... அதிரடி தள்ளுபடி கிடைக்கும்


ஆன்லைனில் சிலிண்டரை எவ்வாறு புக் செய்வது:
உங்களிடம் பாரத் கேஸ் சிலிண்டர் இருந்தால், பாரத் கேஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய கேஸ் சிலிண்டருக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை சரிப்பார்க்கவும்.


- இதற்கு முதலில் பாரத் கேஸ் இணையதளத்தைப் பார்வையிடவும்
- 'Quick Book & Pay' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- கணக்கில் பதிவு செய்யப்பட்ட LPG ஐடி அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- கேப்ட்சாவை உள்ளிட்டு 'Continue' என்பதைக் கிளிக் செய்யவும்.
- கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்ய, அடுத்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்.


Paytm அப்ளிகேஷன் மூலம் கேஸ் சிலிண்டரை ஆன்லைனில் பதிவு செய்யுங்கள். பயன்பாட்டில் ஏதேனும் கூப்பன் அல்லது கேஷ்பேக் ரிவார்டு இருந்தால், அதையும் நீங்கள் பெறலாம்.
- Paytm பயன்பாட்டில் உள்நுழைக.
- 'ரீசார்ஜ் மற்றும் பில் பேமெண்ட்' என்கிற பக்கத்திற்கு செல்லவும்.
- 'புக் கேஸ் சிலிண்டர்' என்பதைக் கிளிக் செய்யவும்.
- 'புக் கேஸ் சிலிண்டர்' என்பதைத் தேர்ந்தெடுத்து, கேஸ் வழங்குநரைத் தேர்ந்தெடுக்கவும்.
- அடுத்து, LPG ஐடி அல்லது மொபைல் எண்ணை உள்ளிட்டு 'Proceed' என்பதைக் கிளிக் செய்யவும்.
- பயன்பாடு தானாகவே திரையில் தொகையைக் காண்பிக்கும்.
- கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்ய 'பணம்' என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது 'ஃபாஸ்ட் ஃபார்வர்டு' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- Fast Forward ஐப் பயன்படுத்தும்போது, ​​Paytm வாலட்டில் இருந்து தொகை நேரடியாகக் கழிக்கப்படும்.


எல்பிஜி கேஸ் விலை நிலவரம்: 
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இதுவரை வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் 1,118 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் 918 ரூபாய் ஆக குறையும். கொல்கத்தாவில் ரூ.1129 ஆக இருந்த வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்கப்பட்டு தற்போது ரூ.929 ஆக குறைந்துள்ளது. மும்பையில் இந்த சிலிண்டரின் விலை ரூ.1102.50 ஆக இருந்தது, புதிய விலைக்கு பிறகு ரூ.902.50 ஆக குறைந்துள்ளது.


உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 லட்சம் பெண்களுக்கு புதிய கேஸ் இணைப்புகள்:
இது தவிர, உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 லட்சம் பெண்களுக்கு புதிய கேஸ் இணைப்புகளை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவு, சாதாரண கேஸ் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவது மட்டுமின்றி, உஜ்வாலா பயனாளிகளுக்கும் ரூ.400 பலன் கிடைக்கும், ஏனெனில் உஜ்வாலா திட்டத்தின் கீழ், அவர்கள் ஏற்கனவே ரூ.200 மானியம் வழப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | புதிய எல்பிஜி கேஸ் இணைப்பு வேண்டுமா? இந்த ஆவணங்கள் இல்லாமல் பெற முடியாது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ