பழைய ஓய்வூதியத் திட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. தற்போது, ​​நாட்டின் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. அதிபடி இப்போது நீங்களும் பழைய ஓய்வூதியத்தைப் பயன்படுத்த விரும்பினால், உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. நீங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருக்க விரும்புகிறீர்களா அல்லது பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா என்பதை வரும் 60 நாட்களில் முடிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக, அரசால் எஸ்ஓபி வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழைய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
பழைய ஓய்வூதியத் திட்டத்தில், பணி ஓய்வு பெறும் போது, ​​சம்பளத்தில் பாதி, ஓய்வூதியமாக வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) வழங்கப்பட்டுகிறது. இத்திட்டத்தில், பணியாளர்கள் ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை பெறும் வசதி உள்ளது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு முறை அகவிலைப்படி அதிகரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் தொகை அரசின் கருவூலத்தில் இருந்து வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற ஊழியர் இறந்தால், விதிகளின்படி அவரது குடும்ப உறுப்பினர்கள் ஓய்வூதியத் தொகையைப் பெறுவார்கள். இத்திட்டத்தில், பணியாளரின் சம்பளத்தில் இருந்து எந்த தொகையும் பிடித்தம் செய்யப்படுவதில்லை.


மேலும் படிக்க | EPFO:58 வயதுக்கு முன்னரே பென்ஷன் வேண்டுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?


புதிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
புதிய ஓய்வூதிய திட்டத்தில் அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ-வில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. தேசிய ஓய்வூதியத் திட்டம் முற்றிலும் பங்குச் சந்தையின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில், 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற, என்பிஎஸ் நிதியில் 40 சதவீதத்தை முதலீடு செய்ய வேண்டும். அதாவது, ஊழியர்களுக்கு 60 சதவீத தொகையிலிருந்து ஓய்வூதியம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத்துக்கான உத்தரவாதம் இல்லை. உறவினர்களுக்கான எந்த வித வசதியும் இதில் செய்யப்படவில்லை. இதில் அகவிலைப்படி அதிகரிப்பதற்கான விதிமுறையும் இல்லை.


அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜனவரி 2004 முதல் தேசிய ஓய்வூதிய முறையை (என்பிஎஸ்) அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. என்பிஎஸ் என்பது பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டமாகும். மேலும் அதில் அகவிலைப்படி வழங்கப்படுவதற்கான எந்த வழிமுறையும் இல்லை.


அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு என்ன?
இந்த நிலையில் ஊழியர்களுக்கு 60 நாட்களுக்குள் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தற்போது அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே தற்போது இமாச்சலப் பிரதேச மாநில அரசின் பயனாளிகள் இந்த வசதியைப் பெறுகின்றனர். இந்த மாநில அரசு ஊழியர்கள் 2023 ஏப்ரல் 1 முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறுகிறார்கள். ஆனால், முன்னதாக ஓய்வு பெற்ற ஊழியர்களால், தங்களின் பழைய பணம் நிலுவைத் தொகையாக பெற முடியாது.


தற்போது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இமாச்சலப் பிரதேச அரசின் நிதித் துறை பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நிலையான செயல்பாட்டு நடைமுறையை (எஸ்ஓபி) வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தேர்வு செய்யவில்லை என்றால், நீங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறுவீர்கள்
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் எந்தவொரு பணியாளரும் தனது ஓய்வூதிய விருப்பத்தை தேர்வு செய்யவில்லை என்றால், அந்த நபர்கள் NPS இல் மட்டுமே வைக்கப்படுவார்கள். இதனுடன், OPS இல் உள்ள அனைத்து ஊழியர்களும் பொது வருங்கால வைப்பு நிதி மத்திய சேவை விதிகள் 1960 இன் கீழ் சேர்க்கப்படுவார்கள். மறுபுறம், பணியாளர் NPS ஐத் தேர்ந்தெடுத்தால், அவர்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி NPS இன் பங்கையும் டெபாசிட் செய்ய வேண்டும்.


பல மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது
இதற்கிடையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. இதற்குப் பிறகு, பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேச அரசுகளும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | EPFO மிகப்பெரிய அப்டேட்: அதிகரிக்கிறது குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ