EPS Pension: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு மிக நல்ல செய்தி. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஜனவரி 1 முதல் ஓய்வூதியம் பெறுவதற்கான விதிகளில் பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இனி, இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் (EPS Pensioners) நாட்டில் உள்ள எந்த வங்கியிலிருந்தும் தங்கள் ஓய்வூதியத் தொகையை பெற முடியும். இதை செய்ய அவர்களுக்கு கூடுதல் சரிபார்ப்பு எதுவும் தேவையிருக்காது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Centralized Pension Payment System


இபிஎஃப்ஓ மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு முறையை (CPPS) அமல்படுத்தியுள்ள நிலையில், இந்த புதிய விதியின் மூலம், ஓய்வூதியத் தொகையை திரும்பப் பெறுவதற்கான செயல்பாடு முற்றிலும் மாறும். இதனால் இனி ஓய்வூதியதாரர்களுக்கான செயல்முறை எளிதாகவும் வசதியாகவும் இருக்கும். 


CPPS செயல்படுத்தப்பட்ட பின்னர், ஓய்வூதியதாரர் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்குச் சென்றாலும், அல்லது வங்கி அல்லது கிளையை மாற்றினாலும், PPO எனப்படும் ஓய்வூதியம் செலுத்தும் உத்தரவை (Pension Payment Order) மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் நாடு முழுவதும் உள்ள எந்த வங்கிக் கிளையிலிருந்தும் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.


EPF Pension: இபிஎஸ் ஓய்வூதியம் என்றால் என்ன?


EPFO-ன் கீழ், தனியார் பணிகளில் இருக்கும் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) ஊழியர் ஓய்வூதியத் திட்டம்த்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஒரு ஊழியர் தனது பணி ஓய்வுக்கு பிறகு இந்த ஒய்வூதியத்தை பெறுகிறார். பணி ஓய்வுக்கு முன்னரும் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்படுகின்றது. ஊழியர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக இந்த ஓய்வூதியம் அரசால் வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் பரிசு: இனி ஊதியக்குழு இல்லை... சம்பள திருத்தத்திற்கு புதிய முறை


இபிஎஸ் ஓய்வூதியம் பெற தேவையான தகுதி என்ன?


இபிஎஸ்ஓய்வூதியம் பெற, பணியாளர்கள் EPFO ​​கீழ் பதிவு செய்து குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பங்களித்திருக்க வேண்டும். இதற்குப் பிறகு, பணியாளருக்கு 58 வயது முடிந்ததும், அவர் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குகிறார். இது தவிர, ஒரு ஊழியர் ஏதேனும் காரணத்தால் ஊனமுற்றாலோ, அல்லது அவரது வேலை பரிபோனாலோ, அவருக்கு நிபந்தனைகளின் படி ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.


Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணம்


இந்த புதிய மாற்றம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. இதனுடன் இனி ஓய்வூதியதாரர்கள் இனி ஓய்வூதியத் தொகையைப் பெறுவதில் எந்த சிக்கலையும் சந்திக்காத நிலை உருவாகும். அரசின் இந்த நடவடிக்கையானது EPF உறுப்பினர்களுக்கு பல வசதிகளை வழங்குவதோடு, அவர்களது நேரத்தையும் மிச்சப்படுத்தும் என்பதில் சந்தெகமில்லை.


CPPS: தற்போதுள்ள ஓய்வூதிய விநியோக செயல்முறையிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றம்


- புதிய முறை தற்போதுள்ள ஓய்வூதிய விநியோக செயல்முறையிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டிருக்கும். 
- தற்போதைய முறையில் EPFO ​​இன் அனைத்து பிராந்திய/பிராந்திய அலுவலகங்களும் 3-4 வங்கிகளுடன் மட்டுமே தனித்தனி ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், இது CPPS முறையில் மாறியுள்ளது.
- ஓய்வூதியம் பெறுபவர்கள் ஓய்வூதியம் தொடங்கும் நேரத்தில் சரிபார்ப்பு செயல்முறைகளுக்காக வங்கிக் கிளைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
- ஓய்வூதியம் வழங்கப்பட்டவுடன் அது உடனடியாக ஓய்வூதியதாரர்களின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | இன்று முதல் முக்கிய மாற்றங்கள்: ஓய்வூதியம், எல்பிஜி சிலிண்டர் முதல் UPI வரை... நோட் பண்ணுங்க மக்களே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ