8th Pay Commission: இந்த ஆண்டில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க செய்திகள் காத்திருக்கின்றன. இவற்றில் புதிய ஊதியக்குழு பற்றிய செய்திகளும் அடங்கும்.
8th Pay Commission: தற்போதுள்ள முறையின் படி, அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பள உயர்வு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பொறுத்தது. எனினும், இதில் மாற்றம் செய்யப்படும் என கூறப்படுகின்றது. இனி கையாளப்படும் மேம்படுத்தப்பட்ட சூத்திரம் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க உயர்வை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகின்றது. செயல்திறன் சார்ந்த சம்பள உயர்வு, அதாவது Performance Based Pay System என்று அழைக்கப்படும் புதிய முறையில், பணவீக்கம் மற்றும் ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் தீர்மானிக்கபப்படும். இந்த முறை அதிக லாபகரமானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இது முறையாக அமல்படுத்தப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புத்தாண்டு தொடங்கிவிட்டது. இந்த ஆண்டில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க செய்திகள் காத்திருக்கின்றன. இவற்றில் புதிய ஊதியக்குழு பற்றிய செய்திகளும் அடங்கும். ஊதிய கமிஷன் குறித்த சில சமீபத்திய தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
8வது ஊதியக்குழு மற்றும் அதன் மாற்று முறை குறித்து கடந்த சில வாரங்களாக அதிக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இதை பற்றிய தெளிவான கருத்து இன்னும் அரசாங்கத்தின் தரப்பிலிருந்து வரவில்லை.
இதுவரை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது அமலில் உள்ள 7வது ஊதியக்குழு 20214 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. 2026 ஆம் ஆண்டு அதன் அமல் காலம் முடிவடையும்.
2026 ஆம் ஆண்டுக்குள் அடுத்த ஊதியக்குழு, அதாவது 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் அமலுக்கு வரவேண்டும். எனினும், இப்போதைக்கு 8வது உதியக் குழுவை அமைக்கும் எண்ணம் இல்லை என்பதே மத்திய அரசின் சமீபத்திய நிலைப்பாடாக இருக்கின்றது. அப்படியென்றால், சம்பள திருத்தம் எப்படி நடைபெறும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுகின்றது.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமலுக்கு வரும் ஊதியக்குழுக்களுக்கு பதில், அரசு மாற்று முறையை கொண்டு வருமா? இதை பற்றி அரசு எதையும் தெரிவிக்கவில்லை. எனினும், மாற்று முறைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், ஊதிய திருத்தத்திற்கு புதிய சூத்திரம் பயன்படுத்தப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள முறையின் படி, அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பள உயர்வு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பொறுத்தது. எனினும், இதில் மாற்றம் செய்யப்படும் என கூறப்படுகின்றது. இனி கையாளப்படும் மேம்படுத்தப்பட்ட சூத்திரம் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க உயர்வை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகின்றது.
அய்க்ரியோட் ஃபார்முலாவை ஊதிய உயர்வு கணக்கீட்டிற்கு பயன்படுத்துவது பற்றி அரசாங்கம் இப்போது சிந்தித்து வருவதாக கூறப்படுகின்றது. இந்த புதிய ஃபார்முலா ஊழியர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படி மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும் என நம்பபடுகின்றது.
செயல்திறன் சார்ந்த சம்பள உயர்வு, அதாவது Performance Based Pay System என்று அழைக்கப்படும் புதிய முறையில், பணவீக்கம் மற்றும் ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் தீர்மானிக்கபப்படும். இந்த முறை அதிக லாபகரமானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இது முறையாக அமல்படுத்தப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதிய முறையின் கீழ், பணவீக்க விகிதம் மற்றும் ஊழியர்களின் செயல்திறன் ஆகிய இரண்டின் அடிப்படையில் அவர்களது சம்பளம் மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) தொடர்ந்து உயர்த்தப்படும். இது ஊழியர்களின் வாங்கும் திறனை மேம்படுத்தும். தனியார் துறை பணியாளர்களை போலவே, பணியாளர்கள் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் சம்பள உயர்வு பெறுவார்கள்.
தற்போதும் தர ஊதியத்திற்கு ஏற்ப சம்பளம் உயர்த்தப்படும் என எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், புதிய ஃபார்முலா அமலுக்கு வந்த பிறகு ஊதியம் உயர்த்தப்படும் அளவு அதிகரிக்கலாம். அரசுத் துறைகளில் தற்போது 14 பே கிரேடுகள் (Pay Grade) உள்ளன. ஊழியர் முதல் அதிகாரி வரை அனைவரும் அனைத்து பே கிரேடுகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது சம்பளத்தில் பெரிய மாற்றம் இருப்பதில்லை. புதிய ஃபார்முலா மூலம் அனைத்து பணியாளர்களுக்கும் சமமான பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி அரியர் தொகை அல்லது புதிய ஊதிய திருத்த முறைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.