National Pension System: என்பிஎஸ் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியமான புதுப்பிப்பு வந்துள்ளது. தேசிய ஓய்வூதிய அமைப்புக்கு (NPS) மத்திய அரசு ஊழியர்கள் செலுத்தும் பங்களிப்புகளை முறையாகக் கண்காணிப்பதை உறுதி செய்ய, அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளிலும் என்பிஎஸ் மேற்பார்வை அமைப்பு அமைக்கப்படும் என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை (DoPPW) தெரிவித்துள்ளது. இந்த மேற்பார்வை அமைப்பின் பணி என்னவாக இருக்கும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

NPS Monitoring Rule


பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் இது குறித்த ஒரு குறிப்பாணையை பகிர்ந்துள்ளது. NPS மேற்பார்வை பொறிமுறையின் கீழுள்ள NPS -க்கான கண்காணிப்பு விதி, பணியாளர் பங்களிப்புகள் சரியாக பராமரிக்கப்படுவதையும் நிர்வகிக்கப்படுவதையும் உறுதிசெய்ய, பல்வேறு அமைச்சகங்கள் ஆறுமாத அறிக்கைகளை DoPPW க்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | EPF கணக்கில் உள்ள தொகையை எடுப்பதற்கான விதிகளில் மாற்றம்: முழுமையான விவரம் இதோ


NPS கண்காணிப்பு பொறிமுறை, ஊழியர்களின் ஓய்வூதிய பங்களிப்புகள் சரியான நேரத்தில் அவர்களின் தனிப்பட்ட என்பிஎஸ் கணக்குகளில் (NPS Account) சரியாக வரவு வைக்கப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


"அனைத்து அமைச்சகங்கள்/துறைகளிலும் என்பிஎஸ் பங்களிப்புகளை (NPS Contributions) முறையாகக் கண்காணிப்பதை உறுதிசெய்யவும், என்பிஎஸ் -இன் கீழ் கவர் செய்யப்பட்டுள்ள ஊழியர்களின் தனிப்பட்ட கணக்குகளில் பங்களிப்புகள் தொடர்ந்து வரவு வைக்கப்படுவதை உறுதிசெய்யவும்,  DoPPW க்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிலை அறிக்கை அனுப்பப்படுவதை உறுதி செய்யவும் NPS மேற்பார்வை பொறிமுறை அமைக்கப்படும்." என்று குறிப்பாணை கூறுகிறது.


DoPPW உருவாக்கும் போர்ட்டல்


DoPPW இந்த அறிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தை விநியோகித்துள்ளது. மேலும், DoPPW வசதிக்காக ஒரு போர்ட்டலை உருவாக்கியது. "இந்தத் துறைக்கு போர்ட்டலைக் கையாளும் நோடல் அதிகாரிகளின் விவரங்களை வழங்கவும், மேலும் மேற்கூறிய போர்டல் மூலம் ஆறு மாத அறிக்கைகளை சமர்ப்பிக்கவும் கோரப்பட்டது. போர்ட்டலைக் கையாள்வதற்கான பயனர் கையேடும் வழங்கப்பட்டது."


50 -க்கும் மேற்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள், DoPPW மூலம் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ள நோடல் அதிகாரிகளின் விவரங்களை அளித்துள்ளதாக அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆறுமாத காலத்தில் 34 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இணையதளம் மூலம் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, ​​ஏப்ரல், 2024 முதல் செப்டம்பர், 2024 வரையிலான ஆறு மாத காலத்திற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. இப்படிப்பட்ட கண்காணிப்பு பொறிமுறை என்பிஎஸ் உறுப்பினர்களின் பங்களிப்புகள் சரியான முறையில் நிர்வகிக்கப்படுதை உறுதி செய்யும்.


மேலும் படிக்க | அம்மாடி... 92% ஊதிய உயர்வு கிடைக்குமா!! மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு, லேட்டஸ்ட் அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ