அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி!! NPS விதிகளில் PFRDA செய்த மாற்றம்!!
NPS Rules: PFRDA, அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) விதிகளில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.
NPS: ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டாளர் அமைப்பான PFRDA, அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) விதிகளில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. இப்போது இயல்புநிலை திட்டத்தின் (டீஃபால்ட் ஸ்கீம்) விருப்பம் ஊழியர்களின் NPS டயர் -2 கணக்குகளில் கிடைக்கும். இதன் மூலம், பணியாளர்கள் ஓய்வூதிய நிதி மேலாளர் (PFM) மற்றும் தங்கள் முதலீடுகளுக்கான சதவீத வருமான வரம்பை தேர்வு செய்ய முடியும். இது டயர்-2 கணக்கில் முதலீட்டு அபாயத்தைக் குறைத்து அதிக லாப வாய்ப்புகளை வழங்கும்.
இது தொடர்பான சுற்றறிக்கையை ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டாளர் அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஓய்வூதிய நிதி மேலாளர் கணக்கு வைத்திருப்பவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பங்களின்படி அவர்களின் நிதியை முதலீடு செய்வார். இயல்புநிலை திட்ட நிதியின் மேலாண்மை மூன்று ஓய்வூதிய நிதி மேலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தை, கார்ப்பரேட் கடன் மற்றும் அரசாங்கக் கடன் போன்ற பிற முதலீட்டு விருப்பங்களும் முன்பு போலவே டயர் -2 கணக்கில் கிடைக்கும்.
இதனால் கிடைக்கும் நன்மை என்ன?
இது வரை NPS Tier-1 கணக்கில் டீஃபால்ட் இயல்புநிலை திட்டத்தின் விருப்பம் இருந்தது. இதில், ஊழியர்களின் நிதியை PFM சார்பாக PFRDA நிர்வகிக்கிறது. இந்த வசதி டயர்-2 -இல் இல்லை. ஊழியர் அதை தானே நிர்வகிக்க வேண்டி இருந்தது. இது முதலீட்டு அபாயத்தை உருவாக்கியதாக சந்தை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
புதிய முறையில், நிதி முதலீடுகள் குறித்து அதிக புரிதல் இல்லாத முதலீட்டாளர்கள், டீஃபால்ட் திட்டத்தின் உதவியுடன் டயர்-2 கணக்குகளில் முதலீடு செய்ய முடியும். காலப்போக்கில் அவர்களின் புரிதல் அதிகரிக்கும் போது, அவர்களின் நிதி இலக்குகள் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனை பொறுத்து அவர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவில் மாற்றங்களைச் செய்யலாம்.
NPS என்றால் என்ன?
2004 ஜனவரியில் அரசு ஊழியர்களுக்காக NPS தொடங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில், இது தனியார் துறை மற்றும் சாதாரண குடிமக்களுக்கும் திறக்கப்பட்டது. இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை முதலீடு செய்யும் பொறுப்பு பதிவுசெய்யப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளர்களுக்கு PFRDA ஆல் வழங்கப்படுகிறது. அவர்கள் பணத்தை பங்குகள், அரசு பத்திரங்கள், பத்திரங்கள் மற்றும் அரசு அல்லாத மற்றும் நிலையான வருமான திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்.
மேலும் படிக்க | செப். 30ம் தேதிக்குள் ‘இந்த’ வேலைகளை முடிச்சுடுங்க... இல்லைன்னா சிக்கல் தான்!
டயர்-1 மற்றும் டயர்-2 கணக்குகளுக்கு இடையே உள்ள வேறுபாடு
என்பிஎஸ் திட்டத்தின் கீழ் இரண்டு வகையான கணக்குகளைத் திறக்கலாம். டயர்-1 கணக்கு ஓய்வூதியத்திற்கானது, டயர்-2 கணக்கு தன்னார்வ சேமிப்புக் கணக்கு போன்றது. ஏற்கனவே டயர்-1 கணக்கு இருந்தால் மட்டுமே டயர்-2 கணக்கை திறக்க முடியும். முந்தைய கணக்கில், அரசு ஊழியரின் பங்களிப்பு EPF பங்களிப்பு போல இருக்கும். ஆனால் மற்ற கணக்குகளில் வரம்பு இல்லை. டயர்-1 கணக்கில் வரி விலக்கு கிடைக்கும், ஆனால் டயர்-2 கணக்கில் இந்த விலக்கு கிடைக்காது. இருப்பினும், அரசு ஊழியர்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு டயர்-2 கணக்கில் வரி விலக்கு பெறலாம்.
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம்:
டயர்-1 கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. குழந்தைகளின் கல்வி, திருமணம், கடுமையான நோய்களுக்கான சிகிச்சை மற்றும் முதல் வீட்டைக் கட்டுவதற்கு கணக்கு தொடங்கி 10 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் பங்களிப்பில் 25% வரை நீங்கள் பணத்தை எடுக்கலாம். ஆனால் டயர்-2 கணக்கில் பணம் எடுப்பதில் எந்தத் தடையும் இல்லை. உறுப்பினர் எந்த நேரத்திலும் மொத்தத் தொகையையும் எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | EPF கணக்கில் புதிய மொபைல் எண்ணை இணைக்க வேண்டுமா? இதோ எளிய ஆன்லைன் செயல்முறை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ